search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோக் அதாலத்"

    • நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.
    • பார் அசோசியேஷன் தலைவர் தேவேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதி மன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் திருவள்ளூர், பொன்னேரி தாலுகா சட்ட பணிகள் குழு சார்பில் சிறப்பு மெகா லோக் அதாலத் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நான்காவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கிருஷ்ணசாமி தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர், நீதித்துறை நடுவர் 1 மற்றும் 2 ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், அசல் வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள் வங்கிக்கடன் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 69 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 2 கோடியே 7 லட்சத்து 82ஆயிரத்து 880 ரூபாய் வசூல் செய்து இழப்பீடு வழங்கபட்டது. இதில் பொன்னேரி பார் அசோசியேஷன் தலைவர் தேவேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 374 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 215 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது
    • லோக் அதாலத் மூலம் ரூ.2½ கோடி வசூலாகி உள்ளது.

    தக்கலை :

    தமிழகம் முழுவதும் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் தக்கலை கோர்ட்டில் 374 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 215 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதில் வங்கி வாரா கடன் வழக்கு 229-ல் 89 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டது. இதுபோல சிவில் வழக்குகள் 49 எடுத்துக்கொள்ளப்பட்டு 31 வழக்குகள் முடிக்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டது.

    மேலும் குற்றவியல் வழக்குகளில் 96 எடுக்கப்பட்டு 95 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. லோக் அதாலத் மூலம் ரூ.2½ கோடி வசூலாகி உள்ளது.

    இதில் பத்மனாபபுரம் சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் தலைமையில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மருதுபாண்டி, நீதிபதி பிரவீன் ஜீவா மற்றும் வழக்கறிஞர் ஜாண் இக்னேசியஸ் உள்பட பல வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

    • பிரிந்து வாழ்ந்த 7 தம்பதிகள் இணைந்து வாழ வழிவகை செய்யப்பட்டது
    • 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த 88 வழக்குகளுக்கு தீர்வு

    கோவை, 

    தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுகிறது.

    சுமூக தீர்வு காணப்படுவதால் காலவிரயம், பணவிரயம் தவிர்க்கப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான விஜயா இதனை தொடங்கிவைத்து, மோட்டார் வாகன விபத்தில் கணவரை இழந்த சுகன்யா, அவரது குடும்ப த்தினருக்கு இழப்பீ ட்டு தொகையாக ரூ.32 லட்சத்தை வழங்கினார்.

    இதேபோல், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், அன்னூர், மதுக்கரை நீதிமன்ற வளாகத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதன்மூலம் 3032 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டு, முறையீட்டாளர்களுக்கு ரூ.35.39 கோடி தீர்வுத் தொகை பெற்றுத் தரப்பட்டது.

    நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் முரளிதரன், கோவிந்த ராஜ், சுந்தரம், ரவி, சார்பு நீதிபதிகள் நம்பிராஜன், சிவகுமார், மோகனம்பாள், மோகனரம்யா, ஹரிஹரன், உரிமையியல் நீதிபதி தேவராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஆகியோர் அடங்கிய 16 அமர்வுகள் மூலம் மாவட்ட தலைநகரிலும், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் சஞ்சீவி பாஸ்கர், கே.அருணாசலம், சார்பு நீதிபதிகள் கங்காராஜ், மோகனவள்ளி, கவுதமன், வேதகிரி, கலைவாணி, உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஆகியோர் அடங்கிய 25 அமர்வுகள் மூலம் தாலுகா அளவிலும் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான கே.எஸ்.எஸ்.சிவா செய்திருந்தார்.

    சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள், சிவில் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விவாகரத்து தவிர மற்ற குடும்ப பிரச்சினை வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சினைகள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் கோவையில், 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த 88 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    மேலும், பிரிந்து வாழ்ந்த 7 தம்பதிகள் இணைந்து வாழ தீர்வு காணப்பட்டது.

