search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி பணிகள்"

    • சொக்கலிங்கபுரம் கிராமத்தில் உள்ள நூலகத்திற்கு சென்று சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சொக்கலிங்கபுரம் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை சண்முகையா எம்.எல்.ஏ. கட்டிட பணிகள் தரமான முறையில் கட்டப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

    அப்போது கருங்குளம் ஜூனியர் ஆணையாளர் பாக்கியலீலா, யூனியன் கூடுதல் ஆணையாளர் செல்வி, யூனியன் உதவி பொறியாளர் பொறியாளர் சித்திரைசேகர், யூனியன் மேற்பார்வையாளர் சீனிவாசன், பஞ்சாயத்து தலைவர் ராமலட்சுமி உட்பட பலர் உடன் இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து சொக்கலிங்கபுரம் கிராமத்தில் உள்ள நூலகத்திற்கு சென்று சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    அப்போது நூலகத்தில் புத்தகம் இருப்பு குறித்து நூலகரிடம் கேட்டறிந்து கூடுதலாக இளைஞர்களுக்கு போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் சண்முகையா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    முன்னதாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கீழ பூவாணி, மேல பூவாணி ஆகிய கிராமத்திற்கு சென்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி புரியும் பெண்களிடம் சண்முகையா எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்தார்.

    • நகர்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் விதமாக தனிநபர் வேலைவாய்ப்புத் திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.
    • இப்பணிக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.363 மதிப்பூதியமாக நேரடியாக பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மதியம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, நகர் நல அலுவலர் நமச்சிவாயம், உதவி பொறியாளர் சந்திரபோஸ், கண்காணிப்பாளர் கிளமண்ட் மற்றும் கவுன்சிலர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில், மேயர் சண். ராமநாதன் பேசியதாவது:-நகர்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் விதமாக தனிநபர் வேலைவாய்ப்புத் திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக, மாநகராட்சியில் உள்ள மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு எண்.29 முதல் 41 வரையிலான பகுதிகளில் 7 எண்ணிக்கையிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்படி, மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு எண்.29 முதல் 41 வரையிலான பகுதிகளில் மரம் வளர்க்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதன்படி ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 25,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    இப்பணிக்கு அப்பகுதிவாழ் பொதுமக்கள் மட்டுமே பணியாளர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பணிக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.363 மதிப்பூதியமாக நேரடியாக பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.பணியாளர்களினால் மேற்கொள்ளப்படும் பணிகள் மரக்கன்றுகள் நடுவதற்கு குழி ஏற்படு த்துதல், மரக்கன்றுகள் நடுதல், 50 நாளைக்கு குடிநீர் விட்டு பராமரித்தல் ஆகும்.மாநகராட்சி மூலம் 25,000 மரக்கன்றுகள் கொள்முதல் செய்தல், குடிநீர் விநியோகம் செய்தல், சுமார் 4000 எண்ணிக்கையிலான மரக் கூண்டுகள் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×