search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு"

    • ற்றுலா பயணிகள் பார்வையிடுவற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • ரூ.8 கோடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீன 2 படகுகள் வாங்கப்பட்டு பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி சட்ட மன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்ட பம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராள மான சுற்றுலா பயணி கள் வருவதால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக

    ரூ.8 கோடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீன 2 படகுகள் வாங்கப்பட்டு பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்தநிலையில் இந்த படகுகள் சுற்றுலா பயணி களுக்கு பயன்படுத்தப்ப டாமலேயே தி.மு.க. ஆட்சி யில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையை மாற்றி சுற்றுலா பயணிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டது என்ற காரணத்தினை கருத்தில் கொண்டு, தி.மு.க. அரசு படகுகளை இயக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை மிகவும் சிரமத்துக்கு ஆளாக்கி உள்ளது.

    சுற்றுலா பயணிகள் பயன்பெறும் விதத்தில் உடனடியாக நிறுத்தி வைக்கப்ப ட்டுள்ள 2அதிநவீன படகு களையும் உடனடியாக இயக்கிட வேண்டும். கன்னியாகுமரி சுற்றுலா வளர்ச்சி அடை வதற்கு இந்த படகு சேவை ஒரு மைல் கல்லாக அமையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • படகு குழாமில் இருந்து தினமும் 3 படகுகள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படுகின்றன
    • 2 அதி நவீன சொகுசு படகுகள் வாங்கப்பட்டு இதுவரை அந்த படகுகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலின் நடுவில் விவோனந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக படகு குழாமில் இருந்து தினமும் 3 படகுகள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படுகின்றன.

    விவேகானந்தர் மண்டப படகு தளத்தில் தற்போது ஒரு படகு மட்டுமே நிறுத்த முடியும். இங்கு கூடுதல் படகுகளை நிறுத்துவதற்காக ரூ.20 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இன்று பகல் சென்னை பொதுப்பணித்துறை முதன்மை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மணிவாசன் தலைமையில் அதிகாரிகள் குழு, விவேகானந்தர் மண்டப படகு தளத்தில் ஆய்வு மேற்கொண்டது.

    தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அருணாசலம், செயற்பொறியாளர்கள் வெள்ளைச்சாமி, சுஜாதா மற்றும் பலர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். விவேகானந்தர் மண்டபத்திற்கு 3 படகுகள் இயக்க ப்பட்டு வரும் நிலையில் மேலும் 2 அதி நவீன சொகுசு படகுகள் வாங்கப்பட்டு இதுவரை அந்த படகுகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடலோர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகளை கடல்நீர் சூழ்ந்தது.
    • படகில் உள்ள மீன்பிடி உபகரண பொருட்களை நீரில் தத்தளித்தபடி சென்று எடுத்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி மீனவர் காலனி பகுதியிலிருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடி தொழிலுக்கு மீனவர்கள் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் சில தினங்களாக நிலவி வந்த புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.இந்நிலையில் திடீரென கடல் சீற்றம் அதிகரித்து கடல் நீர் மீனவ கிராமத்திற்குள் உட்புகுந்துள்ளது.

    மேலும் கடலோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகளை சுற்றியும் கடல் நீர் சூழ்ந்துள்ளது.

    மீனவர்கள் ஏற்கனவே நங்கூரமிட்டு கட்டப்பட்ட படங்களை மேலும் தற்பொழுது கடல் நீரில் அடித்து செல்லாத அளவிற்கு பாதுகாப்பாக கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பாக படகில் உள்ள மீன் பிடி உபகரண பொருட்களையும் இடுப்பளவு நீரில் தத்தளித்தபடி சென்று எடுத்து வருகின்றனர்.

    மேலும் இது போன்ற இயற்கை சீற்றங்களின் பொழுது கடல் நீர் உப்புகாமல் தடுக்க நிரந்தரமாக தடுப்பு அணை அமைத்து, பாலம் அமைத்து தரவேண்டும் விழுந்தமாவடி மீனவ காலனி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பரிவேட்டை திருவிழாவையொட்டி நடவடிக்கை
    • பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிகடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துஉள்ளது.

