search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வணிகர்கள்"

    • நமது குப்பை நமது பொறுப்பு என்ற தலைப்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • மாநகரின் தூய்மைக்கான மக்கள் இயக்க பேரணியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி சார்பில் நமது குப்பை நமது பொறுப்பு என்ற தலைப்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்தில் கல்லுரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட மாநகரின் தூய்மைக்கான மக்கள் இயக்க பேரணியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், நகர் நல அதிகாரி நமச்சிவாயம் ,போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் ரவிச்சந்திரன், மருத்துவர் ராதிகா மைக்கேல், சமூக ஆர்வலர் முத்துக்குமார் உள்ளிட்டோர் மாணவர்களிடம் விழிப்பு ணர்வு உரையாற்றினர்.

    பின்னர் மாணவ -மாணவிகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மணிமண்டபம்வரை பேரணியாக சென்றனர். அப்போது வரும்வழிகளில் கிடந்த குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.

    இதைப்போல் பொதுமக்க ளும் வணிக ர்களும் நமது குப்பையை நாமே அகற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    • கஞ்சா ரவுடி கும்பல் கடைவீதியில் உள்ள ஒவ்வொரு கடையாக சென்று அரிவாளை காட்டி மிரட்டி வியாபாரிகளிடம் பணம் பறித்தனர்.
    • வணிகர் செந்தில்வேல் தாக்கப்பட்டதை கண்டித்தும், மிரட்டி பணம் பறித்ததை கண்டித்தும், சம்பந்தபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் கரந்தையில் 200-க்கும் மேற்ப்பட்ட கடைகளை வணிகர்கள் அடைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் கரந்தை கடைவீதியில் கடை வைத்துள்ளார். இவர் வர்த்தக சங்க பொரு ளாளராகவும் உள்ளார்.

    நேற்று மாலை இவரது கடைக்கு கஞ்சா, குடி போதையில் கும்பலாக சிலர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து பணம் கொடுக்குமாறு மிரட்டினர். ஆனால் அவர் பணம் கொடுக்க முடியாது என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் செந்தில்வேலை அரிவாளால் வெட்டி விட்டு பணத்தை பறித்து கொண்டு சென்றனர். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த செந்தில்வேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிசிக்சைக்காக மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கஞ்சா ரவுடி கும்பல் கடைவீதியில் உள்ள ஒவ்வொரு கடையாக சென்று அரிவாளை காட்டி மிரட்டி வியாபாரிகளிடம் பணம் பறித்தனர். இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (வயது 29), தினேஷ் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சிலரை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று வணிகர் செந்தில்வேல் தாக்கப்பட்டதை கண்டித்தும், மிரட்டி பணம் பறித்ததை கண்டித்தும், சம்பந்தபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் கரந்தையில் 200-க்கும் மேற்ப்பட்ட கடைகளை வணிகர்கள் அடைத்தனர்.

    இதையடுத்து வர்த்தக சங்க தலைவர் முருகானந்தம், செயலாளர் ரங்கராஜன் தலைமையில் ஏராளமான வியாபாரிகள் கடைவீதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரி க்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தகவல் அறிந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×