search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233221"

    • 3 சதவீத அக விலைப்படி உயர்வுக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
    • 16 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி உள்ளதாக ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    75-வது சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான 3 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ந் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்மூலம் அரசுத் துறைகளில் பணிபுரியும் 16 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி உள்ளார்.

    கொரோனா காலங்களில் நிலவிய பெரும் நிதி நெருக்கடி சூழலிலும் கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அக விலைப்படி உயர்வை சென்ற ஆண்டு 11 சதவீதம் மட்டுமே உயர்த்தி வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் 14 சதவீதமாக உயர்த்தி வழங்கி ஆசிரியர், அரசு ஊழியர்களின் மனங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

    அது மட்டுமில்லாமல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப நலநிதியை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

    கடந்த ஆட்சியில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது போடப்பட்டிருந்த அனைத்து பழிவாங்கல் நடவடிக்கையும் ரத்து செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.

    மேலும் கடந்த 1-ந்தேதி தலைமை செயலகத்தில் ஆசிரியர், அரசு ஊழியர்களின் பேரமைப்பான ஜாக்டோ- ஜியோவின் நிர்வாகிகளை அழைத்து பேசி அவர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்தார். நிர்வாகிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்-அமைச்சர், உங்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

    அவர் உறுதியளித்தபடி ஜூலை 1-ந்தேதி முதல் மத்திய அரசுக்கு இணையான 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்து அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

    விரைவில் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தையும் வழங்குவார் என்று நம்புகிறோம். விரைவில் நடைபெற இருக்கும் ஜாக்டோ- ஜியோ மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் கலந்து கொண்டு ஆசிரியர், அரசு ஊழியர்களின் மேலும் சில கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவிப்பார் என்றும், சில கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவேன் என்ற உறுதியையும் மாநாட்டில் தருவார் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டும்
    • பணிக்கொடை, விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்கள் இரண்டு வருட காலமாக நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி. ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாக குழு கூட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது.

    இதற்கு சங்கத் தலைவர் மல்லி ஜி.தியாகராஜன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் சந்திரமோகன் வரவேற்றுப் பேசினார். பொதுச்செயலாளர் அப்பாதுரை நடைபெற்ற பணியில் குறித்து பேசினார். போக்குவரத்து தொழிலாளர் ஓய்வு பெற்றோர் சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன் ஓய்வூதியர்களின் நீண்ட கால தீர்க்கப்படாத கோரிக்கை நிலை குறித்தும், தீர்வு காண வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு தொகையை 11ஆம் தேதி நடைபெறும் 14-வது போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் தீர்வு காண வேண்டும், கடந்த 2020 மே மாதம் முதல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை , விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்கள் இரண்டு வருட காலமாக நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும், அரசு ஓய்வூதியர்களுக்கு நடைமுறை உள்ளது போன்ற மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், சங்க நிர்வாகிகள் சுந்தரபாண்டியன், மாணிக்கம், இருதயராஜ், சுப்பிரமணியன், ஞானசேகரன், நிர்வாக குழு உறுப்பினர்கள்கலியமூர்த்தி, குணசேகரன், தங்கராசு , ரெஜினால்டு ரவீந்திரன், கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • ஜனவரி 2022 முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை இதுநாள் வரை வழங்கவில்லை.
    • அடுத்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2022 முதல் மத்திய அரசு அறிவிக்க உள்ள நிலையில் பழைய உயர்வையே இன்னும் வழங்காதது வருத்தமளிக்கிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் தஞ்சை மாவட்ட செயலாளர் முருகக்குமார், மாவட்ட தலைவர் வெங்கடாசலம், பொருளாளர் அய்ய ம்பெருமாள் ஆகியோர் தமிழக முதல்-அமைச்ச ருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய அரசு அதன் பணியாளர்களுக்கு எப்போ தெல்லாம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கின்றதோ அப்போதெல்லாம் தமிழக அரசும் அதன் பணியாளர்களுக்கு வழங்கி வந்தது. தற்போது ஜனவரி 2022 முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை இதுநாள் வரை வழங்கவில்லை. அடுத்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2022 முதல் மத்திய அரசு அறிவிக்க உள்ள நிலையில் ஜனவரி 2022 வழங்க வேண்டிய அகவி லைப்படி உயர்வையே இன்னும் வழங்காதது வருத்தமளிக்கிறது.

    மேலும் ஆண்டுக்கு சரண் விடுப்பை 15 நாட்கள் ஒப்படைத்து காசாக்கும் முறை முட க்கப்பட்டு உள்ளது. இதேப்போல் பழைய ஓய்வூதிய திட்டம் இன்னும் அமல்படுத்தவில்லை. உடனடியாக அதனை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை உடனடியாக வழங்கிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர் கிளை முன்பு இன்று சங்க பொதுச் செயலாளர் கஸ்தூரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 14-வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும் போக்குவரத்து ஓய்வூதியர்களின் உயர்ந்துவிட்ட பழைய, புதிய அகவிலைப்படி உயர்வை அறிவித்து நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர், ஜூன்.17-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கம் சார்பில் தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர் கிளை முன்பு இன்று சங்க பொதுச் செயலாளர் கஸ்தூரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம் தொடக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன், சங்கத்தின் கவுரவத் தலைவர் சுந்தரபாண்டியன், தலைவர் தங்கராசு துணைத் தலைவர்கள் மாணிக்கம் , சண்முகம் ஆகியோர் விளக்கிப் பேசினர்.

    இதில் 14- வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும், போக்குவரத்து ஓய்வூதியர்களின் உயர்ந்துவிட்ட பழைய, புதிய அகவிலைப்படி உயர்வை அறிவித்து நிலுவைத் தொகை வழங்குவதுடன், ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்க வேண்டும், பெண்கள் இலவச பயண திட்டத்திற்கான தினசரி பயணப்படி பேட்டாவை அவ்வப்போதே வழங்கிட வேண்டும், வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு ஆறு வருடங்களாக காத்திருப்பவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும், தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    சங்க நிர்வாகிகள் ரங்கதுரை, சுகுமார், இருதயராஜ், ரெஜினால்டு ரவீந்திரன், இளங்கோவன், ராஜமன்னன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் சேவையா, பொருளாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் நன்றி கூறினர்.

    ×