search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூமிபூஜை"

    • ராஜபாளையம் யூனியன் அலுவலகத்திற்கு ரூ.3.41 கோடியில் புதிய கட்டிடத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
    • மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், சம்மந்தபுரம் கிராமத்தில் ரூ.3.41 கோடி மதிப்பில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது.

    கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி., ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரா ட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதி திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.

    பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    அதன்படி, ரூ.341.50 லட்சம் மதிப்பில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) அனிதா, ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அடிக்கல் நாட்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வருவதாக அறிவித்திருந்த நிலையில் அவர் வராததால் யூனியன் அலுவலக கட்டிட பூமி பூஜை 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
    • தேங்காய் உள்பட பூஜை பொருட்கள் வெயிலில் காய்ந்து வீணாவதைக் கண்டு பொது மக்கள் ஏமாந்ததுடன், இந்த நிலையை பார்த்து முகம் சுளித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- தென்காசி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் சில இடங்கள் பழுதடைந்து விட்டதால் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவில் இடம் தேர்வு செய்யப்பட்டடது.

    நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம்,கருவூலம் என அடுத்தடுத்து அலுவலகங்கள் அருகில் இருந்ததால் இந்த இடம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அடிக்கல் நாட்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வருவதாக அறிவித்து 2 முறையும் அமைச்சர் வராததால் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

    ராஜபாளையத்தில் நேற்று தி.மு.க இளைஞர் அணியினருக்கு திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன். ராஜபாளையம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் சிங்கராஜ், நகர் மன்ற தலைவி பவித்ரா சியாம்ராஜா உள்பட தி பலர் கலந்து கொண்டனர் .

    இந்த நிலையில் அமைச்சர் பூமிபூஜையை நடத்திவைப்பார் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஏற்கனவே 2 முறை ஒத்தி வைக்கப்பட்ட ராஜபாளையம் மாடசாமி கோவில் செல்லும் சாலையில் யூனியன் அலுவலகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 3-வது முறையாக பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் அரசு அதிகாரிகளால் செய்யப்பட்டிருந்தது.

    நேற்றும் அடிக்கல் நாட்ட அமைச்சர் வரமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டதால் 3-வது முறையாக அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. பூமிபூஜைக்கான தேங்காய் உள்பட பூஜை பொருட்கள் வெயிலில் காய்ந்து வீணாவதைக் கண்டு பொது மக்கள் ஏமாந்ததுடன், இந்த நிலையை பார்த்து முகம் சுளித்தனர்.

    யூனியன் அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதில் தி.முக.வினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிளவுபட்டு கிடப்பதால் அரசு பணம் விரயம் ஆகிறது.

    பல்வேறு பணிகளை ஒதுக்கிவிட்டு இந்த பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் 3-வது முறையாக பூமிபூஜை ஒத்தி வைக்கப்பட்டதால் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

    3-வது முறையாக பூமிபூஜை தடைபட்டுவிட்டதால் இதை கெட்ட சகுனமாக எடுத்துக் கொண்டு யூனியன் அலுவலகத்திற்கு வேறு இடம் தேர்வு செய்வதுதான் நல்லது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

    • மொரட்டுபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு தலைமை தாங்கினார்.
    • கலாமணி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மொரட்டு பாளையம் ஊராட்சி புதிய ஆதிதிராவிடர் காலனியில் புதிதாக ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்றது. இதில் மொரட்டுபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.மேலும் நிகழ்ச்சியில் துணைத் தலைவர் கணேஷ் குமார் , வார்டு உறுப்பினர்கள் தவமணி சக்திகதிரவன் , தங்கமணி கோவிந்தசாமி,உமா மகேஸ்வரி சுரேஷ், பாலமுருகன், கலாமணி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் இடிக்கப்பட்டன.
    • ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் சேதம் அடைந்ததால் அந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

