search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233013"

    • 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • 10 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது.

    பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.

    கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

    இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 938 பேர் கொரோ னா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்து ள்ளனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 10 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுவரை தினசரி பாதிப்பு 1,2 என பதிவாகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3 பதிவாகி உள்ளது.

    • ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • தொடர்ந்து காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ. சி. பூங்கா மைதானத்தில் நடைபெற்ற 74 -வது குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து காவல் துறை, மருத்துவம், வேளாண்மை, பள்ளிக்கல்வி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட துறைகளில் சாதனை புரிந்த 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

    இதனையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வழக்கமாக குடியரசு தின விழாவில் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

    ஆனால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    குடியரசு தின விழாவையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தளங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், காளை மாட்டு சிலை, மணிக்கூண்டு, பஸ் நிலைய,ம் ஸ்வஸ்திகார்னர், ஜி.எச். ரவுண்டானா, ரெயில் நிலையம் போன்றவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் கோபி, பவானி, அந்தியூர், பெருந்துறை, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஈரோடு ரெயில் நிலையத்திலும் பயணிகள் உடமை தீவிர பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. 

    • 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று சுதீர், திலீப் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர்.
    • சுதீர், திலீப் ஆகிய இருவரும் அவரது உறவினர்கள், நண்பர்கள் மூலமாக கூகுள் பே மூலம் பெற்ற ரூ.40 ஆயிரத்தை மர்மநபர்களுக்கு அனுப்பினர்.

    ஈரோடு,

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதீர்(29), திலீப்(32) ஆகியோர், ஈரோடு வீரப்பன் சத்திரம் கொத்துக்காரர் தோட்டம் பகுதியில் தங்கி அருகில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில், கடந்த 14-ந் தேதி 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று சுதீர், திலீப் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.5,200 ரொக்கத்தை பறித்துக்கொண்டு இந்த பணம் போதாது என கூறி அவர்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை கூகுள் பே மூலம் அனுப்புமாறு ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து, சுதீர், திலீப் ஆகிய இருவரும் அவரது உறவினர்கள், நண்பர்கள் மூலமாக கூகுள் பே மூலம் பெற்ற ரூ.40 ஆயிரத்தை மர்மநபர்களுக்கு அனுப்பினர். இதையடுத்து அந்த கும்பல் காரில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து சுதீர், திலீப் இருவரும் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ஈரோடு பெரியவலசு, ராதாகிருஷ்ணன் வீதியைச் சேர்ந்த கார்த்திக்(34), நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காட்டுவலசை சேர்ந்த பூபதி(21), பீகார் மாநிலத்தை சேர்ந்த பிபின்குமார்(22) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஈரோடு பகுதியை சேர்ந்த லிங்கேஷ்(47), பிரவீன்(29) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். 

    • ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நேற்று இரவு 11 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பொது மக்களுடன் இணைந்து புத்தாண்டு வரவேற்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

    ஈரோடு:

    2023-ம் ஆண்டு புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதற்காக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நேற்று இரவு 11 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அதிகரித்தது.

    இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் வந்திருந்தனர். சரியாக நள்ளிரவு 12 மணி அளவில் புத்தாண்டு பிறந்ததும் குடியிருந்த பொதுமக்கள் உற்சாகம் மிகுதியில் ஹேப்பி நியூ இயர் என்று விண்ணை தொடும் அளவுக்கு கோஷம் எழுப்பினர். ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் டவுன் டி.எஸ்.பி.ஆனந்த குமார் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் குறித்து போலீசார் கண்காணி த்தனர்.

    அப்போது சில இளைஞர்கள் மது அருந்து கொண்டு உற்சாகமிகுதியில் கத்திக்கொண்டு சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கு போலீசார் இவ்வாறு மது அருந்தி செல்வது தவறு என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இன்னும் சில இளைஞர்கள் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததால் அவர்களது வாகனங்களை வாங்கிக் கொண்டு அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து பின்னர் அந்த வாகனங்களை திரும்ப ஒப்படைத்தனர்.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பொது மக்களுடன் இணைந்து புத்தாண்டு வரவேற்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

    ஈரோடு காளைமாட்டு சிலை, ரெயில் நிலையம், பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், மணிக்கூண்டு ஜி.எச். ரவுண்டானா , மக்கள் அதிக கூடும் இடங்கள், வழிபாட்டு தளங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புத்தாண்டையொட்டி இன்று அதிகாலையிலேயே கோவில் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மக்கள் புத்தாடைகள் அணிந்து சாமியை வழிபட்டனர்.

    புத்தாண்டையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக பயணிகள் கூட்டம் அலை மோதி காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமை களை தீவிர பரிசோதனை செய்து அதன் பிறகு உள்ளே அனுமதித்தனர்.

    மேலும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனையும் செய்தனர். மேலும் ரெயிலில் வந்த பயணிகள் உடைமை களையும் பரிசோதனை செய்தனர்.

    கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, மொடக்குறிச்சி,கொடுமுடி, சத்தியமங்கலம், பெருந்துறை என மாவட்ட முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. 

    • சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • காலிபணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

    ஈரோடு:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தமிழகத்தில் இன்று சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் நடந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் சுப்புலட்சுமி, செல்வி, கவுரி, சாந்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    இந்த போராட்டத்தில் காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலை படியுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும்.

    காலிபணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

    மணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம்மும், உதவியாள ர்களுக்கு ரூ.3 லட்சமும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மார்க்கெட் மின்பாதையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் வினியோகம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மார்க்கெட் மின்பாதையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் ஹவுஸ் ரோடு, எஸ்.கே.சி.ரோடு, முத்துவேலப்பாவீதி, மீனாட்சிசுந்தரனார் ரோடு பகுதி, கைகோளன்தோட்டம், வாமலை வீதி, டி.வி.எஸ். வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட் மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை ஈரோடு மின்வாரிய செயற்பொறியாளர் ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    • தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் 3 மையங்களில் நடைபெற உள்ள தேர்வினை 5,920 பேர் எழுத உள்ளனர்.

