search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியிடம்"

    • விருதுநகர் மாவட்டத்தில் ரேசன்கடையில் காலியாக உள்ள 146 விற்பனையாளர்கள்-18 கட்டுநர்கள் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு 15-ந் தேதி முதல் நடக்கிறது.
    • 04562- 290769 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    விருதுநகர்

    கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 146 விற்பனையாளர்கள் மற்றும் 18 கட்டுநர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற ப்பட்டுது.

    அவை பரிசீ லிக்கப்பட்டு, தற்காலி கமான தகுதியான விண்ண ப்பதாரர்க ளுக்கான நேர்முக தேர்வு வருகிற 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பின்புறம் உள்ள அரசு தொழில் மற்றும் பட்டாசு மையத்தில் நடைபெற உள்ளது.

    எனவே நேர்முக தேர்விற்கான அனுமதி சீட்டு விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தின் வழி www.vnrdrb.net என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்விற்கான அனுமதிச்சீட்டு தபால்வழி அனுப்பி வைக்கப்படமாட்டாது. இதில் ஏதேனும் சந்தேங்கள் ஏற்பட்டால் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய குழுவின் 04562- 290769 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    • திருவிடைமருதூா் தாசில்தார் சந்தனவேல் கும்பகோணம் முத்திரை கட்டண தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.
    • பேராவூரணி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தரணிகா பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் 9 தாசில்தார்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிட்டு கூறியிருப்பதாவது:-

    திருவிடைமருதூா் தாசில்தார் சந்தனவேல் கும்பகோணம் முத்திரைக் கட்டண தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றும் திருமால் பட்டுக்கோட்டை சமூகப் பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், அங்கு பணிபுரியும் ட சுசீலா திருவிடைமருதூா் தாசில்தா ராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.பேராவூரணி சமூகப் பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தரணிகா பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராகவும், அங்கு பணியாற்றும் பாஸ்கரன் பேராவூரணி சமூகப் பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

    திருவையாறு ஆதிதிரா விடா் நல தனி தாசில்தார் பூங்கொடி பாபநாசம் தாசில்தாராகவும், அங்கு பணியாற்றும் மதுசூதனன் கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலராகவும், அங்கு பணியாற்றும் பொ்சியா பூதலூா் தாசில்தா ராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக (நிலம்) தனி தாசில்தார் நெடுஞ்செழியன் திருவையாறு ஆதி திராவிட தனி தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 4 வட்டாட்சியர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
    • உடனடியாக பொறுப்பேற்க வேண்டும்

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாட்சியர் சிவகுமார் கரூர் வட்டாட்சியராகவும், அங்கிருந்த பன்னீர் செல்வம் இந்து சமய அறநிலையத்துறை கரூர் உதவி ஆணையர் அலுவலக தனி வட்டாட்சியராவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதே போல் கரூர் உதவி ஆணையர் அலுவலக தனி வட்டாட்சியராக இருந்த வெங்கடேசன் குளித்தலை சமூக பாதுகாப்பு திட்டதனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த கலியமூர்த்தி குளித்தலை வட்டாட்சியராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய பணியிடங்களில் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்ட செய்தி-மக்கள்தொடர் துறையில் 2 வேன் கிளீனர் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மொத்தம் 119 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள்தொடர் துறையில் 2 வாகன சீராளர் பணியிடம் காலியாக உள்ளது.

    ஆண், பெண் இருபாலர் என மொத்தம் 119 பேர் விண்ணப்பித்துள்ளனர். இப்பணிக்கு எட்டாம் வகுப்புதேர்ச்சி பெற்று எஸ்.சி., (முன்னுரிமையற்றவர்) 18 முதல் 37 வயதும், பி.சி., (முன்னுரிமை பெற்றவர்) 18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    இவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேர்முகதேர்வு நடந்தது. தேசிய நெடுஞ்சாலைதுறை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், உதவி இயக்குனர் சத்தியசீலன் முன்னிலை வகித்தனர்.

    பி.ஆர்.ஓ., நவீன்பாண்டியன், ஏ.பி.ஆர்.ஓ., வினோத் விண்ணப்பதாரர்களின் கல்விதகுதி, ஆதார் அட்டை, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களை சரிபார்த்தனர்.

    எம்.எஸ்.சி., பி.இ., மெக்கானிக் படித்த டிப்ளமோ, பட்டதாரிகள் பலர் பங்கேற்றனர்.

    ×