search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231320"

    • மதுரையில் 3,415 மையங்களில் நடந்த தடுப்பூசி முகாம் நடந்தது.
    • 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

    மதுரை

    சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

    மதுரை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. பொதுமக்கள் நேரடியாக வந்து தடுப்பூசிகளை போட்டு சென்றனர்.

    வாக்குச்சாவடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் உள்பட 3415 மையங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.

    இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 415 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

    முதல் தவணை தடுப்பூசியை 86.5 சதவீதம் பேரும், 2-வது தவணையை 67 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டு உள்ளனர் என்றார்.

    • ஈரோடு மாவட்டத்தில் இன்று 3,194 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது
    • இன்று மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 4,260 ஊழியர்கள் பங்கேற்று வருகின்றனர்.இதற்காக 67 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மக்கள் நலனை முதன்மையாக கொண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மட்டும் 2-ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி க்கொண்டே முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் என மொத்தம் 3,194 மையங்களில் காலை 7 மணிக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    இதுபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஈரோடு பஸ் நிலையத்தில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர்.

    குறிப்பாக 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளா தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். மாலை 7 மணி வரை இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    இன்று மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 4,260 ஊழியர்கள் பங்கேற்று வருகின்றனர்.இதற்காக 67 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

    சேலம்;

    தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி தமிழகம் முழுவதும் இன்று காலை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது. இந்த முகாமில் பொதுமக்கள் 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 240 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது. ஊரகப்பகுதியில் 4 ஆயிரத்து 565 இடங்களிலும், சேலம் மாநகராட்சி பகுதியில் 675 இடங்களிலும் முகாம் நடத்தப்பட்டது.

    இந்த பணியில் 15 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபட்டனர். எனவே, இதுவரை தடுப்பூசி போடாதவர்களும், ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • அதிகரிக்கும் கொரோனா
    • 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

    நாகர்கோவில், ஜூன்.11-

    தமிழகம் முழுவதும் கொரோனா 4-வது அலை பரவத் தொடங்கி உள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளைசுகாதார துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


    கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் ஒரு சில பொதுமக்கள் இன்னும் முதல்டோஸ் தடுப்பூசியை செலுத்தாமல் உள்ளனர். இந்த நிலையில் குமரி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு பூஜ்ஜியத்தில் இருந்த நிலை யில் தற்போது பாதிப்பு அதிகமாகி வருகிறது.


    கடந்த சில நாட்களாக தினமும் குறைவான நபர்களே பாதிக்கப்பட்டி ருந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 9 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனா சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. 100 பேருக்கு சோதனை நடத்தப்பட்டால் அதில் இரண்டு பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.நேற்று 364 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது.


    இதில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குருந்தன்கோடு ஒன்றியத்தில் 3 பேருக்கும் கிள்ளியூர், திருவட்டார், தோவாளை தாலுகாக்களில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 79 ஆயிரத்து 952 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 6 மாதத்தில் மட்டும் 19 ஆயிரத்து 435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் என்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:-


    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 0.9 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த 9-ந்தேதி நிலவரப்படி 2.28 சதவீதமாக உயர்ந்துள் ளது. இது அடுத்த அலையை நோக்கி செல்வதை தெளி வாக உறுதிபடுத்துகிறது. 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வது கொரோனா மரணத்திற்கு எதிராக 97 சதவீத பாதுகாப்பையும், ஒருடோஸ் போட்டுக் கொள்வது 76 சதவீத பாதுகாப்பையும் வழங்கியுள்ளது.

    அதாவது தடுப்பூசி போடாதவர்கள் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நிலை யில் 200 பேர் மரணமடைகிறார்கள். அதுவே ஒரு டோஸ் போட்டுக்கொண்ட 10 ஆயிரம்பேர் பாதிக்கப்ப ட்டால் 72 பேர் மட்டுமே மரணமடைவார்கள்.

    மேலும் 2 டோஸ் போட்டுக் கொண்ட 10 ஆயிரம் பேரில் 6 பேர் மட்டுமே மரணமடைவர். இதன் மூலம் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது கொரோனா மர ணங்களை பெருமளவில் தவிர்க்க உதவியுள்ளது.

    குமரி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 571 குழுக்கள் மொத்தம் 2,284 இடங்களில் தடுப்பூசி போட உள்ளார்கள். முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


    அதேசமயம் சுகாதார பணியாளர்கள், அரசு துறைகளைச் சார்ந்த முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்ப ட்டவர்கள் முன்னெ ச்சரிக்கை தவணை தடு ப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். "தடுப்பூசி போடா தவர்களுக்கு கொரோனா ஒரு உயிர்க்கொல்லி நோய், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டால் அது ஒரு சாதாரண சளிக் காய்ச்சல்".

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    ×