    இதனால் அதே இடத்தில் புதிய கட்டிடம் அமைக்க ஷாநவாஸ் எம்.எல்.ஏ.விடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஷாநவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதில் திருமருகல் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய ஆணையர் பாலமுருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், சுல்தான் ஆரிப், கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முகமது சலாவுதீன், ஊராட்சி செயலர் சசிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை, ஆய்வகம் கட்ட பூமிபூஜை நடந்தது.
    • இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் ஆயத்த இழைப்பு சட்டக பணிமனை மற்றும் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. விழாவிற்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன், தி.மு.க. மாநில தீர்மான குழு துணை தலைவர் சுப.த.திவாகர், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, செயற்பொறியாளர் செந்தில்குமார், முதுகுளத்தூர், பரமக்குடி உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ரூ.31 லட்சம் செலவில் ஊரணியை தூர்வாரி பராமரிக்க பூமிபூஜை நடந்தது.
    • 20ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஊரணி பராமரிக்கப்படாமல் குப்பை கொட்டும் இடமாக இருந்து வந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட சவக்கட்டு ஊரணி 20ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படாமல் குப்பை கொட்டும் இடமாக இருந்து வந்தது. அதனை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து சவக்கட்டு ஊரணி தூர்வாரபட்டு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, கம்பி வேலி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

    நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமை தாங்கினார். இதில் நகர் மன்ற பொறியாளர், கவுன்சிலர்கள் அன்புமணி, சண்முக ராஜன், விஜயகுமார், அயூப்கான், ராமதாஸ், ஆறு சரவணன், கீதாகார்த்திகேயன், மதியழகன், வழக்கறிஞர் ராஜஅமுதன், ஒப்பந்ததாரர் மதி, தொழில்நுட்ப பிரிவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ. 1.50 கோடியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது
    • காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ தொடங்கிவைத்தார்

    திருச்சி:

    தா.பேட்டை அருகே அஞ்சலம் கிராமத்திலிருந்து கோணப்பம்பட்டி செல்லும் வழியில் காட்டுவாய்க்கால் அமைந்துள்ளது. மழை, வெள்ள காலங்களில் இந்த வாய்க்கால் வழியாக காட்டாற்று வெள்ளம் செல்வது வழக்கம். காட்டாற்று வெள்ளம் அதிகமாக செல்லும் போது தரைமட்ட பாலத்தை அப்பகுதி பொதுமக்கள் கடந்து செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

    எனவே உயர் மட்ட பாலம் ஒன்று அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் முசிறி தொகுதி எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜனிடம் கோரிக்கை விடுதிருந்தனர். பொதுமக்களின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ கொண்டு சென்றார். இதையடுத்து தமிழக அரசு ரூ 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து அஞ்சலம் முதல் கோணப்பம்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஆற்றின் குறுக்கே பூமிபூஜை விழா நடைபெற்றது. விழாவிற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கே.கே.ஆர்.சேகரன், கே.பெரியசாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், மாவட்ட துணை செயலாளர் எம்.மயில்வாகனன், நிர்வாகி பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். அப்போது எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன் கூறும் போது, ஆற்றின் குறுக்கே உள்ள தரைமட்ட பாலத்தை நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு கோடி 50 லட்சம் மதிப்பில் உயர்மட்ட பாலமாக மாற்றுவதற்கு பணிகள் தொடங்கியுள்ளது. பொது மக்களின் நலன் கருதி அரசு இந்த நிதியை ஒதுக்கி உள்ளது என்று கூறினார்.

    விழாவில் நிர்வாகிகள் கோவிந்தசாமி, சிட்டிலரை சிவா, ஊராட்சி மன்ற தலைவர் துரைராஜ், நெடுஞ்சாலை முசிறி உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் சுரேஷ், மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவர் சௌந்தர்ராஜன், நகர செயலாளர் தர்மராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடியில் கட்டுமானப் பணிகளுக்கு பூமிபூஜையை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
    • கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முன்வடிவமைக்கப்பட்ட பணிமனைக் கட்டடம் கட்டுமானப் பணிகளுக்கு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சி கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்ந்த தரத்தில் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், வகுப்பறைகள், விடுதிகள், கழிவறைகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் முன்வடிவமைக்கப்பட்ட பணிமனைக் கட்டடம் கட்டுமானப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வளாகமானது 10,520 ச.அடி பரப்பளவில் பணியாளர் அறை, வீடியோ செயற்கைகோள்; வகுப்பறை, இணையதள வகுப்பறைகள், செயல்முறை மதிப்பு பகுப்பாய்வு வகுப்பறைகள், பவர் டெவலப்மென்ட் வகுப்பறைகள், இயந்திர பகுதி மற்றும் ஆண், பெண் கழிவறைகள் இக்கட்டடத்தில் அமையப்பெற உள்ளது.

