search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயக்கம்"

    • சந்திரகாச்சி-மங்களூரு இடையே விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது.
    • இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா, சந்திரகாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மங்களூரு சென்டிரல் வரை செல்லும் விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் கொரோனா ஊரடங்கின் போது நிறுத்தப்பட்டது. இந்த ரெயில் போக்குவரத்து மீண்டும் இயக்கப்படுகிறது. அதன்படி சந்திரகாச்சி-மங்களூரு விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22851) சந்திரகாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) முதல் பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு கரக்பூர், ஜலேஷ்வர், பலஸோர், விசாகப்பட்டினம், விஜயவாடா, நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர், காட்பாடி வழியாக நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 9.32 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் அங்கிருந்து இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, கண்ணூர் வழியாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8.50 மணிக்கு மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடையும், இதேபோல் மறு மார்க்கத்தில் மங்களூரு சென்டிரல்-சந்திர காச்சி விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22852) மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக 17-ந் தேதி காலை 9.02 மணிக்கு சேலம் வந்தடையும்.

    பின்னர் இங்கிருந்து காலை 9.05 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக திங்கட்கிழமை மாலை 5.15 மணிக்கு சந்திரகாச்சி ரெயில் நிலையம் சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருச்சி - காரைக்குடி ெரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    திருச்சி - காரைக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இரு மார்க்கங்களிலும் வருகிற 18-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த ரெயிலை முன்கூட்டியே இயக்குவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    திருச்சி - காரைக்குடி, காரைக்குடி - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் முறையே நாளை (10-ந் தேதி) மற்றும் 11-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. திருச்சி-காரைக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் சனிக்கிழமைகளிலும், காரைக்குடி-திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்காது.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • மதுரை-திண்டுக்கல் இடையே பயணிகள் ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    மதுரை-திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இது கொரோனா பரவலின்போது நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகும் அந்த ரெயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை.

    இந்த நிலையில் மதுரை-திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் போக்குவரத்தை, வருகிற 10-ந்தேதி முதல் இரு மார்க்கங்களிலும் மீண்டும் தொடங்குவது என்று ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    திண்டுக்கல்லில் இருந்து 10-ந் தேதி முதல் தினமும் காலை 8 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், காலை 9.20 மணிக்கு மதுரை வரும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், இரவு 7.45 மணிக்கு திண்டுக்கல் செல்லும். இந்த ரெயில்கள் அம்பாத்துரை, கொடை ரோடு, வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர், கூடல் நகரில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • ஒவ்ெவாரு தமிழ் மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகை, ஆயுதப்பூஜைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது வழக்கம். மேலும் ஒவ்ெவாரு தமிழ் மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில் வருகிற 28-ந்ேததி ஆனி அமாவாசையையொட்டி மாதேஸ்வரன் மலைக்கு சேலம் புதிய பஸ் நிலையம், மேட்டூர் பஸ் நிலையத்தில் இருந்து 27 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதைத்தவிர தருமபுரி மண்டலத்தில் இருந்து 8 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 35 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பஸ்கள் 28-ந்தேதி அதிகாலையில் இருந்து இரவு வரை இயக்கப்படும் என்று சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அரசு ஊழியர்கள் சந்திப்பு-பிரசார இயக்கம் பெரம்பலூரில் நடைபெற்றது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி

    பெரம்பலூர்:

    கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இருந்து வந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்களை சந்தித்து பிரசார இயக்கத்தை நடத்தினர். இந்த பிரசார இயக்கம் பெரம்பலூரில் அரசு மருத்துவமனை, தாசில்தார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை,

    வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், குன்னம் தாசில்தார் அலுவலகம் ஆகிய பகுதிகளில் நடந்தது. இதற்கு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் குமரி அனந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் மரியதாஸ், பொருளாளர் தெய்வராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில செயலாளர் அம்சராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பிரசார இயக்கத்தில் கலந்து கொண்டவர்கள் தேர்தல் கால வாக்குறுதியின் படி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தனியார் மூலம் அரசுத்துறைகளில் பணி நியமனம் செய்யக்கூடாது. எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள்

    உள்ளிட்ட 3½ லட்சத்திற்கும் மேற்பட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்ற அத்தக்கூலி பணி நியமனங்களை கைவிட வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • சிவகங்கையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஸ்டிக்கர்களை பஸ்களில் ஒட்டினார்.

    சிவகங்கை

    சிவகங்கை ராணி ரங்கநாச்சியார் பஸ் நிலையத்தில், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தொடங்கி வைத்து, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். மேலும் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஸ்டிக்கர்களை பஸ்களில் ஒட்டினார்.

    பின்னர் கலெக்டர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றிடவும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கல்வி கற்பதனை உறுதி செய்திடவும், அவர்களின் பாதுகாப்பு, எதிர்காலம் போன்றவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைளை தொழிலாளர் துறையின் மூலம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

    அதனடிப்படையில், 14 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர்கள் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்றவற்றில் பணியில் அமர்த்துவதை தடுத்து அவர்கள் கல்வி கற்றிடவும், 14 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினர் அபாயகரமான செங்கல்சூளை, கல்குவாரி, பட்டாசு தொழில் போன்ற தொழில்களில் பணியமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை தடுப்பு குழுவினர்கள் தொடர்கள ஆய்வு மேற்கொண்டு குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தால் அவர்களை மீட்டு கல்வி கற்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்திய 14 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்திய 25 கடை, நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, பெற்றோர்கள் குழந்தைகளை வருமானம் தேடித்தரும் எந்திரமாக கருதாமல் அவர்களின் எதிர்கால நலன், பாதுகாப்பு, சுதந்திரம், தனித்திறன் போன்றவற்றிற்கு மதிப்பளித்து, அவர்கள் கல்வி கற்க ஊக்கப்படுத்த வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் குழந்தைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், தொழிலாளர் நல அலுவலர் ராஜ்கு மார், நகர்மன்றத் துணை த்தலைவர் கார்கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், சரவணன், மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×