என் மலர்
நீங்கள் தேடியது "தொழிலாளர்"
- பொருளாளர் கிறிசாந்துமேரி மற்றும் துணை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- இதில் சி.பி.ஐ.எம். மாவட்ட செயலாளர் செல்ல சாமி உள்பட ஆண்கள், பெண் கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நாகர்கோவில், அக். 27-
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூ ராட்சிகளிலும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆண்டிற்கு 150 நாட்கள் வேலையில் ரூ.600 கூலி வழங்க வேண்டும்.
அரசு அறிவித்த தினக்கூலி ரூ.281-ஐ குறைக்காமல் வழங்கிடவும், நிலுவையில் உள்ள ஊதிய பாக்கியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியு றுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் குமரி மாவட்ட கிளை சார்பில் இன்று நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் கிறிசாந்துமேரி மற்றும் துணை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.பி.ஐ.எம். மாவட்ட செயலாளர் செல்ல சாமி உள்பட ஆண்கள், பெண் கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன், ஆய்வகத்தில் ஊழியர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என விவசாய தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- 100 நாள் வேலையை முறையாக 100 நாட்களும் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வழங்க வேண்டும்.
முதுகுளத்தூர்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் விவசாய தொழிலாளர் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் கலையரசன் தலைமை தாங்கினார்.
தாலுகா செயலாளர் அங்குதன் தொடங்கி வைத்தார். மாநிலதுணை தலைவர் வசந்தாமணி உள்ளிட்ட 13 பேர் அடங்கிய புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா குழு செயலாளர் முருகன் தீர்மானங்களை முன்மொழிந்தார்.மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
100 நாள் வேலையை முறையாக 100 நாட்களும் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வழங்க வேண்டும். வைகை ஆற்றில் வரும் தண்ணீர் வீனாக கடலில் கலக்கிறது. இதை முறைப்படுத்தி பரலை ஆறு, கூத்தன் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி, அனைத்து கண்மாய்கள்- ஊரணிகளுக்கு, குடி நீருக்கு, பாசனத்துக்கு, பயன் பெறும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விவசாயி களுக்கும் தட்டுபாடின்றி யூரியாவும், உரங்களும் வழங்க வேண்டும்.
முதுகுளத்தூர் புறவழி சாலை வேலையை உடனே தொடங்க வேண்டும். முதுகுளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில். சி.டி.ஸ்கேன், ஆய்வகத்தில் உள்ள ஊழியர் பற்றாக்கு றையை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆல் கொண்ட மால் கோவில் உள்ளது.
- பொங்கலை ஒட்டி 3 நாட்கள் திருவிழாவில் ஆல் கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் செய்து உருவாரம் வைத்து பக்தர்கள் வழிபடுவர்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆல் கொண்ட மால் கோவில் உள்ளது. இங்கு கால்நடை வளம் பெருகவும் அவற்றிற்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கவும் உருவாரங்களை வைத்து வழிபடுவது பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது .குறிப்பாக பொங்கலை ஒட்டி 3 நாட்கள் நடக்கும் திருவிழாவில் ஆல் கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் செய்து உருவாரம் வைத்து வழிபட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். மார்கழி மாதம் துவங்கியதுமே தைப்பொங்கலை வரவேற்கும் ஆல் கொண்டமால் கோவில் திருவிழாவை கொண்டாடவும் உடுமலை பகுதி கிராம மக்கள் தயாராகி விடுவர்.
இதையடுத்து புக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் கால்நடை உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது .முன்பு இந்த தொழிலில் அதிக அளவு குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு காரணங்களால் மண்பாண்டம் மற்றும் உருவார பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் குடும்பத்தினர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது சில குடும்பத்தினர் மட்டுமே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து உருவார பொம்மை தயாரிப்போர் கூறும்போது, கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் சிறப்பாக கொண்டாட கிராம மக்கள் தயாராகி வருகின்றனர்.அதற்கேற்ப உருவார பொம்மைகளை அதிக அளவு ஆர்வத்துடன் தயாரிக்கிறோம். குளத்து மண்ணில் மணல், சாணம் உள்ளிட்டவற்றை கலந்து பொம்மைகள் செய்வதற்கான மண் தயார் செய்கிறோம். தேவையான உருவங்களை ஈர மண்ணில் கொண்டு வந்து சூளையில் விட்டு வேகவைக்கிறோம். தொடர்ந்து சுண்ணாம்பு மற்றும் பல வர்ணங்களை தீட்டி விற்பனை செய்கிறோம். உருவாரங்களை பொறுத்து ரூ. 50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்கிறோம். போதியலாபம் கிடைக்காவிட்டாலும் பாரம்பரிய தொழிலை கைவிடாமல் தொடர்கிறோம் என்றனர்.
