search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசுரன்"

    • பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவங்கள் முதன் முதலாக தமிழில் படமாக்கப்படுகின்றன.
    • இந்த படத்தை உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார்.


    அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிகர் பாலமுருகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் "குதூகலம்". இப்படத்தில் கதாநாயகியாக அம்மு அபிராமி நடிக்கிறார். இவர்களுடன் கவிதாபாரதி, புகழ், பியான், சஞ்சீவி, அனிஸ், மன்மோகித், பிரேமி, தயாரிப்பாளர் எம்.சுகின்பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    திருப்பூர் பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாக்கப்படும் இப்படத்தை ரெட் & கேட் பிக்சர்ஸ் சார்பில் எம்.சுகின்பாபு முதல் படைப்பாக தயாரிக்கிறார். இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன்.


    பாலமுருகன்

    இவர், சிவகார்த்திகேயன் நடித்த 'காக்கிசட்டை', 'எதிர்நீச்சல்' படங்களில் துணை இயக்குனராகவும் தனுஷ் நடித்த 'கொடி', 'பட்டாசு' போன்ற படங்களில் இணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.

    "குதூகலம்" படத்திற்கு பியான் சர்ராவ் இசையமைத்துள்ளார். மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருப்பூரில் படமாக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    • பரதன் இயக்கத்தில் வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அம்மு அபிராமி.
    • இவர், நடித்த ‘ராட்சசன்’, ‘அசுரன்’ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பைரவா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அபிராமி. இவர் தொடர்ந்து நடித்த 'ராட்சசன்', 'அசுரன்' போன்ற படங்கள் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டார்.

    இதையடுத்து, இவர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'யானை' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியான நிலையில் அம்மு அபிராமி மாலை மலருக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.


    ×