என் மலர்
நீங்கள் தேடியது "#ஜெயில்"
- தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
- கோட்டார் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்தனர்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்து செல்லும் நபர்களிடம் செல்போன் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்ட னர். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோட்டார் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசா ரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.
பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த சையத் அலி (வயது 23) என்பது தெரியவந்தது. இவர் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்போன் திருடியதை ஒப்பு கொண்டார். போலீசார் அவரிடம் இருந்து 10 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர் கோவில் ஜெயிலில் அடைத்தனர்.
- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தெக்ரானில் கலவரத்தை தூண்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
- அரசுக்கு எதிரான பிரசாரம் செய்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹிஜாப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரபலங்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்து வருகிறது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரான் நாட்டின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமியின் மகள் பேசே ஹாஷிமிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை அவரது வக்கீல் உறுதிப்படுத்தினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தெக்ரானில் கலவரத்தை தூண்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். அரசுக்கு எதிரான பிரசாரம் செய்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஏற்கனவே மேசே ஹாஷிமி, 2009-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அரசுக்கு எதிரான தவறான தகவல்களை பரப்பியதாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டது.
- எங்களை போலீசார் பிடித்து வைத்து ஜெயிலில் அடைத்து வைத்துள்ளனர்.
- வயிற்று பிழைப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பாபநாசம் தாலுகா கீழ கோவில் பத்து உடையார் கோயிலை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தை சேர்ந்த யுவராஜ், ராமு, சிகாமணி, மணிமாறன் ஆகிய 4 பேர் தோட்ட வேலைக்காக மலேசியா நாட்டிற்கு செல்ல முடிவு செய்தனர்.
இதற்காக அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் தாய்லாந்து சென்றனர். அங்கிருந்து மலேசியா செல்ல இருப்பதாக அவர்களின் குடும்பத்தினரிடம் கூறினர்.
ஆனால் அதன் பிறகு ஒரு எண்ணில் இருந்து எங்களுக்கு ஒரு குரல் செய்தி வந்தது.
அதில் இது போலீஸ்காரர் தொலைபேசி என்றும், எங்களை போலீசார் பிடித்து வைத்து ஜெயிலில் அடைத்து வைத்துள்ளனர் எனவும் கூறி துண்டிக்கப்பட்டது.
அதன் பிறகு எந்த ஒரு தகவலும் இல்லை.
இதனால் மன வேதனை அடைந்த அந்த நான்கு பேரின் குடும்பத்தினரும் திரும்பவும் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா ? இல்லையா ? என்ற எந்த தகவலும் எங்களுக்கு தெரியவில்லை.
எனவே மலேசியா நாட்டிற்கு வேலைக்கு சென்ற 4 பேரையும் பத்திரமாக மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தாக்குதல் நடத்திய வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பிரதீப், அலெக்ஸ் ரூபன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர் பிரபல தொண்டு நிறுவன நிர்வாகியான பாலகுமரேசன்.
தாக்குதல்
ஆறுமுகநேரியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக சமூக விரோத செயல்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி கடந்த ஆண்டு பொதுமக்கள் சாலை மறியல் நடத்தினர். இதில் பாலகுமரேசன் கலந்துகொண்டதால் அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதனால் அவர் தனக்கு பாதுகாப்பு தர வேண்டுமென்று போலீசாரிடம் மனு கொடுத்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு கும்பல் பாலகுமரேசனை பயங்கரமான ஆயுதங்களால் தாக்கியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்ட பாலகுமரேசன் தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இவர் மீதான தாக்குதல் வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தை சேர்ந்த சூசைராஜ் மகன் பிரதீப் என்ற அந்தோணி பிரதீப் (20), காமராஜபுரத்தை சேர்ந்த திலகர் மகன் அலெக்ஸ் ரூபன் என்ற பப்பை (19) ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் அளித்த அறிக்கையை மாவட்ட சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட கலெக்டர் செந்தில்ராஜ் பிரதீப், அலெக்ஸ் ரூபன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தர விட்டார். இதன்படி அவர்கள் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
- கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு சுபியா தீக்குளித்தார்.
நாகர்கோவில்:
அஞ்சுகிராமம் அருகே மயிலாடியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி சுபியா (25). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு சுபியா தீக்குளித்தார்.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தினர். சுபியா நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் வேல்முருகன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக அஞ்சு கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து போலீசார் வேல்முருகனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வேல்முருகன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வேல்முருகனுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
- பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் ஒரு மசோதாவை பரிந்துரை செய்துள்ளது.
- குற்றவாளி வாரண்ட் இன்றி கைது செய்யப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் ஒரு மசோதாவை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி நாட்டின் ராணுவம் மற்றும் நீதித்துறையை அவதூறு செய்பவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.
சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு மசோதா சட்டம் நீதி அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவைக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. நீதித்துறை, ஆயுதப்படைகளை கேலி செய்யும் நோக்கத்துடன் எந்த ஊடகத்தின் மூலமாகவும் அறிக்கை வெளியிடுவது, தகவல்களை பரப்புவது ஆகியற்றுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும். குற்றவாளி வாரண்ட் இன்றி கைது செய்யப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அமைச்சரவை வெளியிட்ட அறிக்கையில், சமீப காலமாக நீதித்துறை மற்றும் ராணுவம் உள்பட அரசின் சில நிறுவனங்கள் மீது அவதூறான, இழிவான, கொடூரமான தாக்குதல்களை நாடு கண்டுள்ளது. சுயநல நோக்கங்களுக்காக சிலர் வேண்டு மென்றே தவறான பிரசாரத்தை தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
- மாமியாருக்கு 7 ஆண்டு தண்டனை விதித்து நாகர்.கோர்ட்டு தீர்ப்பு
- சசிகலாவிற்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு
நாகர்கோவில் :
களியக்காவிளையை அடுத்த மூவாற்று கோணம்தேவி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27).