    இதேபோல், வழக்கு களை மாற்றுமுறையில் தீர்வு காணவும், இலவச சட்ட உதவி பெறவும், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • லோக் அதாலத் முகாம்களில் ரூ.3.85 ேகாடி நிவாரணம் கிடைத்தது.
    • இதன் மூலம் ரூ.81 லட்சத்து 1,600 வரையில் வங்கிகளுக்கு கிடைத்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட ஆணைக்குழு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 9 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்ற வியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

    தலைவா், முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, தலைவா், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்த வச்சலு, போக்சோ நீதிபதி சரத்ராஜ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் சார்பு நீதிபதி பரமேஸ்வரி சுந்தர ராஜ், குற்றவியல் நீதிதுறை நடுவா்கள் அனிதா கிரிஸ்டி, குற்றவியல் செல்வம், வழக்கறிஞா் ராம்பிரபாகா்் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனா்.

    இதில் 65 குற்றவியல் வழக்குகளும், 131 காசோலை மோசடி வழக்குகளும்இ 88 வங்கிக் கடன் வழக்குகளும், 73 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 49 குடும்ப பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 136 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 2 ஆயிரம் மற்ற குற்றவியல் வழக்கு களும் என மொத்தம் 2 ஆயிரத்து 542 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப் பட்டு 1,878 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டன.இதன் மூலம் ரூ.3 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 433 வரை வழக்காடிகளுக்கு கிடைத்தது.

    அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 500 வழக்குகள் பரிசீல னைக்கு எடுக்கப்பட்டு, 74 வழக்குகள் சமரசமாக தீர்வு காணப்பட்டன.

    இதன் மூலம் ரூ.81 லட்சத்து 1,600 வரையில் வங்கிகளுக்கு கிடைத்தது.

    • தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் லோக் அதாலத் நடைபெற்றது.
    • தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம். 2342 வழக்குகளில் ரூ.17,66,64, 278-க்கு தீர்வு காணப்பட்டது என தேனி முதன்மை மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.

    தேனி:

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி, தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரியகுளம், உத்த மபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடி சட்டப் பணிகள் சார்பில் நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் லோக் அதாலத் நடைபெற்றது.

    தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில், தேனி முதன்மை மாவட்ட நீதிபதி கணேசன் தலைமை உரையாற்றி தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். தேனி மாவட்ட சட்டப் பணிகளின் ஆணைக்குழுவின் செய லாளர் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுரேஷ் வரவேற்றார். குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சரவணன், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கோபிநாதன், சார்பு நீதிபதி சுந்தரி, நீதித்துறை நடுவர் லலிதாராணி, கூடுதல் மகிளா நீதிபதி (விரைவு) (நீதித்துறை நடுவர் நிலை) ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பெரியகுளத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி மாரியப்பன், நீதித்துறை நடுவர் கமலநாதன் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. உத்த மபாளை யத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா, மா வட்ட உரிமையியல் நீதிபதி சரவ ணசெந்தில்கு மார், நீதித்துறை நடுவர்(விரைவு) ரமேஷ், நீதித்துறை நடுவர் ராமநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

    ஆண்டிபட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், நீதித்துறை நடுவர் பிச்சைராஜன் முன்னிலையில் நடைபெ ற்றது.

    போடியில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிபதி உம்முல் பரிதா , நீதித்துறை நடுவர் வேலுமயில் முன்னி லையில் நடைபெற்றது.

    தேனி, உத்தமபாளையம் பெரியகுளம், ஆண்டிபட்டி போடிநாயக்கனூர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையி லுள்ள வழக்குகள் மற்றும் வங்கிகளில் வராக்கடன்களுக்காக நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம். 2342 வழக்குகளில் ரூ.17,66,64, 278-க்கு தீர்வு காணப்பட்டது என தேனி முதன்மை மாவட்ட நீதிபதி கணேசன் தெரிவித்தார்.

