search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகற்றம்"

    • ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஈரோடு பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஏர்ஹாரன் பயன்படுத்திய 20 பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு சரக போக்குவரத்து துணை ஆணையர் சுரேஷ் உத்தரவுப்படி, ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி பதுவைநாதன் தலைமையில் ஆய்வாளர்கள் சுரேந்திரகுமார், சிவகுமார், மாசுகட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞான அதிகாரி தேவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஈரோடு பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அதிக ஒலி எழுப்பி, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஏர்ஹாரன் பயன்படுத்திய 20 பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டன.

    பிற குறைபாடுகள் கண்டறியப்பட்ட பஸ்களுக்கு, தணிக்கை அறிக்கை வழங்கி, அபராதம் விதிக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    • சாலையில் ஓடையின் மேல் கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள் தகர சீட்டுகளை அகற்றினார்கள்.
    • ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஓடையின் மேல் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மாநகர் முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வடசேரி பகுதியில் இன்று 4-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    வடசேரி முதல் வெட்டூர்ணி மடம் வரை உள்ள சாலையில் ஓடையின் மேல் கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள் தகர சீட்டுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்றினார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி வருகை எதிரொலி
    • பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தேசிய ஒற்றுமை பயணம் என்ற நடைபயணத்தை மேற்கொள்கிறார்.

    இந்த நடை பயணத்தின் தொடக்க விழா வருகிற 7-ந் தேதி மாலையில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடக்கிறது. அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தியுடன் ஒரே மேடையில் தமிழக முதல் -அமைச்சர் மு. க. ஸ்டாலினும் கலந்து கொண்டு பேசுகிறார்.

    மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதற்காக ராகுல்காந்தி வருகிற 7-ந் தேதி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார்.

    அங்குஉள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அமைந்து உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவர் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு தனது நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கும் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி மண்டபம் பஜாரில் நடைபாதையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகளும் அகற்றப்பட்டு உள்ளன. கன்னியாகுமரி சிறப்புநிலைபேரூராட்சி நிர்வாகம் இதற்கான அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
    • கூட்டத்தில் எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி சாதாரண கூட்டம் சேர்மன் கோகிலாராணி நாராயணன் தலைமையில் நடந்தது.

    துணை சேர்மன் கான்முகமது, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நகரில் பல்வேறு வார்டுகளில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்தும், தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி இருப்பதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதற்கு பதில் அளித்து பேசிய சேர்மன் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக தேங்கும் கழிவுநீர் செல்லும் பாதைகள் அடைபட்டு இருப்பதால் கழிவு நீர் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே அனைத்து வார்டுகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வார்டு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அதன் அடிப்படையில் வரும் காலங்களில் ஆக்கிர மிப்புகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு குடிநீர் பாதைகளும், கழிவு நீர் பாதைகளும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் முறையாக ஏற்படுத்தி தரப்படும் என்றார். இதில் எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

    கடலூர் ரோட்டில் உள்ள முல்லா ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் 2-வது நாளாக இன்று அகற்றம் செய்யப்பட்டன.

    கடலூர்:

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விருத்தாசலத்தில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி விருத்தாசலம் தாசில்தார் தனபதி தலைமையில் நடைபெற்றது.

    கடலூர் ரோட்டில் உள்ள முல்லா ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் 2-வது நாளாக இன்று அகற்றம் செய்யப்பட்டன. விருத்தாசலம் தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அப்புறப்படுத்தினர்.

    அப்போது எந்தவித பிரச்சினை சம்பவம் எதும் நிகழாமல் இருக்க விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆக்கிரப்பு அகற்றும் பணி நடைபெற்றதால் கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் சாலை மாற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

    • வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
    • வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிகளவிலான வாகனங்களில் மக்கள் வருவார்கள்.

     நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்க ண்ணியில் உலக புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்இதனால் வேளாங்கண்ணியில் எந்த நேரமும் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வருவாய்த்துறை சார்பில் வட்டாட்சியர் அமுதவிஜய ரங்கன் தலைமையில், வேளாங்கண்ணி பேரூராட்சி செயலர் பொன்னுசாமி முன்னிலையில் காவல்துறை யினர், பேரூராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் உதவியுடன் வேளாங்கண்ணி ஆர்ச் மற்றும் கடற்கரைச் சாலை, கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கொட்டகை உள்ளிட்டவை களை எந்திரம் உதவியுடன் அகற்றினர்.

    வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிக அளவிலான வாகனங்களில் மக்கள் வருவார்கள். இதனால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது
    • படிக்கட்டுகள், கடைகள் முன்பு போடப்படும் தகர சீட்டுகளையும் அப்புறப்படுத்தினர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநக ராட்சி அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள்.

    நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று நடந்தது.