இவருக்கும் களியக்கா விளையைச் சேர்ந்த சவுமியா என்பவருக்கும் கடந்த 2019- ம் ஆண்டு திருமணம் நடந்தது.திருமணம் முடிந்த 7 மாதத்தில் சவுமியா தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பளுகல் போலீசார் ராஜேஷ் மற்றும் அவரது தாயார் சசிகலா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா கோட்டில் நடந்து வந்தது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து ராஜேஷ், அவரது தாயார் சசிகலா ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பு கூறினார். ராஜேஷுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ ஆயிரம் அபராதமும் சசிகலாவிற்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
- சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குப்பனூர் சத்யா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 38), கூலித்தொழிலாளி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- 1 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குப்பனூர் சத்யா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 38), கூலித்தொழிலாளி. இவர், கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சத்யா நகர் பகுதியில் சாலையை கட க்கும்போது, எடப்பாடியில் இருந்து சங்ககிரி நோக்கி, கொளத்தூர் சின்னமேட்டூரை சேர்ந்த கருப்பண்ணன் (29) என்பவர் ஓட்டி வந்த புல்லட், செல்வம் ஓட்டிவந்த வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் செல்வம் பலத்த காயமடைந்து கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து சங்ககிரி போலீஸ் எஸ்.ஐ. சுதாகரன் வழக்கு பதிவு செய்து சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, விபத்துக்கு காரணமான கருப்பண்ண னுக்கு 1 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
- தராசுகளில் போலி முத்திரை வைத்த வியாபாரிக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
- ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை
மதுரை கீழமாசி வீதியில் உள்ள தராசு நிறுவனத்தில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு போலி முத்திரை உளிகள் கண்டறியப்பட்டன.
தரப்படுத்தப்படாத எடை அளவைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. அரசு சார்பில் வக்கீல் காளீஸ்வரி ஆஜராகி வாதாடினார். விசாரணையின் முடிவில் குற்றவாளிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை, ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேற்கண்ட தகவலை மதுரை தொழிலாளர் உதவி கமிஷனர் மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.
- 200-ரூ பணம் பறித்ததாக இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
- போலீசார் ரவுடி மணியை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்
கன்னியாகுமரி :
இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 37). இவர் கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி சாலையில் சென்ற போது, திருவிடைக்கோடு பகுதியைச் சேர்ந்த மணி என்ற பல்லன் மணி வெட்டுக்கத்தியால் காயம் ஏற்படுத்தி 200-ரூ பணம் பறித்ததாக இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இவ்வழக்கு இருபது வருடங்கள் இரணியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது நேற்று இரணியல் சார்பு நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி பிரபல ரவுடி மணிக்கு 25000-ரூ அபராதம் மற்றும் 10-ஆண்டு சிறை தண்டனை விதித்தார் 20-ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் இரணியல் சார்பு நீதிமன்றம் தீர்பளித்த நிலையில் இரணியல் போலீசார் ரவுடி மணியை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்
- போக்சோ வழக்கில் கூலி தொழிலாளிக்கு 3 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
- இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கலா ஆஜரானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
சிவகாசி அருகே உள்ள மாரனேரி திருவேங்கடபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன்(24). திருமணம் ஆகவில்லை. இவர் விறகு வெட்டும் வேலைக்கு சென்று வந்தார். 2022-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி டியூசன் சென்ற 5-ம் வகுப்பு மாணவிக்கு பாண்டியராஜன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லி புத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் பாண்டியராஜனுக்கு 3 வருடம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கலா ஆஜரானார்.
- குள்ளம்பட்டி வாய்க்கால் பாலம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மினி ஆட்டோ மோதியதில் பாலத்தில் இருந்து கீழே தண்ணீரில் விழுந்து தலையில் படுகாயம் அடைந்த முருகன் உயிரிழந்தார்.
- காயம் அடைந்த நிர்மலா, மற்றும் 2 வயது குழந்தை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள மோட்டூர் காட்டுவளவு ஆவணியூரை சேர்ந்தவர் முருகன் (வயது 35). தறிதொழிலாளி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந்தேதி காலை தனது மொபட்டில் மனைவி நிர்மலா (23) மற்றும் 2 வயது மகளுடன் வட்ராம்பாளையத்தில் இருந்து ஆவணியூரில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
குள்ளம்பட்டி வாய்க்கால் பாலம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மினி ஆட்டோ மோதியதில் பாலத்தில் இருந்து கீழே தண்ணீரில் விழுந்து தலையில் படுகாயம் அடைந்த முருகன் உயிரிழந்தார். காயம் அடைந்த நிர்மலா, மற்றும் 2 வயது குழந்தை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த விபத்து குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய காவேரிப்பட்டி கிராமம் ஒக்கிலிப்பட்டி கீழ்மோட்டூ ரை சேர்ந்த அருணாசலம் (58) என்பவரை ைகது செய்தனர்.
இது குறித்து சங்ககிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, விபத்தை ஏற்படுத்திய மினி ஆட்டோ டிரைவர் அருணாசலத்திற்கு 3 ஆண்டு ெஜயில் தண்டனையும், ரூ.2500 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.