search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகற்றம்"

    • மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும்.
    • ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்கான செலவினங்கள் வசூலிக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொ) சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வருகிற 22-ந்தேதி காலை 8 மணி முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.

    எனவே நாகை புதிய ஆர்ச் முதல் நாகூர் பாலம் வரை பிரதான சாலையில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகள், விளம்பர தட்டிகள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் அனைத்தையும் வருகிற 20-ந் தேதிக்குள் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றி விட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்குண்டான செலவினங்கள் சம்பந்தப்பட்ட வர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.

    அகற்றப்பட்ட அனைத்து பொருட்களும் நகராட்சியால் கையகப்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாலையின் இருபுறத்திலும் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
    • பெரும்பாலானவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பஸ் நிறுத்தத்தில் இருந்து போலீஸ் நிலையம் வரை உள்ள சாலையின் இருபுறத்திலும் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் சாலையோர பகுதியை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து பயன்படுத்தி வந்ததால், கழிவுநீர் கால்வாய் அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலானவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை. இந்த நிலையில் சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சிவசுப்ரமணியம் தலைமையில், உதவி பொறியாளர் ஷர்மா மற்றும் சாலை பணியாளர்கள் ரிஷிவந்தியத்தில் சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றினர்.

    • திருவள்ளூர் நகருக்கு தினந்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
    • திருவள்ளூர் ஜெ.என் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உத்தரவிட்டார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் இருந்து அனைத்து இடங்களுக்கும் செல்லும் வகையில் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளது. நவீன வசதியுடன் அரசு ஆஸ்பத்திரி, பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. மேலும் புகழ்பெற்ற வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது.

    இதனால் திருவள்ளூர் நகருக்கு தினந்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் திருவள்ளூரில் அதற்கேற்ப சாலை வசதிகள் இல்லை. குறுகிய சாலைகளே உள்ளன. அதுவும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். நடைபாதைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதேபோல் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை உள்ள ஜெ.என் சாலை, சி.வி. நாயுடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் திருவள்ளூர் ஜெ.என் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றினர். நடைபாதைகளை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் வந்தது.
    • மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

    கோவை,

    கோவை காந்திபுரத்தில் மாநகர பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து உக்கடம், சிங்காநல்லூர், ரெயில் நிலையம், காந்தி பார்க், வடவள்ளி, மருதமலை, சுந்தராபுரம் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் செல்கின்றன.

    இதனால் எப்போதுமே காந்திபுரம் மாநகர பஸ் நிலையம் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாகவே காணப்படும். பொதுமக்கள் வருவதும், போவதுமாகவே இருப்பார்கள்.

    இந்த பஸ் நிலையத்தில் நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருந்தது.

    இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் வந்தது.

    புகாரின் பேரில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் பேரில் மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் மாநகர பஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    அவர்கள் அங்கு நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த டீக்கடை, செல்போன் கடை, செருப்பு கடை உள்பட 25 கடைகளை அகற்றினர். இதனையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    காந்திபுரம் மாநகர பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த 25 கடைகள் அகற்றப்பட்டது.

    தொடர்ந்து அங்கு மீண்டும் கடைகள் வைக்காதவாறு கண்காணிக்கப்படும். நடைபாதையை ஆக்கிரமித்து அனுமதி இல்லாமல் கடைகள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா, பறக்கும் படையைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் ராசிபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் 15-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களில் சோதனையிட்டனர்.
    • மேலும் ராசிபுரத்தில் உள்ள 28 சொகுசு பஸ்களில் 18 பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டு அந்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள், எல்இடி பல்புகள் போன்றவற்றை அதிகாரிகள் அகற்றினர். மேலும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

    அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பயன்படுத்துவதால் பொது மக்களுக்கு பெரிதும் இடையூறாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வட்டார போக்குவரத்து அதிகாரி முருகேசன், ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா, பறக்கும் படையைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் ராசிபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் 15-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களில் சோதனையிட்டனர். அப்போது பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த ஏர் ஹாரன்களை அகற்றினர். மேலும் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தினால் டிரைவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ராசிபுரத்தில் உள்ள 28 சொகுசு பஸ்களில் 18 பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டு அந்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள், எல்இடி பல்புகள் போன்றவற்றை அதிகாரிகள் அகற்றினர். மேலும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

    • Removal of encroachments on houses built encroaching on streets in Veypur
    • ஆக்கிரமிப்புகளை அகற்றி அதில் வடிகால் வாய்க்கால் கட்ட தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சியில் கிராம தெரு என்பது கடந்த காலங்களில் மிகவும் அகலமானதாக இருந்துள்ளது. நாளைடைவில் வீடு கட்டியவர்கள் தங்களது வீடுகளை தங்களது பட்டா இடத்தை தாண்டி தெருக்களை ஆக்கிரமித்து பலர் வீடு கட்டியிருந்தனர்.

    இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தெருவில் தேங்கி நின்றது. அப்படி தேங்கி நிற்கும் தண்ணீர் வெளியேறவும் வழியில்லை . இக்குறைகளை போக்க ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி திருஞானம், துணை தலைவர் மஞ்சுளா செல்வராஜ், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றி வேப்பூர் கிராம தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதில் வடிகால் வாய்க்கால் கட்ட தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதன் படி ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஊராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்தும் அவர்கள் அகற்றாததால் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்ற பட்டன.இதனால் வேப்பூரில் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது.

    • அரசு ஆஸ்பத்திரியில் முதல்முறையாக பெண்ணுக்கு தைராய்டு சுரப்பி அகற்றப்பட்டது.
    • கீழக்கரை அரசு மருத்துவ மனை மருத்துவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    கீழக்கரை

    கீழக்கரை முத்துச்சாமி புரத்தைச் சேர்ந்தவர் குருவம்மாள் (50). திருமணம் ஆகவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக கழுத்தில் தைராய்டு சுரப்பி ஏற்பட்டு பெரும் அவதி அடைந்து வந்துள்ளார். இந்நிலையில்கீழக்கரை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தார்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தைராய்டு சுரப்பி இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து கீழக்கரை அரசு மருத்துவ மனையில் குருவம்மாள் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹூசைன், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சரத்குமார்.

    மயக்க மருந்து நிபுணர்கள் ராஜேஸ்வரன். மேகலா ஆகியோர் தலைமையில் 3 மணி நேரம் ஆபரேஷன் நடத்தி சுரப்பியை அகற்றினர். தலைமை செவிலியர்கள் ஆனந்தி. சுமதி ஆகியோர மருத்துவக் குழுவினர் உடனிருந்தனர்.

    இது குறித்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் குருவம்மாள் கூறுகையில், 2 வருட காலமாக இந்த தைராய்டு சுரப்பி பிரச்ச னையால் கடும் அவதிக்குள்ளா னேன்.

    வசதியின்மை யால் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியாத நிலையில் இருந்து வந்தேன். கீழக்கரை அரசு மருத்துவ மனையில் தற்போது நிரந்தர தீர்வு கிடைத்து ள்ளது. அறுவை சிகிச்சை செய்து சுரப்பிஅகற்றிய பின்பு தற்போது குண மடைந்துள்ளேன்.