    நகர் நல அதிகாரி பொறுப்பு ஜாண், சுகாதார ஆய்வாளர்கள் மாதவன் பிள்ளை, ராஜேஷ் ஆகி யோர் தலைமையிலான ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட னர். ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது.படிக்கட்டுகள், கடைகள் முன்பு போடப்படும் தகர சீட்டுகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

    சுமார் 60 கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை ஊழியர்கள் அகற்றினர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • சாலையோர ஆக்கிரமிப்புகள் 2-வது நாளாக அகற்றப்பட்டது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலூர் மெயின் ரோட்டில் யூனியன் அலுவலகம் அருகே சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

    இந்தப்பணியில் மேலூர் நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், நகர அமைப்பு ஆய்வாளர் சரவணன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பாலமுருகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும்போது கடைக்கா ரர்களுக்கும், அலுவலர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த மேலூர் நகராட்சி கவுன்சிலர்கள் திவாகர், ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொள்ள உதவினர். 2வது நாளாக இன்றும் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

    • கடையின் உரிமையாளர்களுக்கு 2 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • மாநகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலையில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. எனவே அதனை அகற்ற வேண்டுமென மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் விதிகளை மீறி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடையின் உரிமையாளர்களுக்கு 2 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் பலர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.

    இதையடுத்து இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன்,தெற்கு தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிகள், பலகைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்பு பொருட்கள் அகற்ற ப்பட்டன. இதனால் திருப்பூர் பல்லடம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • கட்டளை மேட்டு வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது
    • சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டன

    கரூர்:

    மகாதானபுரத்தில் கட்டளை மேட்டு வாய்க்கால் வலது கரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. கரூர் மாவட்டம் மகாதானபுரம் வடக்கு பகுதியில் கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிவு வாய்க்காலின் வலது கரையில் கம்பி வேலி அமைத்து தனியார் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இது தொடர்பாக புகார்கள் வரபெற்றதை அடுத்து சர்வே (நில அளவீடு) பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் முருகன் தலைமையில் மாயனூர் நீர்வளத்துறை உதவி பொறியாளர் ஸ்ரீதர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.

    • நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
    • 6-வது வார்டில் பதிக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் கற்கள் மீது கழிவு நீர் குழாய் அமைக்க வேண்டும்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகள் வருமாறு:-

    வாடிப்பட்டி பகுதியில் விவசாய நிலங்கள் உள்ள இடங்களில், ஊரணிக்கரை திறந்தவெளியில் மதுபானம் குடித்துவிட்டு பாட்டில்களை சாலையிலும், வயல்வெளி களத்தில் உடைத்து வீசி எறியும் குடிமகன்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    வாடிப்பட்டி பஸ் நிலையம் எதிரில் கல்வித்துறை அலுவலகம் அருகில் பள்ளிக் கூட வாசலில் ஆக்கிரமிப்பு செய்து கடைகளையும், தாதம்பட்டி மந்தையில் ஓய்வூதியர் சங்க கட்டிடத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதையை சீரமைக்க வேண்டும்.

    வாடிப்பட்டி பேரூராட்சி 6-வது வார்டில் பதிக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் கற்கள் மீது கழிவுநீர் குழாய் அமைக்க வேண்டும்.

    மேலும் அதன் மீது வேகத்தடை போல் அமைந்துள்ள சிமெண்டு திண்டுகளை அகற்ற வேண்டும். வாடிப்பட்டி பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் எளிதாக பாயும் விதத்தில் அதிகாலை நேரங்களில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

    தற்போது நெல்அறுவடை பணி தொடங்க உள்ளதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். வாடிப்பட்டி பகுதியில் உரக்கடைகளில் விலைபட்டியல் மற்றும் பொருள் இருப்பு விவரங்களை தினந்தோறும் எழுதி வைக்க வேண்டும்.

    கட்டக்குளம் கண்மாய், வடகரை கண்மாய் பகுதிகளில் முட்புதர்களை அகற்றி அதில் பல்கி பெருகியுள்ள காட்டுப்பன்றிகளை வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும். சாத்தையாறு அணை பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

    பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை இருந்த இடத்தை சீரமைத்து அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏல நடவடிக்கையில் செல்லாத காசுகளை வைத்து ஏலம் நடத்தும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    • கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்றக்கோரி ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
    • ராமநாதபுரத்தில் இந்து தேசிய கட்சி மாநில செயலாளர் பேசினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் இந்து தேசிய கட்சி மாநில செயலாளர் ஹரிதாஸ் சர்மா கூறியதாவது:-

    மக்களின் பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் தொடர்ந்து தமிழக அரசும், காவல்துறையும் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டனத்திற்குரிய செயல் ஆகும்.இவற்றை விரைவில் அகற்றாவிட்டால் இந்து தேசிய கட்சியின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையை இந்து தேசிய கட்சி மேற்கொள்ளும்.

    இது குறித்து ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×