search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி"

    • கோடை விடுமுறைக்கு பிறகு அரசு பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன.
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கி வருகிறது.

    இதற்காக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தில் இருந்து பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

    அவ்வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், புத்தகங்கள் வந்து சேர்ந்துள்ளன. அவற்றை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

    • கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் உட்கட்சி அமைப்புத் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசேலத்தார் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உட்கட்சி அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசேலத்தார் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி வட்டாரத் தலைவர் இளவரசன், நகராட்சி கவுன்சிலர் தேவராஜ், மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் குமார் வரவேற்றார். கூட்த்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தலா 10 ஆயிரம் உறுப்பினர்கள் வீதம் 40 ஆயிரம் உறுப்பினர்களை டிஜிட்டல்முறையில் காங்கிரஸ்கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது. முதலில் பூத் கமிட்டி தேர்தலை நடத்தி முடித்த பின்னர்வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் படிப்படியாக தேர்தல் நடத்தி முடிக்கப்படும். தேர்தல் முடிவுகளை மாநிலத் தலைமைதான் அறிவிக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் அமைப்பு தேர்தல் நடத்துவதற்கான பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் வெளியிட்டார். தொடர்ந்து முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபால், வழக்கறிஞர் இளையராஜா, வழக்கறிஞர் ராஜ்மோகன், ஆகியோர் கலந்து கொண்டு உட்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கினர். இதில் வட்டார தலைவர்கள் கிருபானந்தம், சின்னையன், கணேசன், அப்துல்கலாம், பெரியசாமி, கொளஞ்சி யப்பன், நகர தலைவர்கள் ஏழுமலை, கபீர் பாஷா, செந்தமிழ்ச்செல்வன் சோசியல் மீடியா கார்த்தி, சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் 4 சிறுவர்கள் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
    • கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் சென்றபோது அங்கு நின்ற 16 மற்றும் 17 வயதுடைய 4 சிறுவர்கள் பஸ்ஸை நிறுத்துமாறு கை காட்டி உள்ளனர். ஆனால் பஸ் நிற்காமல் சென்றது இதில் ஆத்திரமடைந்த சிறுவர்கள் பஸ்சை துரத்திச் சென்று வழிமறித்து டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆபாசமாக திட்டி, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை பஸ் பக்கவாட்டில் அடித்தனர். இதில் பீர் பாட்டில் உடைந்து சிதறியது. இதில் பஸ்சில் பயணம் செய்த கோயம்புத்தூர் மாவட்டம், செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சீனிவாசன் (வயது 38) என்பவரின் கண்ணில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்துனர் மற்றும் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அந்த 4 நபர்களையும் மடக்கி பிடித்து ஆட்டோவில் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த சீனிவாசன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். 4 சிறுவர்கள் பஸ்சை வழிமறித்து பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×