search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231320"

    • நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • உலக வெறி நோய் தடுப்பு தினத்தையொட்டி

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு அரியலூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செல்ல பிராணிகளுக்கு நடந்த இலவச வெறி நோய் தடுப்பூசி முகாமினை கலெக்டர் ரமணசரஸ்வதி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3,850 வெறி நோய் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4,500 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடையே வெறி நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். நாய் கடித்தவுடன் உடனடியாக உரிய மருத்துவ ஆலோசனை பெறுதல், எக்காரணம் கொண்டும் சுய மருத்துவம் அல்லது நாட்டு மருத்துவ முறைகளை மேற்கொள்ளாதிருத்தல் ஆகியன வெறி நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான முதல் படியாக அமையும், என்றார். இதில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ஹமீது அலி, கால்நடை மருத்துவர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 1,459 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
    • தடுப்பூசி போடாத நபர்களை கண்ட றிந்து சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை

    தமிழகத்தில் சில இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனை கட்டுபடுத்தும் வகையில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி

    38-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று (25-ந் தேதி) காலை 7 மணி முதல் நடந்து வருகிறது.

    மதுரை மானவட்டத்தில் உள்ள வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் ஒட்டுமொத்தமாக 1,459 மையங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

    கிராமப்புற பகுதிகளில் 909 மையங்களிலும், நகர பகுதிகளில் 550 மையங்களிலும் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடக்கிறது.

    மதுரை மாவட்டத்தில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த 2 லட்சத்து 7 ஆயிரத்து 806 பேர் தகுதி பெற்று உள்ளனர். இவர்களில் 1லட்சத்து 4 ஆயிரத்து 803 பேர் ஊரக பகுதிகளிலும், 1 லட்சத்து 3 ஆயிரத்து 3 பேர் மாநகர பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

    அடுத்தபடியாக பூஸ்டர் தடுப்பூசி போட 11 லட்சத்து 54 ஆயிரத்து 113 பேர் தகுதி பெற்று உள்ளனர். அவர்களில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 630 பேர் கிராமப்புற பகுதிகளிலும், 5 லட்சத்து 67 ஆயிரத்து 483 பேர் மாநகர பகுதிகளிலும் வசிக்கின்றனர்.

    மேற்கண்ட அனைவரும் சிறப்பு முகாமுக்கு வந்து தடுப்பூசி போட்டு செல்லுமாறு மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் கேட்டு கொண்டுள்ளார்.

    மேலும் ரோட்டரி, லயன்ஸ் கிளப் மற்றும் தன்னார்வ, தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் பள்ளி- கல்லூரி என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்கள் ஒருங்கிணைந்து பொது மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, தடுப்பூசி போடாத நபர்களை கண்ட றிந்து சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
    • குமரி மாவட்டத்தில் தொடரும் சம்பவம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகள், 55 பேரூராட்சி கள் 4 நகராட்சிகள், ஒரு மாந கராட்சி உள்ளது. இங்கு சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு தற்போது அச்சுறுத்தலாக உள்ளது தெருநாய்கள். இவற்றின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. நாகர்கோவில் மாநகரை பொறுத்த மட்டில் வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் மற்றும் தெரு வீதிகளிலும் நாய்கள் சுற்றி திரிகின்றன.

    இவற்றை கட்டுப்படுத்த கருத்தடை ஆபரேசன்கள் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் நாய்களின் தொல்லை குறைந்த பாடில்லை. கிராமப்புறங்க ளிலும் நாய்களின் தொல்லை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    இந்த நாய்கள் தெருக்க ளில் செல்வோரை துரத்தி துரத்தி கடிக்கும் சம்பவங்கள் தினமும் நடந்து வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    நாய் கடிக்கு அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர மும் தடுப்பூசி செலுத்த ப்பட்டு வருகிறது. ஆனால் சமீபகாலமாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாய் கடிக்கு செலுத்தப்படும் தடுப்பூசி நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டிய நிலையில் உள்ளனர். மாவட்ட எல்லை பகுதியிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரை வந்து தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது இங்கும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி 7 நாட்கள் கழித்த பிறகு 2-வது தடுப்பூசி, 21 நாட்கள் கழித்த பிறகு 3-வது தடுப்பூசி என 7 தடுப்பூசிகள் நாய்க்கடிக்கு செலுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.