    • 1933 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
    • காலை 1 மணி நேரத்தில் 15 வழக்குகள் பேசி தீர்வு காணப்பட்டது

    நாகர்கோவில் :

    நாடு முழுவதும் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக் அதாலத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இன்று லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் தொடங்கி வைத்தார். முதன்மை குற்றவியல் நீதிபதி கோபாலகிருஷ்ணன் முதன்மை சார்பு நீதிபதி சொர்ண குமார், சார்பு நீதிபதி அசான் முகமது, நீதிபதிகள் விஜயலட்சுமி, தாயுமானவர், மணிமேகலை வழக்கறிஞர் சங்க தலைவர் பால ஜனாதிபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவிலில் 6 பெஞ்சுகளில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சொத்து தொடர்பான வழக்குகள், விபத்து காப்பீடு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    மோட்டார் காப்பீடு இன்சூரன்ஸ் மற்றும் காசோலை வழக்குகள் பேசி தீர்வு காணப்பட்டது. காலை 1 மணி நேரத்தில் 15 வழக்குகள் பேசி தீர்வு காணப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரூ.68 லட்சத்து 78 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இதேபோல் தக்கலை, பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் இன்று நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் 1933 வழக்குகள் விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டு உள்ளது.

    • காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் லோக் அதாலத் கூடியது.
    • 1,210 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில் 621 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டு தொகையாக பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 87 லட்சத்து 7 ஆயிரத்து 789 வழங்கப்பட்டது.

    பயனாளிக்கு இழப்பீட்டுத் தொகையினை காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி யு.செம்மல் வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் லோக் அதாலத் கூடியது. காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் லோக் அதாலத்தை தொடக்கி வைத்து சமரசம் செய்து வைக்கப்பட்ட பயனாளிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கினார்.

    தொடக்க விழாவுக்கு முதன்மை சார்பு நீதிபதி கே.எஸ்.அருண்சபாபதி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    லோக் அதாலத்தில் விசாரணைக்காக மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்ப நல வழக்கு மற்றும் தொழிலாளர் நலவழக்குகள் என மொத்தம் 1,210 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில் 621 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டு தொகையாக பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 87 லட்சத்து 7 ஆயிரத்து 789 வழங்கப்பட்டது.

    தொடக்க விழா நிகழ்வில் நீதிபதிகள் இனிய கருணாகரன், வாசுதேவன், வக்கீல்கள் சத்தியமூர்த்தி, பரணி, ரஞ்சனி மற்றும் மூத்த வக்கீல்கள், காப்பீட்டு நிறுவனத்தின் வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக வட்டார சட்டப்பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் சதீஷ்ராஜ் நன்றி கூறினார்.

    • ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சாவித்திரி தலைமை தாங்கினார்.
    • சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    கடலூர்:

    பண்ருட்டி சட்டப் பணிகள் ஆணைக்குழுசார்பில், பண்ருட்டி நீதிமன்றத்தில் லோக் அதாலத் நடத்தப்பட்டது. வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர், சார்பு நீதிபதி உமாமகேஸ்வரி வழிகாட்டுதலின்படி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சாவித்திரி தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, குற்றவியல் நடுவர் நீதிபதி மகேஷ் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் மனுதாரர்கள் பங்கேற்றனர்.

    இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 13 வாகன விபத்து வழக்கு, ஒரு சொத்து வழக்கு முடிக்கப்பட்டு ரூ24.40 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை இள நிலை நிர்வாக உதவியாளர் ஆனந்த ஜோதி செய்திருந்தார்.

    • காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் லோக்அதாலத் நடைபெற்றது.
    • லோக் அதாலத்தை மாவட்ட நீதிபதி செம்மல் தொடங்கி வைத்தார்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும், காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, அறிவுறுத்துதலின்பேரில் நேற்று காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் லோக்அதாலத் நடைபெற்றது.

    லோக் அதாலத்தை மாவட்ட நீதிபதி செம்மல் தொடங்கி வைத்தார்.