    கீழக்கரை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • மேட்டூர் மீன்வளத் துறையின் உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில், ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப் படும் செய்யப்படும் எந்திரங்கள் அடங்கிய கட்டிடம் அமைக்கப்பட்டு இருந்தது.
    • ஐஸ் கட்டி உற்பத்தி எந்திரம் பழுதடைந்து இருந்ததால் கடந்த பல வருடங்களாக ஐஸ் கட்டி உற்பத்தி என்பது நடைபெறாமலே இருந்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் பிடிக் கப்படும் மீன்களை பாது காத்து வைப்பதற்காக, மேட்டூர் மீன்வளத் துறை யின் உதவி இயக்குனர் அலு வலக வளாகத்தில், ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப் படும் செய்யப்படும் எந்தி ரங்கள் அடங்கிய கட்டிடம் அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், ஐஸ் கட்டி உற்பத்தி எந்திரம் பழுதடைந்து இருந்ததால் கடந்த பல வருடங்களாக ஐஸ் கட்டி உற்பத்தி என்பது நடைபெறாமலே இருந்தது. தற்போது இந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு உதவி இயக்குனருக்கு புதிதாக அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.

    இதையடுத்து பழைய ஐஸ் கட்டி உற்பத்தி செய்யப் படும் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    • ஆவின் பெட்டியின் கதவுகள் கீழே விழும் அளவுக்கு தொங்கிக் கொண்டிருந்தது.
    • பழுது இல்லாத 2 புதிய பெட்டிகள் மட்டும் அங்கு உள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம் மதுக்கரை ரோடு அருகே அஷ்ட லட்சுமி நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இப்பள்ளியின் எதிரே உள்ள காலி இடத்தில் பழைய ஆவின் பெட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    அவை அனைத்தும் மழையிலும், வெயிலிலும் காய்ந்து மிகவும் துருப்பிடித்த நிலையில் காணப்பட்டது. ஆவின் பெட்டியின் கதவுகள் கீழே விழும் அளவுக்கு தொங்கிக் கொண்டிருந்தது.

    குழந்தைகள் விளையாட்டாக அந்த கதவை இழுத்தால் கூட அவை அனைத்தும் சரிந்து விழும் நிலை இருந்து வந்தது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு ஏதும் ஆபத்து ஏற்படுமோ என்று பெற்றோர்கள் அச்சமடைந்த நிலையில் இருந்து வந்தனர்.

    இதுதொடர்பாக மாலைமலர் நாளிதழில் தனியார் பள்ளி முன்பாக வைக்கப்பட்டிருக்கும் ஆவின் பெட்டிகள் அகற்றப்படுமா? என்று செய்தி வெளியிடப்பட்டது.

    அதன் பின்னர் தற்போது அங்கிருந்த பழைய ஆவின் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. பழுது இல்லாத இரண்டு புதிய பெட்டிகள் மட்டும் அங்கு உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு எந்த வித பயமும் இல்லாத நிலை தற்போது நிலவி வருகிறது.

    இதன் காரணமாக அந்த பகுதி மக்களும், பெற்றோர்களும் மாலை மலர் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்தனர். 

    • மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் அகற்றப்பட்டது.
    • பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.



    பயணிகள் நிழற்கூடத்தை சுத்தம் செய்த ஊழியர்கள். 

     திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் பயணி கள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடத்தில் இருந்து மதுரை, ராமேசுவரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த பஸ் நிலையத்தில் இருந்து செல்வது வழக்கம். இந்த நிழற்கூடத்தை மூதாட்டி ஒருவர் தனது வீடு போல் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தார்.

    அவர் அந்த நிழற்கூடத்தில் பஸ் பயணிகள் யாரையும் அமர விடாமலும், அவதூறாக பேசியும் வந்துள்ளார். மேலும் அந்த மூதாட்டி நரிக்குடியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மதுபான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை பஸ் நிலையம் அருகிலேயே மலை போல் குவித்து வைத்திருந்தார்.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியது. இதனால் பயணிகள் நிழற்கூடத்தின் அருகில் குவித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவேண்டும் என்று பஸ் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி 'மாலைமலர்' நாளிதழில் வெளிவந்தது.

    இதையடுத்து நரிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வரன் உத்தரவின் பேரில் நரிக்குடி ஊராட்சி செயலர் கவிதா மேற்பார்வையில் ஊராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். பஸ் நிறுத்தத்தின் அருகில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்களையும் அங்கிருந்து அகற்றினர்.

