search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீனுராமசாமி"

    • நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • பிரதமர் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது தாயாரைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.


    நரேந்திர மோடி -ஹீராபென்

    இதற்கிடையே, குஜராத் வருகை தந்த பிரதமர் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது தாயாரைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் விரைவில் நலம் பெற பிரார்த்தித்து இயக்குனர் சீனுராம்சாமி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "இவ்வுலகில் உன்னதமானது தாயின் அன்பு. பாசத்தில் நிகரற்றது. எந்நேரமும் தாயின் கவலை பிள்ளையின் உணவு பற்றியது தான். மாண்புமிகு பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப பிரார்த்திக்கிறேன்.



    • இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நீர்ப்பறவை’.
    • இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

    இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நீர்ப்பறவை'. இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார். மேலும், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.


    நீர்ப்பறவை

    இந்நிலையில், இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் சீனுராமசாமி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "நீர்ப்பறவை பாகம் இரண்டு தொடங்கப்படும், நீர்ப்பறவை அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடுகட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைப்பெருமக்களுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.


    நீர்ப்பறவை

    சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படம் பல திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது.

    இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.


    மாமனிதன்

    இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்துள்ளது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 'மாமனிதன்' திரைப்படத்தை இயக்குனர் சீனுராமசாமியுடன் இணைந்து பார்த்துள்ளார்.


    மாமனிதன் திரைப்படம் பார்த்த எல். முருகன்

    இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம் மாமனிதன்..! இப்படத்துக்கு சர்வதேச விருதுகள் மற்றும் மக்கள் அளித்த வெற்றி என உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் இது போன்ற படைப்புகளை உருவாக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.



    • சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது.
    • சமீபத்தில் இதில் தனியார் ஊழியர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

    பருவ மழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவு பெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


    சீனுராமசாமி

    அண்மையில் இந்த பள்ளத்தில் தனியார் செய்தி நிறுவன ஊழியர் விழுந்து உயிரிழந்தார். தொடர்ந்து மாங்காட்டில் தனியார் நிறுவன ஊழியர் இதே போல் தவறி விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு தொடர் விபத்தால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், இந்த விபத்துகள் குறித்து இயக்குனர் சீனுராமசாமி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    சீனுராமசாமி

    அதில், "நகரத்தை சரி செய்து நெறிப்படுத்த வேண்டும். அது ஒரு சிகை தொழிலாளி முடித்திருந்தம் செய்வது போல ஒரு ஓரத்திலிருந்து பரவி வரவேண்டும். முழு நகரத்தையே தோண்டிப்போட்டால் பாதசாரி பயில்வானாக இருந்தாலும் தடுக்கி விழுவான்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இடம் பொருள் ஏவல்'.
    • இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது வெளியாக தயாராகி உள்ளது.

     

    இடம் பொருள் ஏவல்

    இடம் பொருள் ஏவல்

    இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தில் இடம்பெற்றுள்ள வைய்யம்பட்டி வல்லக்குட்டி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் சீனு ராமசாமி பதிவிட்டது, பறவைகள் எச்சந்தான் காடு எங்க பண்பாட்டில் காடேதான் வீடு என்று குறிப்பிட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்பு இடம் பொருள் ஏவல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது.

     

    இடம் பொருள் ஏவல்

    இடம் பொருள் ஏவல்

    இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஈரக்காற்றே வீசு என்ற பாடலின் புரோமோ வீடியோவை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியுள்ள இந்த பாடலின் புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

    • பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இதிலிருந்து ஜி.பி.முத்து தாமாக முன் வந்து வெளியேறினார்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.


