search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231448"

    • பவானி அருகிலுள்ள சித்தோடு சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் கார் அவ்வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டது.
    • விபத்து குறித்து லாரி டிரைவர் கோபால் என்பவரிடம் சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சித்தோடு:

    சேலம் நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளாராக இருப்பவர் சுரேஷ் (50) . இவர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான காரில் சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்றார். காரை டிரைவர் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, கன்னிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பச்சியப்பன் (46) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    கார் பவானி அருகிலுள்ள சித்தோடு, நசியனூர் சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் நெடுஞ்சாலைத்துறை கார் டிரைவர் பச்சியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.‌ காரில் பயணம் செய்த சேலம் நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் சுரேஷ் (50) காயத்துடன் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று இறந்த பச்சியப்பன் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனைதொடர்ந்து விபத்து குறித்து லாரி டிரைவர் கோபால் என்பவரிடம் சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவருக்கு பதிலாக அவரது மகன் அஸ்வின் என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
    • இது குறித்து ஈரோடு சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு, ஜூன். 22-

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக தினகரன் (57) என்பவர் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    அந்த சமயம் அவருக்கு பதிலாக அவரது மகன் அஸ்வின் என்பவர் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

    அப்போது கவுந்தபாடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் சிகிச்சைக்கு வந்தார். மருத்துவர் எங்கே என்று கேட்டபோது தான் பவானி அரசு மருத்துவமனையின் மருத்துவர் என்று கூறி சிகிச்சை அளித்துள்ளார்.

    அதற்கு பின்னர் தான் சிகிச்சை அளித்த அஸ்வின் அரசு தலைமை மருத்துவர் தினகரன் மகன் என தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தலைமை மருத்துவர் தினகரன், பணியில் இல்லாத பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை சஸ்பெண்டு செய்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது.

    இந்நிலையில் கவுந்தப்பாடி சத்தி சாலையை சேர்ந்த கூலி தொழிலாளியான முருகேசன்(42) என்பவர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

    நான் வயிற்று வலி காரணமாக எனது நண்பர் உதவியுடன் கடந்த 19-ந் தேதி மாலை சுமார் 6.40 மணிக்கு கவுந்தப்பாடி அரசு மருத்துவ மனைக்கு சென்றேன். அங்கு தலைமை மருத்துவர் தினகரனுக்கு பதிலாக வேறொரு வாலிபர் இருந்தார்.

    அவரிடம் டாக்டர் எங்கே என கேட்டபோது, நான் தான் டாக்டர் எனவும், பவானி அரசு மருத்துவ மனை மருத்துவர் என கூறி எனக்கு வெளிநோயாளி சீட்டு பதிவு செய்யாமல் ஊசி செலுத்தி, சீட்டு ஏதும் இன்றி மாத்திரைகளை வழங்கினார்.

    இதையடுத்து அடுத்த நாள் எனக்கு மருத்துவம் பார்த்தது தலைமை மருத்துவர் தினகரனின் மகன் அஸ்வின் என்பதும், அவா் அரசு மருத்துவர் இல்லை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி தலைமை மருத்துவர் தினகரன், பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    ஆனால், போலியாக அரசு மருத்துவமனையில், மருத்துவர் என நம்ப வைத்து சிகிச்சை அளித்த அஸ்வின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தந்தைக்கு பதிலாக மருத்துவம் பார்த்த தலைமை மருத்துவரின் மகன் அஸ்வின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில் ஈரோடு சுகாதார துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் விசாரணையை முடித்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசிடம் புகார் அளிப்பார்கள். அதன் அடிப்படையில் அஸ்வின் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரியவருகிறது.

    தி.மு.க.-பா.ஜனதாவினர் மோதல் இரு தரப்பை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் 22-வது வார்டில் தி.மு.க. வார்டு செயலாளராக இருப்பவர் திருஞானம் (வயது 34).

    ரூ.3 ஆயிரம் உதவி தொகை

    இவர் தலைமையில் கடந்த வாரம் ஒரு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில் பிரதம மந்திரி அமைப்பு சாரா தொழிலாளர் திட்டத்தில் மாதம் ரூ.3 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் எனக்கூறி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அவற்றுடன் 300 ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பா.ஜனதா மண்டல செயலாளர் கார்த்திக் (28), தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல தலைவர் ராகுல் (20) இருவரும் விளக்கம் கேட்டனர். அதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே நேற்று இரு தரப்பினரும் மீண்டும் மோதிக்கொண்டனர். இதில் கார்த்திக், ராகுல் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து நேற்றிரவு பா.ஜனதாவினர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டவுன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

    3 பேர் மீது வழக்கு

    இது குறித்து விசாரணை நடத்திய கொண்டலாம்பட்டி போலீசார் தி.மு.க.வை சேர்ந்த திருஞானம், பா.ஜனதாவை சேர்ந்த ராகுல், கார்த்திக் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மல்லூர், ஆட்டையாம்பட்டியில் கந்து வட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவர் அந்த பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் மல்லூர் வாழ குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த பூபதி என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.

    ஆனால் அதற்கு வட்டியுடன் சேர்த்து 80 ஆயிரம் பணம் கட்டியதாக கூறப்படுகிறது. ஆனாலும் பூபதி மேலும் ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

    இதுகுறித்து மல்லூர் போலீசில் சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது கந்துவட்டி வழக்குப்பதிவு செய்து பூபதியை தேடி வருகிறார்கள்.

    இதேபோல ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சென்னகிரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது25). இவர் ஆட்டையாம்பட்டி ராசிபுரம் மெயின் ரோட்டில் வசித்து வரும் தண்டபாணி என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.15 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.

    இந்த நிலையில் ரூ.1 லட்சமாக திருப்பி கேட்டு தண்டபாணி மிரட்டுவதாக சுரேஷ்குமார் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார் .அதன்பேரில் தண்டபாணி மீது கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    ×