search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தயாரிப்பு"

    • சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.
    • கிழங்கு மாவு தயாரிக்கும் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    தமிழகத்தில் வருகிற 31ந் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, இந்து அமைப்புகள் சாா்பில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எளிமையாக கொண்டாடப்பட்ட நிலையில், நிகழாண்டு வெகுவிமரிசையாக கொண்டாட இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அதே வேளையில், போதிய அளவில் சிலைகள் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சி மாதேஸ்வரன் நகரைச் சோ்ந்த சிலை விற்பனையாளரும், இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவருமான கே.பாலாஜி கூறியதாவது:- கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிலை விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் தயாராகும் சிலைகளைப் பெற்று இங்கு வா்ணங்கள் பூசி விற்பனை செய்கிறோம். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், கிழங்கு மாவு, பேப்பா் தூள், வாட்டா் கலா் பயன்படுத்தி சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், அண்மைக் காலமாக கிழங்கு மாவு தயாரிக்கும் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளன. வழக்கமாக நவம்பா் மாதம் சிலை தயாரிப்பு பணி துவங்கி ஆகஸ்ட் மாதத்தில் பணி நிறைவடையும். மாவு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இம்முறை ஜனவரி மாதத்துக்குப் பின்பே சிலை தயாரிப்புப்பணி துவங்கியது. நீதிமன்ற உத்தரவுப்படி 5 அடிக்கு உள்பட்ட சிலைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    கொரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக விநாயகா் சதுா்த்தி விழா எதிா்பாா்த்த அளவு கொண்டாடப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னா் தற்போது சிறப்பாக கொண்டாட இந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன. சிலை தயாரிப்பு குறைந்துள்ளதால் எதிா்பாா்க்கும் அளவு சிலைகள் கிடைப்பது சந்தேகமே. வழக்கமாக 400க்கும் அதிகமான சிலைகள் விற்பனைக்கு வரும். இந்த முறை விநாயகா் சதுா்த்திக்கு குறைவான நாட்களே இருப்பதால் 150 சிலைகள் மட்டுமே வந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பொதுமுடக்கத்தால் சிலைகள் விற்பனையின்றி கிடங்குகளில் தேக்கமடைந்திருந்தன. தற்போது அந்த சிலைகள் அனைத்தும் விற்பனையாகி விட்டன.

    இதில் 3 அடி சிலை ரூ.2,500க்கும், 5 அடி சிலை ரூ.5,0000க்கும், 8 அடி சிலை ரூ.10,000க்கும் விற்பனை செய்து வருகிறோம். விலைவாசி மற்றும் சிலை உற்பத்தி செலவு அதிகரித்த போதிலும் கொரோனா தாக்கத்தில் இருந்து இப்போதுதான் மீண்டு வந்திருப்பதால் சிலைகளின் விலையை உயா்த்தாமல் பொதுநலன் கருதி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம்.

    புதிய சிலைகள் ஆா்டா் கொடுக்கவும், பெரிய சிலைகள் கேட்டும் பலா் வருகின்றனா். நாட்கள் இல்லாததால் புதிய ஆா்டா் எடுக்கவில்லை. பெரிய சிலைகள் இல்லாததால் சின்ன சிலைகளுக்கு முன்தொகை கொடுத்துச் செல்கின்றனா். விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் சிலை தயாரிப்பை மட்டும் நம்பி 20 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சிலை தயாரிப்புத் தொழில் பாதிப்படைந்தது. சிலை தயாரிப்பாளா்கள் வங்கியில் வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாததால் இந்த ஆண்டு சிலை தயாரிப்புக்கு வங்கிகள் கடன் உதவி வழங்கவில்லை. இதனாலும் சிலை தயாரிப்புப் பணி தாமதமாகியுள்ளது. சிலை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த பலா் விவசாயம் உள்ளிட்ட பிற தொழில்களுக்கு கூலி வேலைக்கு சென்றுவிட்டனா்.

    விநாயகா் சிலை தயாரிப்புக்குத் தேவையான குச்சி கிழங்கு மாவு தட்டுப்பாடின்றி கிடைக்கவும், சிலை தயாரிப்பை நம்பி உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளா் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

    • பல்வேறு வகைகளில் மறுசுழற்சி ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.
    • ஆடை ரகங்களின் மதிப்பு மென்மேலும் உயரும்.