- பணியாளர்களுக்கு ரூ.21 ஆயிரத்துக்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும்
- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ரூ.6 ஆயிரத்துக்கு குறையாமல் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
நாகர்கோவில்:
பணியாளர்களுக்கு ரூ.21 ஆயிரத்துக்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ரூ.6 ஆயிரத்துக்கு குறையாமல் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
நலவாரிய பலன்களை உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை குமரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க குழு வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் அனில் குமார் தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், கல்யாணசுந்தரம், இசக்கி முத்து, நாராயணசாமி, அருணாச்சலம், சுரேஷ் மேசியாதாஸ் உள்பட பலர் மறியலில் கலந்து கொண்ட னர். அவர்கள் சாலையில் அமர்ந்து கோஷமிட்ட தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியல் போராட்டம் காரணமாக நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பி ரண்டு நவீன் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அருகே உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
- 943 தொழிலாளர்களுக்கு ரூ3.58 கோடி வினியோகம் செய்யப்படுவதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
- பணியாற்றிய நிறுவனங்களில் இருந்து பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் மற்றும் குறைந்த பட்ச சம்பள சட்ட கமிஷனர் சுப்பிரமணியன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் கமிஷனர் அறிவுறுத்தலின்படி மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள தொழில்நிறுவனங்களில் குறைந்தபட்ச சம்பள சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு தொழில்நிறுவனத்தில் சிறப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கடந்தாண்டு ஆய்வு மேற்கொண்டதில், குறைந்தபட்ச சம்பள சட்டம் 1948-ன்படி, தொழில் வணிக நிறுவனங்களில் இந்த சட்டத்தின்படி சம்ப ளம் வழங்காத பணியா ளர்கள் தரப்பில் கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் 462 தொழிலாளர்கள் தங்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்திருந்தனர்.
- தினசரி சம்பளமாக 265 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்கப்படுகிறது
- தினமும் 40 ஆயிரம் பேர் வரை பணி செய்வர்.
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புறம் தவிர்த்து அவிநாசி, பல்லடம், பொங்கலூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத் தொழில் தான் பிரதானம்.தென்னை, வாழை, கரும்பு, பருத்தி, சோளம், நிலக்கடலை என அந்தந்த பகுதியின் மண், மழை வளத்துக்கேற்ப பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீப ஆண்டுகளாக விவசாய நிலங்களில் உழவு செய்வது, களை எடுப்பது, உரமிடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, விளைபொரு ட்களை அறுவடை செய்வது, சந்தைக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள விவசாய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதற்கு 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் தான் முக்கிய காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். கிராமங்களில் கல், மண் வரப்பு, தென்னை மரங்களை சுற்றி அகழி எடுப்பது, உரக்குழி அமைப்பது, குளம், குட்டையோரம் மரக்கன்று நடுவது, சாலையோரம் உள்ள புதர் செடிகளை வெட்டுவது, நர்சரி பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளில் 100 நாள் திட்ட பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு தினசரி சம்பளமாக 265 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கூடுதலாக 50 நாள் வேலை நாள் உயர்த்தப்படும் என சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் கூறுகையில், 100 நாள் திட்டத்தில், ஊராட்சிகளில் வேலை அதிகமுள்ள சமயங்களில் தினமும் 40 ஆயிரம் பேர் வரை பணி செய்வர் என்றனர். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், 100 நாள் திட்டத்தில் பல இடங்களில் பணிகள் முறைப்படி நடப்பதில்லை.100 நாள் வேலை உறுதியளிப்பு திட் டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டுமானப்பணி, சாலை அமைத்தல் போன்ற கடினமான பணிகள், தனியாருக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டு, உடல் உழைப்பு தொழிலாளர்கள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் 100 நாள் திட்ட தொழிலாளர்களின் பெயரில் வழங்கப்படுகிறது. விவசாய தொழிலாளர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் 100 நாள் திட்டம் தான். எனவே 100 நாள் திட்ட பணியாளர்களை விவசாய தொழிலில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.