    ஈரோடு:

    தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ளது.

    இத்தேர்வு ஈரோடு மாவட்டத்தில் திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, பெருந்துறை அருகே உள்ள நந்தா என்ஜினியரிங் கல்லூரி மற்றும் கொங்கு கல்லூரி என 3 மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வினை 957 பெண்கள், 4,963 ஆண்கள் என 5,920 பேர் எழுத உள்ளனர்.

    தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.40 மணிக்கு முடிவடைகிறது. இதில் தமிழ் பாடங்களில் இருந்து 80 வினாக்களும், பொது அறிவு 70 வினாக்களும் என மொத்தம் 150 வினாக்களுக்கு தேர்வு நடக்கும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே அவர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள தேர்வு மையத்திற்கு வர வேண்டும். அவர்கள் பிரஸ்கிங் முறையில் சோதிக்கப்பட்ட பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர்.

    இந்த தேர்வு அறை கண்காணிப்பிலும், பாதுகாப்பு பணியிலும் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் ஏ.டி.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள் என மொத்தம் 600 போலீசார் ஈடுபட உள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை 3 மையங்களிலும் மாவட்ட காவல் துறை சார்பில் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. 

    • பவானி கூடுதுறையில் அதிகாலை 3 மணியில் இருந்து அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.
    • கருங்கல்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அய்யப்பா சேவா நிறுவனம் சார்பில் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஈரோடு:

    சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து கோவிலுக்கு செல்வது வழக்கமாகும்.

    இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டலபூஜைகளுக்காக நேற்று நடைதிறக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, ஈரோடு, கோபி, பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அய்யப்ப பக்தர்கள் இன்று கார்த்திகை 1-ந் தேதியையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பவானி கூடுதுறையில் அதிகாலை 3 மணியில் இருந்து அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. இதேபோல ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அய்யப்பா சேவா நிறுவனம் சார்பில் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாலை அணிந்து கொண்டனர்.

    இதேபோல் கோபி பகுதியில் உள்ள பச்சைமலை பவளமலை முருகன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவி ல்களில் இன்று காலை அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் மாலை அணிவித்து கொண்டனர்.

    • அம்மாபேட்டை பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவியது.
    • தொடர் மழை காரணமாக இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. தாளவாடி மற்றும் பர்கூர் மழைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    பவானி, காவிரி ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டம் குளிர்ச்சியாக மாறியது. வனப்பகுதிகள் அனைத்தும் பசுமையாக காட்சி அளிக்கிறது.

    தொடர் மழை காரணமாக இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    நேற்று இரவு பல்வேறு இடங்களில் மழை பெய்யாததால் இரவில் இருந்தே குளிருடன் பனிப்பொழிவும் இருந்து வந்தது. குறிப்பாக அம்மாபேட்டை பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவியது.

    இதனால் பவானி-மேட்டூர் செல்லும் மெயின் ரோட்டில் காலை 7 மணி வரை எதிர் எதிரே வரும் வாகனங்கள் தெரிய வில்லை. இதனால் காலை நேரத்திலும் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கை எரிய விட்டு வந்து சென்றது.

    கடும் குளிரால் மலை பிரதேசத்தை போல் ஈரோடு மாவட்டம் மாறி விட்டது.

    • மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் 4-வது முறையாக மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் 8 முகாம்களில் 600 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்

    ஈரோடு, செப். 9-

    கர்நாடக மாநிலத்தில் மழை தீவிரமடைந்ததால் மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் 4-வது முறையாக மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றுக் கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் பவானி புதிய பஸ் நிலையம் கந்தன் நகர், காவிரி நகர், பசவேஸ்வரர் தெரு, மீனவர் தெரு, பழைய பாலம், கீரைக்கார வீதி, பாலக்கரை, பழைய பஸ் நிலையம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த 400 -க்கும் மேற்பட்ட மக்கள் மீண்டும் அருகே உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கொடுமுடி காவிரி கரையோர பகுதிகளிலும் வெள்ளம் நீர் புகுந்தது.

    இதனால் கொடுமுடி அடுத்த இலுப்பு தோப்பு, சத்திரப்பட்டி போன்ற பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் இந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அருகில் இருக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஈரோடு மாவட்டத்தில் 8 முகாம்களில் 600 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு குறைய தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக இன்று மேட்டூர் அணையிலிருந்து 80 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    எனினும் ஈரோடு காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 8 முகாம்களில் 600 பேர் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 874 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 821 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 874 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • ஈரோட்டில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் வினி யோகம் இருக்காது.
    • இந்த தகவலை ஈரோடு மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினி யோகம் இருக்காது.

    ஈரோடு அகில்மேடு வீதி, நாச்சியப்பா வீதி, நேரு வீதி, முத்துசாமி வீதி, சத்தி ரோடு பிருந்தா வீதி, கிருஷ்ணா செட்டி வீதி, ஏ.பி.டி. வீதி, இந்திரா வீதி, பழைய பாளையம், கவுந்தப்பாடி மார்க்கெட், சத்தி ரோடு, நால் ரோடு, சிறுவலூர் ரோடு, ஈரோடு ரோடு பாரதியார் வீதி, பவானி ரோடு, பைபாஸ், அம்மன் கோவில் தோட்டம், வி.ஐ.பி. நகர், தர்மாபுரி, செட்டி பாளையம், ஏ.கே. வலசு, எஸ்.பி. பாளையம், எல்லீஸ் பேட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இரு க்காது.

    இந்த தகவலை ஈரோடு மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    ×