    ஆனால் இங்கு போதுமான தடுப்பூசி இல்லாத தால் பொதுமக்கள் தற்பொழுது பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நாய்க்கடி தடுப்பூசியை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் செலுத்த நடவடிக்கை எடுப்பதுடன் ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தங்கு தடை இன்றி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 1400 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் காலை 7 மணி முதல் இரவு 7மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • பூஸ்டர் தடுப்பூசி 15,862 பேருக்கு செலுத்தப்பட்டது. நேற்று நடந்த முகாமில் 19,237 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.நேற்று மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது . 1400 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் காலை 7 மணி முதல் இரவு 7மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    இதில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு அதிகமானோர் வந்திருந்தனர். முதல் டோஸ் தடுப்பூசியை 887 பேரும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 2488 பேரும் செலுத்தி இருந்தனர். பூஸ்டர் தடுப்பூசி 15,862 பேருக்கு செலுத்தப்பட்டது. நேற்று நடந்த முகாமில் 19,237 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் இன்னும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் இரண்டாவதுடோஸ் தடுப்பூசி செலுத்தாமலும் முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் குறிப்பிட்ட நாட்கள் கடந்த பிறகும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக பக்கத்தில் உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் நடைபெறுகிறது.
    • 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரில் 37-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)நடைபெறுகிறது.இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாநகரில் 37-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் நடைபெறுகிறது. திருப்பூா் மாநகரில் 12 வயது முதல் 14 வயது வரையிலான 31,778 சிறாா்கள், 15 முதல் 18 வயது வரையிலான 42,300 இளம் சிறாா்கள், 18 வயதுக்கு மேற்பட்ட 8,67,420 போ் என மொத்தம் 9,41,498 போ் உள்ளனா். இதில் தற்போது வரையில் 8,14,972 பேருக்கு முதல் தவணையும், 6,28,984 பேருக்கு இரண்டாவது தவணையும், 61,987 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

    மேலும், 1,26,526 பேருக்கு முதல் தவணையும், 1,85,988 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. ஆகவே, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாம் மூலமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில், இரு தவணை தடுப்பூசிகள் செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரம் நிறைவடைந்த நபா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை(பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. ஆகவே, திருப்பூா் மாநகரில் உள்ள அரசு மருத்துவமனைகள், நகா்ப்புற சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ெரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒரே நாளில் 21,878 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
    • 1,518 மையங்களில் நடந்தது

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் நேற்று நடந்த முகாமில் 984 பேர் முதல் தவணை, 6,506 பேர் 2ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 14,388 பேர் பூஸ்டர் தடுப்பூசி என மொத்தம் 21,878 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமில் செவிலியர் மற்றும் சுயஉதவிக்குழுவினர் தலா 480, ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் தலா 960 பேர் என மொத்தம் 2,880 பேர் பணியாற்றினர்.

    • பூஸ்டர் தடுப்பூசியை அதிகமானோர் போட்டுக்கொண்டனர்
    • தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்பணி மீண்டும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    தடுப்பூசி முகாம்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

    குமரி மாவட்டத்திலும் 1660 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் முதல் டோஸ் தடுப்பூசி 82 சதவீதம் மட்டுமே செலுத்தி உள்ளனர். 2-வது தவணை தடுப்பூசி 72 சதவீதம் பேர் செலுத்தி உள்ளனர். செலுத்தாதவர்கள் விவர ங்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் தீவிர படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் முதல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கழிந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு அதிகமான இளைஞர்கள், இளம்பெண்கள், வாலிப ர்கள் வந்திருந்தனர்.

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் மிக குறைவான நபர்களே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். முதல் டோஸ் தடுப்பூசி 39 பேரும், 2-வது தவணை தடுப்பூசி 140 பேரும், 3-வது தவணை தடுப்பூசி 1112 பேரும், 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஒருவரும், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் 9 பேர் என 1301 மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

    மேல்புறம் யூனியனில் அதிகபட்சமாக 2656 பேருக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 2319 பேர் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி உள்ளனர்.

    தோவாளை தாலுகாவில் குறைந்தபட்சமாக 1154 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் 949 பேர் பூஸ்டர் தடுப்பூசியும், 50 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 153 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த தடுப்பூசி முகாமில் 995 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 1880 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும், 14683 பேர் 3-வது தவணை தடுப்பூ சியும் செலுத்தியுள்ளனர்.

    15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 22 பேரும், 12 முதல் 14 வயது உட்பட்டவர்கள் 88 பேரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 17668 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இன்னும் அதிகமான நபர்கள் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளது தெரியவந்துள்ளது தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள சிறப்பு மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • 1459 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
    • 550 சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்கும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடந்தது.