    ஜி.பி.முத்து

    இது அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிக்பாஸ் 6-வது சீசனின் வெற்றியாளர் ஜி.பி.முத்து தான் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது அவர் வீட்டை விட்டு வெளியேறியது அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இருந்தும் ஜி.பி.முத்து வைல்டு கார்டு மூலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


    சீனுராமசாமி

    இந்நிலையில், போட்டியாளர் ஜி.பி.முத்து வெளியேறியது குறித்து இயக்குனர் சீனுராமசாமி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன், அதன் வருமானம் வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு தன் மகனுக்காக புகழ் வாய்ந்த சபையில் உலகறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் பிக்பாஸ் சீசன் ஆறிலிருந்து விடைபெற்ற தமிழ்மகன் ஜிபி முத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன்" என பதிவிட்டுள்ளார்.தற்போது பிக்பாஸ்  வீட்டினுள் 19 நபர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இடம் பொருள் ஏவல்’.
    • இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாக தயாராகி வருவதாக தகவல் வெளியானது.


    இடம் பொருள் ஏவல்

    இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தில் இடம்பெற்றுள்ள வைய்யம்பட்டி வல்லக்குட்டி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் சீனு ராமசாமி பதிவிட்டது, பறவைகள் எச்சந்தான் காடு எங்க பண்பாட்டில் காடேதான் வீடு என்று குறிப்பிட்டிருந்தார்.


    இடம் பொருள் ஏவல்

    இதைத்தொடர்ந்து சமீபத்தில் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் இடம் பொருள் ஏவல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'மாமனிதன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
    • இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    2007-ஆம் ஆண்டு வெளியான 'கூடல் நகர்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இதைத்தொடர்ந்து, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும், தனது இரண்டாவது படத்தில் தேசிய விருது வென்று சினிமாவில் தனக்கான இடத்தை பெற்றார்.


    சீனுராமசாமி

    இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான 'மாமனிதன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இயக்குனர் சீனுராமசாமி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பிறந்தநாள் பரிசாக அவரது மனைவி இவரின் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து நூலாக்கி கொடுத்துள்ளார். இதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல் எழுதியுள்ளார்.

    இது குறித்து சீனுராமசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் "அனைவருக்கும் அன்பான வணக்கம் எழுதுவது சீனுராமசாமி. எனக்கு ஆச்சர்ய பரிசு தர இது நாள்வரை நான் எழுதிய கவிதைகள் அத்துணையும் சேகரித்து எனக்குத் தெரியாமல் நூலாக்கி 'சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை' என அந்நூலுக்கு என் கவிதையையே தலைப்பிட்டு பிறந்தநாள் பரிசாக மனைவி தர்ஷணாவும் மகள்களும் தந்தனர்.


    சீனுராமசாமி

    இந்நூலுக்கு வாழ்த்துமடல் மாண்புமிகு நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு கணவனுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசு தருவதற்காக ஒரு மனைவி தொகுத்த கவிதை தொகுப்பிற்கு ஊக்கமளித்து பாராட்டி ஒரு கடிதம் தந்து வாழ்த்திய உங்கள் உயர்ந்த உள்ளம் பற்றி நினைப்பதா? அல்லது என் போன்ற கலைஞர்களுக்கு நீங்கள் தரும் இதயப்பூர்வமான அன்பை எண்ணி நெகிழ்வதா எனத் தெரியவில்லை.

    அய்யா? என்னால் இதை முதலில் நம்ப முடியவில்லை. முதல்வரின் கனிந்த இதயத்திற்கு முன் வணங்கி நிற்கிறேன். மேலும் அணிந்துரை தந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.. கவிஞரும் தன் பங்களிப்பாக ஆயிரம் மலர்களை சொற்களாக்கி சூடிவிட்டார்.


    சீனுராமசாமி பதிவு

    உங்கள் கருத்த கைகளை முத்தமிடுகிறேன் கவிஞரே.. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அம்மா எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரிய சீனாஜான்சன் என் வாழ்நாளில் சிறப்பான நினைவு பரிசினை தந்த உங்களுக்கு இதய நன்றிகள்.

