என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துப்புரவு"
- அஜில்ராஜ் பொன்மனை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
- அவரது உடலை குலசேகரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவட்டார்:
குலசேகரம் அருகே உள்ள ஆனைக்கூட்டுவிளை கிளக்கம்பாகம் பொன்மனை பகுதியை சேர்ந்தவர் அஜில் ராஜ் (வயது 38). இவருக்கு அனுஜா (26) என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அஜில்ராஜ் பொன்மனை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில மாதங்களாக இவருக்கும், மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. அதன் காரணமாக அவரது மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அஜில் ராஜ் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மதுவுடன் தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரைகளை தின்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை குலசேகரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடந்தது.
- தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது.
மதுரை
மதுரை மாநகராட்சி 67-வது வார்டு விராட்டிபத்து பகுதியில் 15-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தினமும் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கவுன்சிலர் நாகநாதன், துப்புரவு பணி செய்யும் பெண் ஒருவரை தாக்கி, தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது. இதனை மற்ற தூய்மை பணியாளர்கள் தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துப்புரவு பணியாளரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துப்புரவு பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு நாகநாதன் மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் இன்று பணிக்கு செல்லாமல் கவுன்சிலர் நாகநாதன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
- பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
- இது அவருக்கு இரண்டாவது முறையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருபவர் வெங்கடேசன் (வயது 45). வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட போலீஸ் செக்போஸ்ட் அருகே குப்பை கிடந்தது. அதை சுத்தம் செய்யுமாறு துப்புரவு ஆய்வாளர் குருசாமியும், துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தன் என்பவரும் சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர் வெங்கடேசனிடம் கூறியுள்ளார். ஆனால் கடைசிவரை அவர் துப்புரவு பணியாளர்களை வைத்து அந்த பகுதியை சுத்தம் செய்யவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர் குருசாமியிடம் உடனடியாக சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அங்கு துப்புரவு பணியாளர் மூலம் துப்புரவு செய்யப்பட்டது. இந்நிலையில் வெங்கடேசன மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் தெரிவிக்கவில்லை. அதன் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசனை இரண்டாவது முறையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- துப்புரவு ஊழியர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் நீண்ட நாட்களாக சம்பள உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
- நேற்று முன்தினம் துப்புரவு ஊழியர்கள் அரசு ஆஸ்பத்தி ரியில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 2-வது நாளான நேற்று விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்ட னர். இன்று 3-வது நாளாக அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும் பலர் உள் நோயாளிகளாக தங்கி இருந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இங்கு ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு ஊழியர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் நீண்ட நாட்களாக சம்பள உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் துப்புரவு ஊழியர்கள் அரசு ஆஸ்பத்தி
ரியில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 2-வது நாளான நேற்று விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்ட னர். இன்று 3-வது நாளாக அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாததால் போராட்டம் நீடித்து வருகிறது.
இது குறித்து துப்புரவு ஊழியர்கள் கூறுகையில், எங்களுக்கு முறையான சம்பள உயர்வு வழங்க வேண்டும். அதுவரை போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்றனர்.
- ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடந்தது.
- ஊராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் முகமது உமர்பாரூக் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் தலைவர் ராதிகா பிரபு யூனியன் ஆணையாளர் முத்துக்கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி மலைராஜ் முன்னிலை வகித்தனர்.
இதில் திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். யூனியன் தலைவர் ராதிகா பிரபு திருப்பாலைக்குடியில் உள்ள மளிகை கடைகள், உணவகங்கள், கறிக்கடைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் இலைகளை கைப்பற்றினர். மீண்டும் பயன்படுத்தினால் சட்டநடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கடை உரிமையாளர்களிடம் கூறினார்.
ஊர்வலத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர் (தூய்மை பாரத இயக்கம்) ஆறுமுகம் மற்றும் தூய்மைப்பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஆனந்தூர் ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் துரத்தி நிஷா தலைமையிலும், சாத்தனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி சுமன் தலைமையிலும் பிளா ஸ்டிக் ஒழிப்பு பேரணி நடந்தது. இதில் ஊராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- வீடு வீடாக சென்று அதிகாரிகள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
- வல்லம் பேரூராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தருமாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வல்லம்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் வல்லம் பேரூராட்சியில் பொதுமக்கள் பங்களிப்போடு சிறப்பு தூய்மை பணி இயக்கம் தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கனகராஜ் தலைமையில் மேற்கொள்ளபட்டது.
பேரூராட்சி 2-ம் வார்டில் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு இந்த சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது . வீடு வீடாக சென்று அதிகாரிகள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
இம்முகாமில் வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் , மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் வல்லம் பேரூராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தருமாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆத்தூர்:
எனது குப்பை எனது பொறுப்பு என்ற தமிழக அரசின் திட்டப்படி நரசிங்கபுரம் நகராட்சியில் கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர், நகர்மன்ற தலைவர் அலெக்சாண்டர், நகர்மன்ற துணைத்தலைவர் தர்மராஜ், நகர செயலாளர் வேல்முருகன், 4-வது வார்டு உறுப்பினர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நரசிங்கபுரம் நகராட்சி 4-வது வார்டில் உள்ள தக்காளி மண்டி பின்புறம் உள்ள நகராட்சி பூங்கா இடத்தில் குப்பைகள் தேங்கி கிடந்தன.
தூய்மை பணியாளர்களை கொண்டு அந்த குப்பைகள் அகற்றப்பட்டன. பின்பு அந்த இடத்தில் மரக்கன்று நடப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கும் மற்றும் அனைத்து நபர்களுக்கும் 4-வது வார்டு உறுப்பினர் ஜோதி சார்பாக காலை உணவு வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்