    மதுரை மாவட்டத்தில் அனைத்து வாக்கு சாவடி மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி உள்பட 1459 இடங்களில் இன்று 36-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

    இதில் கிராமப்புற பகுதி களில் அமைக்கப்பட்ட 909 மையங்களில் 909 சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதேபோல் மாநகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 550 மையங்களில் 550 சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 1,459 மையங்களில் இந்த சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

    மதுரை மாவட்டத்தில் 2-ம் தவணையாக 2,34,937 பேருக்கு தடுப்பூசி போட வேண்டி உள்ளது. இதில் கிராமப்புற பகுதிகளில் 1,10,229 பேரும், மாநகர பகுதிகளில் 1,24,708 பேரும் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் 11,68,614 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டி உள்ளது. அவர்களில் 5,91,242 பேர் ஊரக பகுதிகளிலும், 5,77,372 பேர் மாநகர பகுதிகளிலும் உள்ளனர் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

    எனவே சுகாதார பணியாளர்களுடன் ரோட்டரி, லயன்ஸ் கிளப் மற்றும் தன்னார்வ தொண்டு பிரதிநிதிகள், பள்ளி-கல்லூரி என்.எஸ்.எஸ், என்.சி.சி மாண வர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, மாவட்ட நிர்வாகம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் கூறுகையில், பொதுமக்கள் அனைவரும் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட வேண்டும். கூட்டமான இடங்களில் சமூக இடைவெளி கடை பிடித்தல், முககவசம் அணிதல், பொது இடங்க ளுக்கு சென்று வீடு திரும்பிய பின் முறையாக கைகழுவுதல் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

    • பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
    • வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தமிழகத்தில் இருந்தால் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

    திருப்பூர் :

    செப்டம்பர் 30-ந்தேதி வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தாதவர் செலுத்திக் கொள்ள வசதியாக இன்று மற்றும் 11, 18, 25 ஆகிய தேதிகளில் மெகா முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துபவருக்கு முகாமில் முன்னுரிமை வழங்கப்படும். வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தற்போது தமிழகத்தில் இருந்தால், அவர்களுக்கு மீதித்தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.வெளிநாடு சென்று வந்தவர்களில் தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொள்ளாதவர் யாராவது உள்ளார்களா என கண்டறியப்பட்டு வருகிறது. அவர்களே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் வழியாகவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    • 1,611 மையங்களில் 31,365 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
    • 34-வது தடுப்பூசிமுகாம் நேற்று நடைபெற்றது.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் 34-வது தடுப்பூசிமுகாம் நேற்று நடைபெற்றது. 1,611 மையங்களில் 2,919 பேர் முதல் தவணை, 4,335 பேர் 2ம் தவணை, 24,111 பேர் பூஸ்டர் என மொத்தம் 31,365 தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் மக்கள் தொகை 8,53,600. இதில் 8,30,694 என 97.32 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளும், 3,066 பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். முகாமில் செவிலியர் மற்றும் சுயஉதவிக்குழுவினர் தலா 433 பேர், ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் தலா 866 பேர் என மொத்தம் 2,598 பேர் பணியாற்றினர்.

    • 1432 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
    • வரிசையாக நின்று, தடுப்பூசி போட்டு செல்வதை பார்க்க முடிந்தது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கொரோனா மீண்டும் பரவுகிறது. மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இருந்த போதிலும் நோய் தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. மதுரையில் நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாநகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் உள்ள 100-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றை தடுக்கும் வகையில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. அது இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி நடந்து வருகிறது.

    இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் இன்று 1432 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. 1600 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இரவு 7 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.

    மதுரை மாவட்டத்தில் முதல் டோஸ்- 87 சதவீதம் பேரும், 2-வது டோஸ்- 77 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். பூஸ்டர் டோஸ் ஆக 3 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது என்றார்.

    மதுரை மாவட்டத்தில் இன்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் கூட்டம் இல்லை. சில பகுதிகளில் 50-க்கும் மேற்பட்டோர் வரிசையாக நின்று, தடுப்பூசி போட்டு செல்வதை பார்க்க முடிந்தது.

    • கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    • தற்போது 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் இது வரை 57 லட்சத்து 65 ஆயிரத்து 918 டோஸ் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்து 7 ஆயிரத்து 75 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தபபட்டுள்ளது.

    75 நாட்களுக்கு மட்டும் அரசு மையங்களில் இலவச மாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் ஆர்வத்துடன் பூஸ்டர் தடுப்பூசியை போட்டு வருகிறார்கள்.

    தற்போது நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ×