search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மளிகை கடை"

    • கடையை எப்போ திறப்போம்னு காத்திருக்கும்.
    • எந்த பொருளையும் சேதப்படுத்தாம அதுவே போயிடும்.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஒரு மளிகை கடையில் மாடுகள் தினமும் கடையை எப்போ திறப்போம்னு காத்திருந்து, கதவை திறந்ததுமே உள்ளே நுழைந்து அதற்கு தேவையானதை சாப்பிட்டு எந்த பொருளையும் சேதப்படுத்தாம அதுவே போயிடுமாம்.

    இதுகுறித்து கடையின் உரிமையாளர் மாசிலாமணி கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டம் சிங்கபுணரியில் பஸ்ஸ்டாண்டிற்கு எதிரில் மளிகை கடை நடத்திவருகிறேன். மாடுகள் நாங்கள் தினமும் கடை திறப்பதற்கு முன்பே கடைக்கு வந்து காத்து நிற்கும். நாங்கள் கடையை திறந்ததும் முதல் ஆளாக கடைக்குள் நுழைந்து அதற்கு தேவையான பொருட்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு எந்த பொருட்சேதத்தையும் ஏற்படுத்தாமல் வெளியே சென்றுவிடும்.

    தினமும் இரண்டு மூன்று தடவை கடைக்கு வரும். நாங்கள் மாடுகளை தொந்தரவு செய்வதில்லை, நாங்கள் அந்த மாடுகளை சிவனாக பாவித்து அதனை தடுப்பதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உங்கள் கடையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்து கிறீர்களா, புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துகிறீர்களா என பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
    • புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற நபர்களை தேடி வந்தனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாராபுரம் சாலை களிமேடு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் சிவசாமி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 43). சம்பவத்தன்று தனலட்சுமி கடையில் இருந்தபோது அவரது கடைக்கு ஒரு ஆண் மற்றும் பெண் ஒருவர் காரில் வந்தனர்.

    அவர்கள் நாங்கள் கோவை மண்டல மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் என கூறியதுடன், உங்கள் கடையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்து கிறீர்களா, புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துகிறீர்களா என பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

    மேலும் ரூ.2 ஆயிரத்து 500 பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் பதறிப்போன தனலட்சுமி கடையில் இருந்த பணம் ரூ.2500-ஐ அவர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி கொண்டு அந்த 2 பேரும் காரில் ஏறி சென்றுவிட்டனர்.

    இதில் சந்தேகம் அடைந்த தனலட்சுமி அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் விசாரித்து பார்த்துள்ளார். அப்போது மற்ற கடைகளுக்கு இதுபோல் கூறி யாரும் வரவில்லை என கூறியதை அடுத்து தனலட்சுமி தனது கணவரிடம் தெரிவித்தார். பின்னர் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    இந்த புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற நபர்களை தேடி வந்தனர். தொடர்ந்து அவர்கள் வந்த கார் எண்ணை வைத்து தேடி வந்தனர்.