    இவை அனைத்தும் உயர்ந்த தரத்தில் உரிய காலத்திற்குள் கட்டிமுடிக்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • ராமநாதபுரத்தில் பா.ம.க. மாவட்ட தலைமை அலுவலக கட்டிடத்துக்கு பூமிபூஜை போடப்பட்டது.
    • டாக்டர் ராமதாஸ் 84-வது பிறந்த தினத்தை முன்னிட்டு செம்மரக்கன்றுகளை நட்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம், அரசியல் பயிலரங்கம் ஆகியவற்றிக்கான கட்டிட பூமி பூஜை ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை அருகே நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அக்கீம் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சந்தானதாஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆடிட்டர் சதாம் ராஜா முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் திலகபாமா கலந்து கொண்டார். ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் இஸ்மாயில் வரவேற்றார். முன்னதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 84-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா, மாவட்ட தலைவர் சந்தானதாஸ், மாவட்ட பொருளாளர் ஆயிஷா, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய செயலாளர் முகமது அலி, திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மராஜ் ஆகியோர் செம்மரக்கன்றுகளை நட்டனர்.

    அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. கொடியை மாநில பொருளாளர் ஏற்றி வைத்தார். இதில் ராமநாதபுரம் மாவட்ட துணைச் செயலாளர் தொண்டி ராசிக், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், ராமநாதபுரம் நகர செயலாளர் முத்துராமன், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, கடலாடி ஒன்றிய தலைவர் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பசுமை தாயகம் செயலாளர் கர்ண மகாராஜா நன்றி கூறினார்.

    • கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டியில் எழுந்தருளியுள்ள சாய் தபோவனத்தில் புதிதாக சாய்பாபாவிற்கு சாவடி எழுப்பும் திருப்பணி தொடங்க உள்ளனர்.
    • இதற்கான பூமி பூஜை விழாவை முன்னிட்டு காலை கணபதி ஹோமம், சங்கல்ப பூஜை மற்றும் ஆரத்தி நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டியில் எழுந்தருளியுள்ள சாய் தபோவனத்தில் புதிதாக சாய்பாபாவிற்கு சாவடி எழுப்பும் திருப்பணி தொடங்க உள்ளனர். இதற்கான பூமி பூஜை விழாவை முன்னிட்டு காலை கணபதி ஹோமம், சங்கல்ப பூஜை மற்றும் ஆரத்தி நடைபெற்றது.

    விழாவில் கரூர் சின்மயா மிஷன் தலைவர் அனுத்தமாநந்தா சுவாமிகள் சாவடி பூமி பூஜையை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து சாய்பாபாவிற்கு‌ சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன்‌ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பூமிபூஜையில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர்.

    • கண்மாய் பூமிபூஜையில் அழைப்பு இல்லை என கூறி அதிகாரிகளுடன் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    கொடைரோடு:

    கொடைரோடு அருகே உள்ள ராமராஜபுரம் அரண்மனை குளம் கண்மாய் புனரமைப்பு செய்ய நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.61.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதற்கான பணிகளை தொடங்குவதற்காக பூமி பூஜை அம்மையநாயக்கனூர் பேரூராட்சி சார்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். அதை தெரிந்துகொண்ட தி.மு.க. பேரூர் செயலாளர் விஜயகுமாருக்கு அழைப்பு இல்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூமி பூஜை தொடங்குவதற்கு முன்ன தாக அரண்மனை குளத்தி ற்கு சென்று அங்குள்ள பேரூராட்சி உதவி பொறி யாளர், அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் தி.மு.க. நகர செயலாளராவும் கவுன்சிலருமாக உள்ளேன்.

    எனக்கு அழைப்பு இல்லா மல் எப்படி பூமி பூஜை செய்யலாம் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோ ட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் (பொறுப்பு) சவுந்திர பாண்டியன் மற்றும் நிர்வாகி கள், நகரச் செயலாளர் விஜயகுமாரை சமாதானம் செய்தனர். அதன்பிறகு அரண்மனை குளம் கண்மாய் சீரமைக்கும் பணிக்கு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், செயல் அலுவலர் கலந்துகொள்ள வில்லை என்பது குறிப்பி டதக்கது. பூமி பூஜைகள் நிகழ்ச்சிக்கு வாக்குவாதம் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • நியாய விலை கடை கட்ட பூமி பூஜை நடந்தது.
    • ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே ஜமீன் நல்லமங்கலம் ஊராட்சி கீழவரகுணராமபுரம் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலைக்கடை அமைக்கும் பணிக்கு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து புதிய நியாயவிலை கடை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.. யூனியன் சேர்மன் சிங்கராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி கிளைச்செயலாளர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×