என் மலர்
நீங்கள் தேடியது "slug 232186"
- திருமலைராஜன் பட்டினத்தில் இருந்து தனது வீட்டிற்கு சைக்கிளில் வந்துள்ளார்.
- ராஜசேகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி ப. கொந்தகை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மகன் ராஜசேகர் (வயது53) கூலித்தொழிலாளி.
இவர் இரவு திருமலைராஜன் பட்டினத்தில் இருந்து தனது வீட்டிற்கு சைக்கிளில் வந்துள்ளார்.
அப்போது எதிரே வந்த மருங்கூர் நெய்குப்பை காலனி தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் ராம்குமார் (22) என்பவர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ராஜசேகர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
உடன் அக்கம் பக்கத்தினர் ராஜசேகரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அங்கு ராஜசேகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிரே மோட்டார் சைக்கிள் வந்த ராம்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- தனியார் கல்லூரி பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெயலட்சுமி மீது கல்லூரி பஸ் ஏறி இறங்கியது.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள நடுக்காவேரி பகுதியை சேர்ந்தவர் கமலநாதன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 59).
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஜெயலட்சுமிக்கு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கமலநாதன் முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை கணவன்- மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் நடுக்காவேரியில் இருந்து தஞ்சைக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிள் தஞ்சை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது.
இதில் நிலை தடுமாறி ஜெயலட்சுமி கீழே விழுந்தார்.
அவர் மீது கல்லூரி பஸ் ஏறி இறங்கியது.
இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
கமலநாதனுக்கு காயம் ஏற்பட்டது. தன் கண்முன்னே மனைவி இறந்ததை பார்த்து கமலநாதன் கதறி அழுதார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- காய்கறி வியாபாரம் செய்து வரும் முதியவர் கடை தெருவிற்கு சென்றுள்ளார்.
- பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மேல அக்ராஹாரம் தெருவை சேர்ந்தவர் முகமது யூசுப் (வயது 60).
இவர் சைக்கிளில் காய்கறிகளை வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்தவுடன் கடை தெருவிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் ஆற்றில் சடலமாக முகமது யூசுப் கிடந்துள்ளார்.
உடன் அக்கம் பக்கத்தினர் நன்னிலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முகமது யூசுப் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- இ.சி.ஜி, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
- முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
பாபநாசம்:
பாபநாசம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை மற்றும் பாபநாசம் பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் கீர்த்திவாசன் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச பொது மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ முகாம் பாபநாசம் திருப்பாலைத்துறை ரோட்டரி சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
பாபநாசம் ரோட்டரி சங்க தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார்.
பாபநாசம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கீர்த்தி வாசன், பிரேம்நாத் பைரன், துரைமுருகன், தேன்மொழி உதயகுமார், முத்துமேரி மைக்கேல் ராஜ், புஷ்பா சக்திவேல், பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கோட்டையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாபநாசம் போலீஸ் துணை சூப்பரண்ட் பூரணி கலந்து கொண்டு இலவச பொது மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
இம்முகாமில் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திகேயன், மருத்துவர்கள் ஆனந்த், அனு அனன்யா, வர்ஷா, ராஜாத்தி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் பொது மக்களுக்கு சர்க்கரை நோய் பரிசோதனை, இ.சி.ஜி மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். 25 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
முகாமில் மருத்துவமனை மார்க்கெட்டிங் மேனேஜர் பூபதிகுமார், உதவி மேனேஜர் பழனிவேல், ரோட்டரி சங்க பொருளாளர் ஆனந்தன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் செந்தில்நாதன், பிரான்சிஸ் சேவியர், விவேகானந்தம், முருகானந்தம், ராஜேந்திரன், வெங்கடேசன், பக்ருதீன் அலி அகமது, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.
- பொது மருத்துவ பிரச்சினைகளுக்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
- 40 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.
கும்பகோணம்:
கும்பகோணம் தீபம் மருத்துவமனை, சாந்தி நகர் நலசங்கம் இணைந்து மக்களை தேடி இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நகர் வளாகத்தில் நடைபெற்றது.
முகாமில் சாந்தி நகர் நலச்சங்க செயலாளர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார்.
தீபம் நிர்வாக இயக்குனர் நஜீபுதீன், நகர நல பொருளாளர் ஜாபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பொது மருத்துவ பிரச்சினைகளுக்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
பெண்களை பரிசோதிப்பதற்கென பெண் மருத்துவ குழுவினர் டாக்டர் மஞ்சு தலைமையில் கலந்துகொண்டனர்.