அரசு வழங்கும் சம்பளத்துக்கு நிகரான சம்பளம் வழங்க விவசாயிகளும் தயாராக உள்ளனர். இதன் மூலம், தொழிலாளர்களுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். விவசாயமும் செழிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பண்ருட்டி பஸ் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- பொதுசெயலாளர் ஜீவா வினோத்குமார் கலந்து கொண்டு சுமை தூக்குவோர் சங்கத் தலைவரிடம் சீருடைகளை வழங்கினார்.
கடலூர்:
உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பண்ருட்டி பஸ் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொது செயலாளர் ஜீவா வினோத்குமார் கலந்து கொண்டு சுமை தூக்குவோர் சங்கத் தலைவரிடம் சீருடைகளை வழங்கினார். இதில் கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வர்த்தக பிரிவு தலைவர் அசோக் ராஜ், மாவட்ட தொழில் பிரிவு தலைவர் அழகு முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 2023 மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் 13.40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
- 2022-2023 நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளது.
சேலம்:
சேலம் இரும்பாலையில் இந்திய அரசின் ெதாழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நலன்களை வழங்கும் முதன்மையான அமைப்பாகும்.
கடந்த 20-ந் தேதியன்று வெளியிடப்பட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தற்காலிக ஊதியத் தரவின்படி, 2023 மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் 13.40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
மார்ச் மாதத்தில் சேர்க்கப்பட்ட 13.40 லட்சம் உறுப்பினர்களில், சுமார் 7.58 லட்சம் புதிய உறுப்பினர்கள் முதல் முறையாக ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் இணைந்துள்ளனர்.
புதிதாக இணைந்த உறுப்பினர்களில், 2.35 லட்சம் உறுப்பினர்கள் 18-21 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 1.94 லட்சம் உறுப்பினர்கள் 22-25 வயதுடையவர்கள் ஆவர். புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களில் 18-25 வயதுடையவர்கள் 56.60 சதவீதம் ஆவர்.
2.57 லட்சம் பெண்கள் பதிவு
பாலின வாரியான ஊதியத் தரவுகள்படி, 2023 மார்ச் மாதத்தில் 2.57 லட்சம் பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். உறுப்பினர் சேர்க்கையின் அடிப்படையில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய 5 மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.
தமிழ்நாடு 2-வது இடம்
மொத்த உறுப்பினர்களில் இந்த மாநிலங்கள் 58.68 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இதில் மகாராஷ்டிரா 20.63 சதவீதம் உறுப்பினர்களுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு மாநிலம் 10.83 சதவீதம் உறுப்பினர்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளது.
2022-2023 நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளது. முந்தைய நிதியாண்டான 2021-2022 உடன் ஒப்பிடும்போது 13.22 சதவீதம் உறுப்பினர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
- மண் பாண்டங்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் 25க்கும் அதிகமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- அகல் விளக்குகள் தயாரிப்புக்கு, பிரத்யேகமான மண் தேவையாகும்.
உடுமலை :
உடுமலை அருகே புக்குளம், மரிக்கந்தை, பூளவாடி, பள்ளபாளையம், சாளையூர் உட்பட பல கிராமங்களில் பாரம்பரியமாக மண் பாண்டங்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் 25க்கும் அதிகமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.அகல் விளக்குகள் தயாரிப்புக்கு, பிரத்யேகமான மண் தேவையாகும். இவ்வகை மண் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கோதவாடி குளத்திலும், திருப்பூர் மாவட்டம் கொழுமம் கோதையம்மன் குளத்தில் மட்டுமே கிடைக்கிறது.