    இவற்றை தினமும் கன்னியாகுமரிக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டுகளித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி இந்த படகு போக்குவரத்து நடந்து வருகிறது.

    தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் திருவிழாவான வருகிற 5-ந்தேதிகாலை 11.30 மணிக்கு பகவதி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்காக ஊர்வல மாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த பரிவேட்டை திருவிழா வில் சுற்றுலாப்ப யணிகள், விவேகானந்த கேந்திரா மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஊழியர்களும்பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக அன்று பகல் 12 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

    இந்த தகவலை கன்னியா குமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் செல்லப்பா தெரிவித்து உள்ளார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை திருவிழா நடைபெறும். வருகிற 5-ந்தேதி அன்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நிறுத்துவதால் அன்றைய தினம் பகல் 12 மணி முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபமும் மூடப்படும் என்று விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

    • சின்னபிள்ளை என்பவருக்கு சொந்தமான குடிசை வீடும், படகும் கொள்ளிடம் ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
    • நாதல்படுகை கிராமத்துக்கு செல்லும் சாலை பெரும்பகுதி தண்ணீர் வேகத்தால் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து இல்லாத அளவுக்கு மாறி விட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல் படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ள மணல் ஆகிய திட்டு கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமானதால் தண்ணீரில் மூழ்கின.

    இதனால் கிராமங்களில் இருந்தவர்கள் வெளியே கொண்டு வரப்பட்டு நான்கு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் தண்ணீர் ஆறு நாட்களுக்குப் பிறகு வடிய ஆரம்பித்தவுடன் மீண்டும் முகாம்களில் இருந்து கிராம மக்கள் குடியிருப்புகளை நோக்கி திரும்பினர்.

    திரும்பிச் சென்று வீடுகளை பார்த்த பொழுது பல குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

    சின்னபிள்ளை என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு கொள்ளிடம் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

    அவருக்கு சொ ந்தமான படகும் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

    நாதல்படுகை கிராமம் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு கொள்ளிடம் ஆற்றுக்குள் சென்று விட்டது.

    மேலும் கரை அருகாமையில் உள்ள சில குடிசை வீடுகளை அகற்றும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆற்றுநீர் கிராமத்துக்குள் புகுந்து அதிவேகமாகச் சென்றதால் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையிலிருந்து நாதல்ப டுகை கிராமத்துக்கு செல்லும் சாலை பெரும்பகுதி தண்ணீர் வேகத்தால் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து

    இல்லாத அளவுக்கு மாற்றி விட்டது. எனவே சாலையை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தோட்ட பயிர் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

    கடந்த பத்தாண்டு கால வரலாற்றில் 45 நாட்களில் 3 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இந்த வருடம் மட்டுமே என்றும் இதனால் இந்த வருடம் மட்டும் 100 மீட்டர் தூரத்துக்கு நாவல் படுகை கிராமம் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

    கடந்த 10 ஆண்டு காலத்தில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • சின்னமுட்டம்துறைமுகத்தில் இருந்து கடல்வழியாகபடகு துறைக்கு கொண்டு வரப்பட்டது
    • திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன் படுத்தப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தற்போது திருவள்ளுவர் சிலையில் ரசாயனக் கலவைபூசி பராமரிப்பதற்காக இரும்பு பைப் கம்பிகளால் சாரம் கட்டும் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு மட்டும் தற்போது படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் விவேகானந்தா படகு கடலில் ஓடுவதற்கான காலக்கெடு முடிந்து விட்டதால் அதனை கரையேற்றி ரூ.25 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து விவே கானந்தா படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகுத் துறையில் இருந்து கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த விவேகானந்தா படகு கரையேற்றப்பட்டு ரூ. 25 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடந்தது.