    காஞ்சிபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின், தலைவர், முதன்மை சார்பு நீதிபதி அருண் சபாபதி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, காஞ்சிபுரம் அட்வகேட்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் ஜான், செயலாளர் துரைமுருகன், பார் அசோசியேஷன் சங்க தலைவர் அரிதாஸ், செயலாளர் வித்தகவேந்தன், லாயர்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வக்கீல்கள் பத்மநாபன், சத்தியமூர்த்தி, மூத்த காப்பீட்டு நிறுவன வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    இதில் காஞ்சிபுரம் வட்ட மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாரா கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்பநல வழக்கு மற்றும் தொழிலாளர் நலவழக்குகள் என மொத்தம் 130 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு 48 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் இழப்பீட்டு தொகையாக ரூ.2 கோடியே 23 லட்சத்து 4 ஆயிரத்து 236 இழப்பீடாக வழங்கப்பட்டது.

    இதனை காஞ்சிபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு ஏற்பாடு செய்திருந்தது.

    • 2 கோடியே 29 லட்சத்து 60 ஆயிரத்து 640 ரூபாய் வசூல் செய்து இழப்பீடு வழங்கப்பட்டது.
    • பொன்னேரி பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சிறப்பு லோக் அதாலத், முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி தலைமையில் குற்றவியல் நீதிபதி ஐயப்பன் முன்னிலையில் நடைபெற்ற இந்த லோக் அதாலத்தில், பல்வேறு வழக்குகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் 22 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 2 கோடியே 29 லட்சத்து 60 ஆயிரத்து 640 ரூபாய், வசூல் செய்து இழப்பீடு வழங்கப்பட்டது. இதில் பொன்னேரி பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.

    • பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ,குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன
    • சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் மொத்தம் 762 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி (பொறுப்பு)பி.சிவஞானம் தலைமையில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நீதிபதிகள் பி.திருஞான சம்பந்தம், சரண்யா செல்வம், ஜெ.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிபதி கே.எஸ்.கயல்விழி வரவேற்று பேசினார். மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நலம் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நில ஆர்ஜித வழக்கு ஆகியன விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 276 வழக்குகள் விசாரித்து சமரசம் செய்து வைக்கப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.9 கோடியே 42 லட்சத்து 98 ஆயிரத்து 234 வழங்கப்பட்டது. இதில் விரைவு நீதிமன்ற அரசு வக்கீல் தி.சத்தியமூர்த்தி, எஸ்.துரைமுருகன், உதயன், வடிவேல், சரவணன் கலந்து கொண்டனர்.

    பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ,குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய லோக் அதாலத் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி தலைமையில் கூடுதல் சார்பு நீதிபதி பாஸ்கர் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் குற்றவியல் நீதிபதிகள் மோகனப்பிரியா, ஐயப்பன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் மொத்தம் 762 வழக்குகள் தீர்வு காணப்பட்டு பொன்னேரி மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப்பட்டுள்ளன. இதில் 11கோடியே 57 லட்சத்து 215 ரூபாய் வசூல் செய்து இழப்பீடு வழங்கப்பட்டன.

    முகாமில் பொன்னேரி பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன் சி.எம்.டி.ஏ. வழக்கறிஞர் பிரசன்ன குமார், கூடுதல் சார்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் பல்லவன் மற்றும் அரசு வழக்கறிஞர் அம்ரத் காந்தி உள்பட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்

    • திருமங்கலம் கோர்ட்டில் நாளை சிறப்பு லோக் அதாலத் நடக்கிறது.
    • மாரிக்காளை தலைமையில் திருமங்கலம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத் முகாம் நடைபெற உள்ளது.

    திருமங்கலம்

    திருமங்கலம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் நாளை (11-ந்தேதி) சார்பு நீதிபதி மாரிக்காளை தலைமையில் திருமங்கலம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத் முகாம் நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் நலன்கருதி நடைபெறும் இந்த சிறப்பு லோக் அதலாத்தில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகள், குறைகள் குறித்த மனுக்களையும், திருமங்கலம் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல்நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகவும், பிற கோரிக்கைள் தொடர் பாகவும் உடனடியா தீர்வு காண மனுசெய்து உரிய பரிகாரம் தேடி கொள்ளலாம்.

    ×