    அப்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கள் என ஏமாற்றி பணம் பறித்து சென்றது கோவையை சேர்ந்த சக்திவேல்(24), அவரது மனைவி சத்தியபிரியா(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடை த்தனர். மேலும் அவர்கள் கூலி வேலைக்கு சென்று வந்ததுடன், இது போல் பணம் கேட்டு மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் காங்கயம் பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் அருகில் நின்றிருந்த குட்டி மற்றும் சிவகாசி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
    • திடீரென மோட்டார் வைத்திருந்த வெடி மருந்து வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் சிவகாசி, குட்டி. இவர்கள் வேட்டைக்காக வெடிமருந்தை தங்களுடைய மோட்டார் சைக்கிளில் வைத்திருந்தனர். இந்த வண்டியை இன்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள ஒரு மளிகை கடையின் முன்பு நிறுத்தி இருந்தனர். திடீரென இதிலிருந்த வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் மோட்டார் சைக்கிள் மற்றும் மளிகை கடையிலிருந்த கண்ணாடி, திண்பண்டங்கள் சேதமடைந்தன. மோட்டார் சைக்கிளில் அருகில் நின்றிருந்த குட்டி மற்றும் சிவகாசி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திடீரென மோட்டார் வைத்திருந்த வெடி மருந்து வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • புதுப்பேட்டையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பண்ருட்டிபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தீவிர ரோந்து பணியில் இருந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே புதுப்பேட்டை போலீஸ் சரகத்தில் கடைவீதியில் புகையிலை பொருட்கள் விற்ற சண்முகநாடார் நகரை சேர்ந்த வெங்கடேசன் (வயது38) என்பவரிடம் இருந்து ரூ.210 பணம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அங்குசெட்டிப்பாளையம் மெயின்ரோட்டில் புகையிலை பொருட்கள் விற்ற பூபாலன் (வயது35) கைது செய்தனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதே போல் பண்ருட்டிபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தீவிர ரோந்து பணியில் இருந்தார். அப்போது பண்ருட்டி எழில் நகரில் மளிகை கடை நடத்தி வரும் அருள் ஜோதி நகரை சேர்ந்த ஜெயச்சந்திரன்(52) தனது மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் இவர் மீத வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையில் வைக்கப்பட்டு இருந்த பண பெட்டி திறந்து இருந்தது.
    • நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சி அலு வலகம் எதிரே பல்வேறு மளிகை கடை உள்பட பல்வேறு கடைகள் செயல் பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஒரு மளிகை கடையை அதன் உரிமையாளர் வழக்கம் போல் பூட்டி விட்டு சென்று விட்டார்.

    இதை தொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையின் மேற்பகுதியில் மேல் உள்ள ஓடு நகர்ந்து இருப்பது தெரிய வந்தது.

    இதை கண்டு கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையில் வைக்கப்பட்டு இருந்த பண பெட்டியும் திறந்து இருந்தது.

    இது குறித்து கடை உரிமையாளர் நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசா ரணை நடத்தினர்.

    இதில் கொள்ளையர்கள் கடையின் ஓட்டை பிரித்து பணத்தை எடுக்க முயற்சி செய்திருக்க்றார்கள். அங்கு பணம் இல்லாத காரணத்தினால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் அவற்றை அப்படியே விட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.

    மேலும் கடையில் பொரு ட்கள் அப்படியே இருந்தது. அங்கு எதுவும் எடுத்து செல்லாதது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் யார் என தெரிய வில்லை.

    மேலும் சம்பவ இடத்துக்கு கை ரேகை நிபு ணர்கள் மற்றும் கைரேகை பிரிவு போலீசார் வந்து சோதனை செய்து தடய ங்களை சேகரித்தனர்.

    இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் குறித்து தீவிர மாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தஞ்சை மாதாக்கோட்டை பகுதியில் மளிகை கடை உள்ளது
    • கல்லாப்பெட்டியில் இருந்த ரூ .30 ஆயிரம் திருடுபோய் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவரது மனைவி பிரதீபா (வயது 35 ).

    இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடையில் இவரது மகன் கார்த்திக் இருந்து வியாபாரத்தை கவனித்தார்.

    அப்போது கல்லாப்பெட்டியை பார்த்தபோது அதில் இருந்த பணத்தைக் காணவில்லை. இது குறித்து பிரதீபா தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதில் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ .30 ஆயிரம் திருடுபோய் உள்ளது.

    அதனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழனிவேல் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • எந்தெந்த பொருட்கள் காணாமல் போயுள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 43). இவர் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று காலை 8 மணியளவில் கடையை திறந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் கடையை சுற்றிப்பார்த்தார். கடைக்குள் இருந்த சிகரெட் பாக்கெட்டுகள் திருடு போயிருந்தது. மேலும், எந்தெந்த பொருட்கள் காணாமல் போயுள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்.