    இந்த சீரமைப்பு பணியில் சென்னையை ேசர்ந்த என்ஜினீயர் குமார் தலைமையில் 15 பேர் கொண்ட பொறியியல் வல்லுநர் குழுவினர் ஈடுபட்டனர். இந்த படகு பராமரிக்கும் பணி 2 மாத காலம் நடந்தது. இந்த படகு பராமரிப்பு பணி முடிவடைந்ததை ெதாடர்ந்து விவேகானந்தா படகு நேற்று புதுப்பொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு சின்னமுட்டத்தில் இருந்து கடல் வழியாக கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விவேகானந்தா படகு விரைவில் வெள்ளோட்டம் விடப்படுகிறது. அதன் பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்ட பம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணி களை ஏற்றி செல்ல பயன் படுத்தப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அலையாத்திகாடுகள் நிறைந்த லகூன் அருகே உள்ள மேல கடைசித்தீவு பகுதி கடலில் படகில் நின்றவாறு வலையை வீசினார்.
    • இதனைக்கண்ட சக மீனவர்கள் அவரை மீட்டு இடும்பாவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் ஊராட்சி கீழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து மகன் சேகர் (வயது 54).

    மீனவரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் சேகர் நேற்று முனாங்காடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து அப்பகுதி மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க படகில் சென்றார்.

    அப்பொழுது அலையாத்திகாடுகள் நிறைந்த லகூன் அருகே உள்ள மேல கடைசித்தீவு பகுதி கடலில் படகில் நின்றவாறு வலையை வீசினார்.

    அப்போது சேகர் திடீரென்று தடுமாறி விழுந்து நீரில் மூழ்கினார்.

    இதனைக்கண்ட சக மீனவர்கள் அவரை மீட்டு இடும்பாவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்து வர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து, மகன் தினேஷ் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் பலியான சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    சின்னமுட்டம் துறைமுகத்தில் கரையேற்றி பழுது பார்க்கும் பணி தீவிரம்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுஉள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்தநிலையில்தற்போது திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவைபூசி பராமரிப்பதற்காக இரும்பு பைப் கம்பிகளால் சாரம் கட்டும் ஆரம்பக்கட்டபணிகள் நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு மட்டும் தற்போது படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் விவேகானந்தா படகு கடலில் ஓடுவதற்கான காலக்கெடு முடிந்து விட்டதால் அதனை கரையேற்றிரூ.25 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து விவேகானந்தா படகு கன்னியாகுமரியில்உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் இருந்து கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு அந்த விவேகானந்தா படகு கரையேற்றப்பட்டு ரூ. 25 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த படகு பராமரிக்கும் பணி முடிவடைவதற்கு இன்னும் 2மாத காலம் ஆகலாம் என்று தெரிகிறது.

    இந்த படகு பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு விவேகானந்தா படகு புதுபொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்படும். அதன் பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படுகிறது.

    • துறைமுக நுழைவு வாயிலில் மணல் திட்டு அடிக்கடி ஏற்படுவதால், படகுகள் விபத்தில் சிக்கி வருகின்றன
    • சைமன் வந்த பைபர் படகு எதிர்பாராதவிதமாக மணல் திட்டில் தட்டியதோடு துறைமுக தடுப்புச் சுவரிலும் மோதி யது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் கருங்கல் அருகே தேங்காப் பட்டணம் துறைமுகம் உள்ளது. இங்கிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றன.

    இந்த துறைமுக நுழைவு வாயிலில் மணல் திட்டு அடிக்கடி ஏற்படுவதால், படகுகள் விபத்தில் சிக்கி வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணல் திட்டில் தட்டி, துறைமுக தடுப்பு சுவரில் மோதியதில் ஒரு பைபர் படகு சேதமடைந்தது.

    நேற்றும் ஒரு பைபர் படகு இதுபோல் விபத்தில் சிக்கி கடலில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் மணல் திட்டை அகற்ற வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை ஒரு பைபர் படகு இதுபோல விபத்தில் சிக்கியதில் மீனவர் ஒருவர் பலியாகி உள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-

    பூத்துைற 19-வது அந்தி யம் பகுதியைச் சேர்ந்தவர் சைமன் (வயது 48), மீனவர். இவர் இன்று அதிகாலை ஒரு பைபர் படகில் 4 பேருடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். மீன் பிடித்து விட்டு காலை 7.30 மணியளவில் அவர்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காற்றின் வேகமும் அலையின் சீற்றமும் அதிகமாக இருந்தது.