40 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.
மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவமனைக்கு உரியமுறையில் பரிந்துரைக்கப்பட்டது.
முகாமில் சாந்தி நகர் நல வாசிகள், தீபம் நிர்வாக அலுவலர் சரவணன், மருத்துவமனை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- கொரியர் நிறுவனங்களுக்கு எஸ்.பி. வேண்டுகோள்
- கஞ்சா, குட்கா உள்ளிட்டபோதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை
நாகர்கோவில்:
தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்டபோதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனையை தடுக்க பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கஞ்சா விற்பனை தொடர்பாக கைது செய்யப்படும் நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு, அவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? சப்ளையர் யார்? என்பது தொடர்பாக விசாரிக்கப் பட்டு தொடர் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீப காலமாக கொரியர் சர்வீஸ் மூலமும், பார்சல் சர்வீஸ் சென்டர்கள் மூலமும் கஞ்சா வருவதாக காவல் துறைக்கு தகவல் வந்தது. அதன் பேரில் கொரியர் அலுவலகங்களில் எஸ்.பி., நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில் நேற்று மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில், பார்சல் சர்வீஸ் மற்றும் கொரியர் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசுகையில், போலீசார் மட்டும் கஞ்சா விற்பனையை தடுக்க முடி யாது. பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தற்போது போலீசார் சோதனை தீவிரமாகி உள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து கொரியரில் கஞ்சா, புகையிலை பொருட்கள் வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிந்தால் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ள 7010363173 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கொரியரில் பார்சல் அனுப்ப வருபவர்கள், பார்சலை பெற வருபர்வர்களிடம் எதாவது ஒரு ஆவண நகல் (ஆதார், ஓட்டுநர் உரிமம்) வாங்கி கொண்டு பார்சலை பெற்று கொள்ளுங்கள்.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் பார்சல்களை நன்கு கண்காணித்து அதில் கஞ்சா மற்றும் வேறு ஏதேனும் போதை பொருட்கள் உள்ளதா? என்பதை பரிசோதித்து உரியவரிடம் வழங்க வேண்டும். பார்சல்களில் இருக்கும் முகவரி போலியான முகவரியாக இருந்தாலோ, மேலும் சந்தேகத்திற்கு இடமாக ஏதேனும் பார்சல்கள் இருந்தாலோ. உடனே அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
- மகளிர் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டது.
- ரெயில்வே ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை ரெயில் நிலையத்தில் இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் ரெயில்வே மெயில் சர்வீஸ் மற்றும் கேன்சர் சென்டர் இணைந்து நடத்திய மருத்துவ முகாமை தஞ்சை முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தொடக்கி வைத்தார். ரெயில்வே அஞ்சலக மெயில் சர்வீஸ் ஆவணக்காப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கேன்சர் சென்டர் நிர்வாக அலுவலர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் இருதய பாதிப்பு , மூளை தண்டு வட பாதிப்பு, மார்பு நோய், குழந்தைகள் மருத்துவம், மகளிர் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கான ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருதுதுரை கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் அவர் பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்தார்.
இந்த முகாமில் தஞ்சாவூர் ரெயில்வே மெயில் சர்வீஸில் பணிபுரியும் ஊழியர்கள், அஞ்சலக ஊழியர்கள், ரெயில்வே ஊழியர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயிலடி பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்யும் ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பல்துறை சிறப்பு மருத்துவர்கள் முனியசாமி , டீனா, அனுசுயா, ஜீவானந்தம், மணிவண்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
- பழையார் கடற்கரையில் மீன் வாங்கி அதனை விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
- பால் ஏற்றி வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவ ட்டம் சீர்காழி அடுத்த அரசூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சங்கர் (வயது42).
மீன் வியாபாரி. இவர் இன்று காலை பழையார் கடற்கரையில் மீன் வாங்கி அதனை தனது விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார் .
அப்போது தாண்டவன் குளம் அருகே சென்றபோது பால் ஏற்றி வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரிசோதனைகள் செய்யப்பட்டு கால்நடைகளுக்கு தாது உப்பு உள்ளிட்ட மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
- முகாமில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்து கொண்டு பயனடைந்தன.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள சருக்கை ஊராட்சி புதுக்குடி கிராமத்தில் நிலவள, நீர்வளத்திட்ட கால்நடை சிறப்பு முகாம் தஞ்சாவூர் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. முகாமை கும்பகோணம் கால்நடை கோட்ட்ட உதவி இயக்குனர் டாக்டர் கண்ணன் துவக்கி வைத்தார்.