    நூலினை வீட்டிற்கே வந்து வெளியிட்டவர் நடிகர் மோகன் அவர்கள் அதுவும் தீடீரென்று.. என் காதலுக்குரியவர் அவர் மோகன் சாருக்கு இதய நன்றிகள். ஆச்சர்யம் அதிர்ச்சியாயிற்று. திக்குமுக்காடிப்போனேன். வாழ்த்திய அனைவருக்கும் அன்பு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை வென்றது.
    • இவரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

    2007-ஆம் ஆண்டு வெளியான 'கூடல் நகர்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இதைத்தொடர்ந்து, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும், தனது இரண்டாவது படத்தில் தேசிய விருது வென்று சினிமாவில் தனக்கான இடத்தை பெற்றார்.


    சீனுராமசாமி

    இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான 'மாமனிதன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றது. இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் இயக்குனர் சீனுராமசாமிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    மாதம்பட்டி ரங்கராஜ்

    அந்த வகையில் 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், சீனுராமசாமிக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சீனுராமசாயின் அடுத்த படத்தில் தான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் 'மெஹந்தி சர்க்கஸ்' போலவே இப்படமும் ஒரு அழகான காதல் கதையாக இருக்கும் எனவும் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.   

    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிலர் இப்படம் குறித்த அவர்களின் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

    மணிரத்னம்

    மணிரத்னம்

     

    இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் குறித்து இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எல்லோரையும் குளித்து வரச்சொன்னாய் நந்தனை மட்டும் ஏன் தீக்குளித்து வரச்சொன்னாய் என்றார் கலைஞர். தன் மகனுக்கு நந்தன் என பெயரிட்டவர் மணிரத்னம் சார். பம்பாய், ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால் படங்களால் எதிர்ப்புகள் பார்த்தவர். ஜாதிக்கட்சியினர் சினிமாக்காரர்கள் அவரை சிறுமை செய்வது ஏன்? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

    • சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படம்ம் அமெரிக்க திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

    அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றாக கருதப்படும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கான சிறந்த படங்களாக 5 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. நவம்பர் 20-ந்தேதி விருது குறித்து அறிவிப்பை வெளியிடுகின்றனர்.

     

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதியும் காயத்ரியும் ஜோடியாக நடித்திருந்தனர். இதுகுறித்து இயக்குனர் சீனுராமசாமி கூறும்போது, ''அர்பா சர்வதேச திரைப்பட விழாவானது 25-வது ஆண்டாக நடக்கிறது. வெள்ளிவிழா ஆண்டில் நடக்கும் புகழ் பெற்ற இவ்விழாவில் திரையிடப்படும் ஐந்து படங்களில் ஒன்றாக விஜய்சேதுபதி நடித்து எனது இயக்கத்தில் வெளியான மாமனிதன் படம் திரையிட தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வு குழுவினருக்கு நன்றி'' என்றார்.


     


    மாமனிதன் 

    மாமனிதன் 

    ஏற்கனவே மாமனிதன் படம் டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த ஆசியப்படத்துக்கான தங்க பதக்கம் விருதையும் பூடான் நாட்டில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டு 4 விருதுகளையும் சிங்கப்பூர் பட விழாவில் திரையிடப்பட்டு 4 விருதுகளையும் பெற்றுள்ளது. மாமனிதன் சர்வதேச அளவில் விருதுகளை குவித்து வருவது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மாமனிதன்.
    • மாமனிதன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "மாமனிதன்".

    மாமனிதன்

    மாமனிதன்

     

     இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

     

    மாமனிதன்

    மாமனிதன்

    இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படம் டோக்கியோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய திரைப்படம் எனும் கோல்டன் விருதினை பெற்றிருந்தது.

      

     

    இந்நிலையில் மாமனிதன் திரைப்படம் 3 விருதுகளை குவித்துள்ளது. தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த நடிகருக்கான விருதையும், சிறந்த சாதனை விருதையும், விமர்சகர்கள் தேர்வு விருதையும் சேர்த்து மொத்தம் 3 விருதுகளை மாமனிதன் திரைப்படம் குவித்துள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். விருதுகளை குவித்து வரும் மாமனிதன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

     

    ×