    அந்த நேரத்தில் சைமன் வந்த பைபர் படகு எதிர்பாராதவிதமாக மணல் திட்டில் தட்டியதோடு துறைமுக தடுப்புச் சுவரிலும் மோதி யது. இதனால் நிலை தடுமாறிய படகு கடலில் கவிழ்ந்தது.

    இந்த சம்பவத்தில் கடலில் தவறி விழுந்த சைமன், வலைக்குள் சிக்கிக் கொண்டார். இதனால் நீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை சக மீனவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பலியான சைமனுக்கு, சொர்ணம் என்ற மனை வியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.

    • குறைந்த தூரத்திற்கு பைபர் படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் டன் கணக்கில் மத்தி மீன்கள் சிக்கியது.
    • சுமார் 5 டன் மீன்களும் கிலோ ரூ. 190-க்கு ஏலம் போனது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுதுறையில் 400-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் 58 விசைப்படகுகள் உள்ளன.கடந்த மூன்று நாட்களாக கடலின் உள்பகுதியில் சுழல் காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனால் குறைந்த தூரத்திற்கு பைபர் படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் டன் கணக்கில் மத்தி மீன்கள் சிக்கியது. இதையடுத்து கரை திரும்பிய மீனவர்கள் மத்தி மீன்களை கேரளா, சென்னை, திருச்சி ,பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு ஏற்றுமதி செய்தனர். வழக்கமாக மத்தி மீன்கள் 40 முதல் 120 வரையில் விலை போகும். ஆனால் சுமார் 5 டன் மீன்களும் கிலோ ரூ.190- க்கு ஏலம் போனது. அதிக அளவில் மத்தி மீன்கள் கிடைத்தாலும் அதற்கு நல்ல விலை கிடைத்ததாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்து பெண் பலியானார்.
    • ராசுகுட்டி மற்றும் கணேசன் நீந்தி கரை தப்பினர்.

    கடலூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அனுமந்தபுரம் நாதல்படுகை பகுதியை சேர்ந்தவர் கணேசன். அவரது மனைவி காந்திமதி. இந்த தம்பதி மகன் ராசுகுட்டி. இவர்கள் கீழகுண்டல பாடி கொள்ளிடம் ஆற்று கரையோரம் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது கொள்ளிடம் ஆற்றில் திடீரென வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. உடனே சிறிய நாட்டுப் படகில் ஆற்றை கடக்க முயற்சித்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் தோணி ஆற்றில் கவிழ்ந்தது. இதில் ராசுகுட்டி மற்றும் கணேசன் நீந்தி கரை தப்பினர். ஆனால் காந்திமதி நீரில் மூழ்கினார். உடனடியாக அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டு சிகிச்சையில் இருந்த காந்திமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மே ற்கொண்டு வருகின்றனர்.

    • இன்று குளச்சல், முட்டம் மண்டைக்காடு, குறும்பனை உள்ளிட்ட கடல் பகுதிகளில் சூரை காற்றுடன் மழை பெய்வதோடு கடல் சீற்றமாகவே காணப்பட்டது.
    • குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் 3000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் தங்கள் படகுகளை கரையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

    குளச்சல், ஜூன்.30-

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 3000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது தமிழகத்தில் நிலவி வரும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மீனவர்கள் வரும் மூன்று நாட்களுக்கு லட்சதீவு மற்றும் கேரளா கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியது.

    இந்த நிலையில் இன்று குளச்சல், முட்டம் மண்டைக்காடு, குறும்பனை உள்ளிட்ட கடல் பகுதிகளில் சூரை காற்றுடன் மழை பெய்வதோடு கடல் சீற்றமாகவே காணப்படு வதால் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் 3000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் தங்கள் படகுகளை கரையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

    ×