    திருப்பூர்:

    சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கைகொடுக்கும்வகையில், உலகளாவிய நாட்டு வர்த்தகர்கள் தங்கள் ஷோரூம்களில், மறுசுழற்சி ஆயத்த ஆடை ரகங்கள் விற்பனையை படிப்படியாக அதிகரித்து வருகின்றனர்.ஆடை தயாரிப்பில் வீணாகும் கழிவு துணியை மீண்டும் பஞ்சாக மாற்றியும், பிளாஸ்டிக் பாட்டில்களை சிதைத்து என பல்வேறு வகைகளில் மறுசுழற்சி ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

    தமிழக நூற்பாலைகள், கடந்த மே மாதம் வரை 18 மாதங்கள் தொடர்ந்து ஒசைரி நூல் விலையை உயர்த்தி வந்தன.உற்பத்தி செலவினம் அதிகரிப்பு, நிதி நெருக்கடி, வர்த்தகர்களிடம் ஆடைகளுக்கு போதிய விலை உயர்வு பெறமுடியாமை உள்ளிட்ட காரணங்களால் திருப்பூரில் பல நிறுவனங்கள் மறு சுழற்சி ஆடை தயாரிப்பில் புதிதாக அடியெடுத்துவைத்துள்ளன.

    இது குறித்து திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:-

    கட்டிங் வேஸ்ட்ஐ சிதைத்து, பஞ்சாக மாற்றி அதனுடன் 50 சதவீதம் பாலியெஸ்டர் இழை கலந்து ஓ.இ., மில்களில், மறுசுழற்சி நூல் தயாரிக்கப்படுகிறது. இந்த நூலில், குளிர் கால ஆயத்த ஆடை ரகங்கள் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.சாயமேற்றிய துணியே சிதைத்து பஞ்சாக மாற்றப்படுகிறது.அதனால், மறுசுழற்சி ஆடை தயாரிப்பில் சாயமேற்றுதல் தவிர்க்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.மறுசுழற்சி நூலிழை ரகங்கள் விலை குறைவாக உள்ளதால் ஆடை தயாரிப்பு செலவினம் சீராகவே உள்ளது. கடந்தாண்டு நிர்ணயித்த அதே விலைக்கே இந்தாண்டும் ஆடை விலையை நிர்ணயிக்கமுடிவதால், வர்த்தக வாய்ப்புகளை கைப்பற்றுவதும் எளிதாகிறது.

    குறிப்பிட்ட நிறங்களில் மட்டுமே ஆடை தயாரிக்க முடியும் என்பதுதான் மறுசுழற்சி ஆடை தயாரிப்பில் உள்ள குறையாக பார்க்கப்படுகிறது.ஆனாலும் எதிர்காலத்தில் சர்வதேச அளவில் மறுசுழற்சி ஆடை ரகங்களின் மதிப்பு மென்மேலும் உயரும் என்பதில் சந்தேகமில்லை. பிரான்டட் நிறுவனங்கள், மறுசுழற்சி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் தரச்சான்று பெற்றிருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னிமலை பகுதியிலும் கந்து வட்டி கொடுமை உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றது.
    • அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

    சென்னிமலை: –

    சென்னிமலை பகுதியில் நிதி நிறுவனம், பைனான்ஸ், அடகு கடை என்ற பெயரில் தினசரி வசூல் விட்டு அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

    சென்னிமலை அருகே மணிமலைகரடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றும் நபர் கடன் தொல்லையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை தொடர்ந்து சென்னிமலை பகுதியிலும் கந்து வட்டி கொடுமை உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றது.

    அதை தொடர்ந்து சென்னிமலை ஒன்றிய பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் கடைக்காரர்களை குறிவைத்து நிதி நிறுவனம், பைனான்ஸ், அடகு கடை என்ற பெயரில் வெற்று பத்திரங்களில் கையெழுத்து பெற்று கடன் கொடுத்து தினசரி வசூல், மீட்டர் வட்டி, தின வட்டி என அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

    இந்த ரகசிய தகவல் கசிய தொடங்கியதால் சென்னிமலை பகுதியில் கந்து வட்டி கும்பல் அலறிதுடித்து வருகின்றனர்.

    தற்போது பணம் பெற்ற நபர்களிடம் மிரட்டும் தோனியை விட்டு பம்பி பணிந்து கடன் தொகையினை வசூலித்து வருகின்றனர்.

    ×