    இது தொடர்பாக கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடையின் பின்புற சுவரை துளையிட்டு உடைத்து கடையினுள் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்து சென்றதை போலீசார் கண்டறிந்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடையில் கள்ளத்தனமக மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பாரில் மது குடித்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவங்கள், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதையடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில், எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் கூடுதல் எஸ்.பி., ராஜூ தலைமையில், கலால்துறை உதவி கமிஷனர் செல்வி, இன்ஸ்பெக்டர் அம்பிகா, எஸ்.ஐ.முருகன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் காரணமாக, மாவட்டத்தில் லைசென்ஸ் இல்லாத பார்கள், சந்துக் கடைகள் பெருமளவில் குறைந்துள்ளன. இருந்தும், ஆங்காங்கே ஒரு சில சந்துக் கடைகளில், கள்ளத்தனமாக மது விற்பனை நடந்து வருகிறது.

    இந்த நிலையில், மோகனூர் அடுத்த ஆண்டாபுரம் பகுதியில், கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக, நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணனுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில், மோகனூர் எஸ்.ஐ., சிவக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, அப்பகுதியில் மளிகை கடை நடத்திவரும், தி.மு.க கிளை செயலாளர் குமரவேல் (42) என்பவர், தனது கடையில் கள்ளத்தனமக மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் மளிகை கடையில் இருந்து, மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்ம நபர் கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 10 ஆயிரம் திருடி சென்றுள்ளார்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெருந்தொழுவு கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயநந்தன் (வயது 37 ). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவரது மளிகை கடையின் மேற்கூரையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர் கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 10 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார். கடையில் இருந்த குளிர் பானங்களையும் மர்ம நபர் எடுத்து குடித்துவிட்டு திருடிச் சென்றுள்ளார். வீட்டின் மேற்கூரையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர் வெளியே வரும்போது கடையின் கதவை உடைத்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து ஜெயநந்தன் அவினாசிபாளையம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • மளிகை கடைக்கு இன்று மதியம் டிப்- டாப் ஆசாமி வந்தார்.
    • கல்லா பெட்டியில் இருந்த ரூ. 40 ஆயிரத்தை திருடி விட்டு தப்பி சென்று விட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி பொன்னுசாமி தெருவில் மளிகை கடை உள்ளது. இந்த மளிகை கடைக்கு இன்று மதியம் டிப்- டாப் ஆசாமி வந்தார்.அவர் பூண்டு விலை என்ன என்று கேட்டார். கடைக்காரர் பூண்டுவை எடுக்க உள்ளே சென்ற போது டிப்- டாப் ஆசாமி கடையின் கல்லா பெட்டியில் இருந்த ரூ. 40 ஆயிரத்தை திருடி விட்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து மளிகை கடை உரிமையாளர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ. 40 ஆயிரத்தை திருடி சென்ற டிப்-டாப் ஆசாமியை தேடி வருகிறார்கள்.

    • செல்வன் தனது மோட்டார் சைக்கிளில் கடையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் ஆறுமுகராஜ் என்பவரை கைது செய்தனர்

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி ஒற்றை தெருவை சேர்ந்தவர் செல்வன் (வயது 48).

    இவர் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு செல்வன் தனது மோட்டார் சைக்கிளில் கடையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.

    அவர் தபால் நிலையம் அருகில் சென்ற போது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வன் படுகாயம் அடைந்தார். அவரை தக்கலை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று இரவு செல்வன் பரிதாபமாக இறந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இது சம்பந்தமாக அவரது சகோதரர் ராஜன், தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சங்காங்கடையை சேர்ந்த ஆறுமுகராஜ் (60) என்பவரை கைது செய்தனர்.

    • ராஜ்குமார் புதுக்கோட்டை பஜாரில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1½ லட்சம் பணம் கொள்ளை போயிருந்தது

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அரசு மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 48). இவர் புதுக்கோட்டை பஜாரில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். இன்று அதிகாலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.1½ லட்சம் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் புதுக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கொள்ளை யர்களை தேடிவருகின்றனர்.

    ×