search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230972"

    • தொண்டியில் பெண்களுக்கு வலை பின்னும் பயிற்சி வழங்கப்பட்டது.
    • வீட்டிலிருந்தபடியே பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி மையத்தில் நபார்டு வங்கியும், கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து நாட்டுப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் வலைகளான நண்டு வலை, முரல் வலை, செங்கனி வலை, நகரை வலை மற்றும் சலங்கை வலைகளை பின்னும் பயிற்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு நபார்டு வங்கியின் மாவட்ட மேலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். பயிற்சி வகுப்பினை கனரா வங்கியின் முதன்மை மேலாளர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    கனரா வங்கியின் விவசாய அலுவலர் சாமுவேல், அன்பாலயா தொண்டு நிறுவன நிறுவனர் சவேரியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு இயக்குநர் வெள்ளிமலர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    இதையொட்டி 30 பெண்க ளுக்கு 15 நாட்களுக்கு வலை பின்னும் பயிற்சியினை பயிற்றுனர் சந்தியாகு பிச்சை தொடங்கி வைத்தார். அப்போது சொந்தமாக வலை பின்ன கற்றுக்கொள்வதால் சொந்த உபயோகத்திற்கும், மற்ற மீனவர்களுக்கும் வழங்க முடியும். இதனால் வீட்டிலிருந்தபடியே பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சி முடிவில் விற்பனை மேலாளர் சதீஸ்குமார் நன்றி கூறினார்.

    ×