முகாமில், கணபதி அக்ரஹாரம் கால்நடை மருத்துவர் சங்கமித்ரா, திருவைகாவூர் கால்நடை உதவி மருத்துவர் அபிமதி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஆய்வு, குடல் புழுநீக்கம் மலடு நீக்கம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு கால்நடைகளுக்கு தாது உப்பு உள்ளிட்ட மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
முகாமில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 200 -க்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்து கொண்டு பயனடைந்தன. முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சருக்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன், துணைத்தலைவர் காயத்திரி கேசவன், ஊராட்சி உறுப்பினர் ராதிகா பாலசுப்ரமணியன், ஊராட்சி செயலாளர் குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
- ரத்த பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
- சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி, கொசுக்களை அழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்கனாம்பட்டு கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்து வந்தது. தொடர்ந்து ஒரு வாரமாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் காய்ச்சல் குறையவில்லை.அதனைத் தொடர்ந்து பாண்டிச்சேரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு செய்யப்பட்ட ரத்த பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அவர் பன்றி காய்ச்சலில் இருந்து குணமடைந்து வருகிறார்.
இன்னும் மூன்று தினங்களில் வீடு திரும்புவார் என்று கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.
பன்றிக்கா ய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து மாங்கனாம்பட்டு கிராமத்துக்கு கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் வட்டார சுகாதார ஆய்வாளர் கொளஞ்சியன், சுகாதார ஆய்வாளர்கள் கருணாகரன், சுந்தரம், வெங்கட்பிரசாத், பவித்திரன், இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ்,
துணைத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் சுகாதார ஊழியர்கள் சென்று ஆய்வு செய்து அப்பகுதியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி அப்பகுதியில் சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும், கொசுக்களை அழிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- காட்டாற்று பாலம் எதிரே மல்லிப்பட்டினத்தில் மீன்லோடு இறக்கிவிட்டு வந்த மினி வேன் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேராவூரணி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி மயிலாடு தெருவை சேர்ந்தவர் காதர்மைதீன் (வயது 60).
இவர் கட்டுமாவடி மொத்த மீன் விற்பனை மையத்திற்கு தினசரி அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்து மீன் வாங்கிச் சென்று சில்லரை வியாபாரம் செய்வது வழக்கம்.
சம்பவத்தன்று அதிகாலை கட்டுமாவடி சென்று மீன் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்த போது அம்மணிசத்திரம் காட்டாற்றுப் பாலம் எதிரே மல்லிப்பட்டினத்தில் மீன்லோடு இறக்கிவிட்டு வந்த மினி வேன் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழ ந்தார்.
இதுகுறித்து அவரது மகன் அலாவுதீன் (39).அளித்த புகாரின்பேரில் சேதுபாவா சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திலேயே மினிவேனை விட்டுவிட்டு தலைமறைவான ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
- முகாமில், இ.சி.ஜி. மற்றும் எக்கோ பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
- ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இருதய நோய்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாமை சூரியனார்கோயில் ஆதீனகர்த்தர் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் தனலெ ட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் குத்தாலம் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய இந்த முகாமில், இதய நோய், நுரையீரல் ரத்த அழுத்த நோய், இருதய தசைநார் நோய், பிறவி இருதய குறைபாடு மற்றும் இருதயம் தொடர்பான அனைத்து நோய்களுக்கு இலவச பரிசோதனை நடத்தப்பட்டது.
மேலும், முகாமில், இசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ள ப்பட்டன.
இதில், சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு குத்துவிள க்கேற்றி முகாமை தொடங்கி வைத்து அருளாசி கூறினார்.
அவருக்கு நிர்வாகிகள் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
முகாமில் முதியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதில், குத்தாலம் பேரூராட்சி மன்றத் தலைவர் சங்கீதா மாரியப்பன், பேரூராட்சி உறுப்பினர் சுகன்யா சுரேஷ், குத்தாலம் லயன்ஸ் சங்கத் தலைவர் மகாலிங்கம் மற்றும் சின்னதுரை,தனலட்சுமி சீனிவாசன் ஒருங்கிணைப்பாளர் அன்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.