    பின்னர் பஸ் நிறுத்தத்தில் இருந்த ஆக்கிரமிப்பையும் அகற்றி சுத்தப்படுத்தினர். இதனால் பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


    • விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்கள் மழையில் சிக்கி விணாவதை தடுக்க புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
    • விற்பனை கூட அதிகாரிகளோ, திருக்கோவிலூர் நகராட்சி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலுாரை அடுத்துள்ள அரகண்டநல்லுாரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்படுகிறது. இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்து செல்கின்றனர். அந்த அளவுக்கு மாநில அளவில் பிரசித்தி பெற்ற ஒழுங்குமுறை விற்பனை கூடமாக இது விளங்குகிறது. இங்கு வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி அரசு பல்வேறு வசதிகள் செய்து வருகின்றது. அதன்படி விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்கள் மழையில் சிக்கி விணாவதை தடுக்க புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. முன்னதாக இங்கிருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட சுவர் மற்றும் செங்கல் காரைகள் புதிய கட்டிடத்தின் முன்பாக கொட்டப்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டுவரும் தானியங்களை புதிய கட்டிடத்தில் வைக்க முடியாமல் வெளியிலேயே வைத்துள்ளனர். மேலும், இதனை கொள்முதல் செய்யும் வியாபாரிகளும் தானியங்களை பாதுகாக்க முடியாமல் அவதியுறுகின்றனர். இந்த கட்டிட காரைகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இங்கு இருக்கிறது. இதனை அகற்ற விற்பனை கூட அதிகாரிகளோ, திருக்கோவிலூர் நகராட்சி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புதிய கட்டிடத்தின் எதிரில் இருக்கும் பழைய கட்டிடத்தின் காரைகளை அகற்றி விவசாயிகளின் நலன் காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குமாரபாளையம் சேலம் சாலையில் கத்தேரி பிரிவு முதல் பழைய காவேரி பாலம் வரை சாலையின் இருபுறமும் வியாபாரிகள் பாதையை ஆக்கிரமிப்பு செய்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.
    • ஸ்டேட் வங்கி எதிரில் சாலையோர துணிக்கடைகள் இருப்ப தால், பஸ், லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேலம் சாலையில் கத்தேரி பிரிவு முதல் பழைய காவேரி பாலம் வரை சாலையின் இருபுறமும் வியாபாரிகள் பாதையை ஆக்கிரமிப்பு செய்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.

    இது குறித்து பல தரப்பி னர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நெடுச்சா லைத்துறையினர் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சரவணா தியேட்டர் எதிரில் பழைய இருசக்கர வாக னங்கள் விற்பனை செய்யும் நபர்கள், நடைமேடை முழுதும் ஆக்கிரமிப்பு செய்து வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர். அவைகளை எடுக்க சொல்லி அறிவுறித்தினர்.

    மேலும் ஸ்டேட் வங்கி எதிரில் சாலையோர துணிக்கடைகள் இருப்ப தால், பஸ், லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இத னால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், பலர் சாலை யினை ஆக்கிரமிப்பு செய்து துணிக்கடைகளை வைத்துள்ளனர். இது தவறு என சுட்டிக்காட்டி அகற்ற வேண்டிய நகராட்சி நிர்வா கத்தினர் வரி வசூல் செய்வதை காரணமாக காட்டி, கடை உரிமையா ளர்கள் கடைகளை அகற்ற மறுக்கின்றனர். மிக குறுகலான சாலையில் இந்த கடைகள் இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு, விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது என்றனர். அந்த துணி கடைகளின் ஆக்கிர மிப்புகளை அகற்றவும் பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

    மேலும் சாலைகளில் வைக்கப்பட்ட ஸ்டாண்டிங் விளம்பர போர்டுகள், பிளெக்ஸ் போர்டுகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன. இந்த பணி யில் நெடுஞ்சாலைத்துறை யினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    ×