தொழிலாளர்கள் கூறுகையில், கோதவாடி குளத்தில் கிடைக்கும் மண் மட்டுமே, மண்பாண்டங்கள் மற்றும் அகல் விளக்கு தயாரிப்புக்கு உகந்ததாகும்.ஆனால், அங்கிருந்து மண் எடுத்து வர பல்வேறு விதிமுறைகளை வருவாய்த்துறையினர் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே வாகன வாடகை உட்பட காரணங்களால், மண் எடுத்து வர செலவாகிறது. ஒவ்வொரு முறையும் வாகனத்தோடு சென்று வருவாய்த்துறை தடை விதிப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பி வர வேண்டியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீர்நிலைகளில் இருந்து மண்பாண்ட தொழிலாளர்கள் விலையில்லாமல், களிமண், வண்டல் மண், சவுடு மண், சரளை மண் எடுத்து கொள்ள அனுமதித்து, விலையில்லாமல் பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்த அறிவிப்பு முறையாக செயல்படுத்தப்படவில்லை. உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நேரடியாக அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும்.இதே போல் கோதையம்மன் குளத்திலும் மண் எடுப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- தொழிலாளர்கள் நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- கலெக்டர் ஜெயசீலன் வலியுறுத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அமைப்பு சாரா தொழில்க ளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்கு படுத்தவும் அவர்களுக்கு சமூகபாதுகாப்பு அளிக்க வும், தமிழ்நாடு அரசு 1982-ஆம் ஆண்டில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலா ளர்கள் (வேலை மற்றும் பணி நிலைமைகள் முறை படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது.
அதன்படி தமிழ்நாடு அரசின் கீழ் கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் உட்பட 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரி யங்கள் செயல்பட்டு வருகிறது. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்க ளுக்கான தனி நலவாரியமாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவா ரியம் அமைக்கப்பட்டு 1.1.2021 முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
மேற்படி 18 அமைப்பு சாரா தொழிலாளர் நலவா ரியங்களின் நலத்திட்டங்கள் முறையே கல்வி உதவித்தொ கை, திருமண உதவித்தொ கை, மகப்பேறு உதவித்தொ கை, கண்கண்ணாடி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொ கை, பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை, விபத்து ஊன உதவித்தொ கை, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உதவித்தொகை ஆகிய நலத்திட்டங்களுக் கான உதவித்தொகைகள் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்களின் மூலம் செயல்படுத்தப்படு கிறது.
பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில், பணிபுரியும் இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்களை உடனடியாக பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழி லாளர் நலவாரியத்தில் கட்டாயமாக உறுப்பினராக சேர்க்குமாறு வேலை யளிப்ப வர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தர விட்டுள்ளார்.
தற்போது மேற்படி வாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து மரண உதவித்தொகைரூ.2 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.
மேலும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் உற்பத்தியாளர்கள் தங்களிடம் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு பங்களிப்புத் தொகை ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலாரூ.200 வீதம் 'செயலா ளர், தமிழ்நாடு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம் என்ற பெயரில் வரைவோலை எடுத்து படிவம் வி-ன் படியான தொழிலாளர் விவரப் பட்டியலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில் ஈடுபடும், இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலா ளர்களை பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவா ரியத்தில் உறுப்பினராக சேர்ப்பதற்கு தொழிலாளர் துறையில் tnuwwb.tn.gov.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- 50-க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக தங்களை பதிவு செய்து பயனடைந்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் ஒன்றியம் சித்தூர் ஊராட்சிக்குட்பட்ட வன்னிவயல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசித்ரா நவநீதகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் குண சேகரன்,கிராம நிர்வாக அலுவலர் காமேஸ்வரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டு இந்த சிறப்பு முகாமினை துவக்கி வைத்தனர்.
இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட பதிவு செய்யாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக தங்களை பதிவு செய்து பயனடைந்தனர்.
- குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழும்.
- 2025-க்குள் மயிலாடுதுறையை குழந்தை தொழிலாளர் இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலககூட்ட ரங்கில் குழந்தை தொழி லாளர் முறையினை அகற்று வதற்காக உறுதிமொழி மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் எடுத்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-
குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழும் நிலையில் முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க 2025-ம் ஆண்டுக்குள் மயிலாடுதுறை மாவட்டத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை முதல் கையொப்பமிட்டு மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன் , மயிலாடுதுறை தொழிலாளர் உதவி ஆணையர் ஞானபிரகாசம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.