என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோயம்பேடு மார்கெட்"
- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி 60 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.
- மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் வரத்து 45 முதல் 50 லாரிகளாக குறைந்துவிட்டது.
போரூர்:
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக பீன்ஸ், தக்காளி வரத்து குறைந்து உள்ளது. இதனால் அதன்விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் தக்காளி ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் தற்போது வரத்து குறைவால் அதன் விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.60 வரையிலும் வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் மொத்த விற்பனையில் கடந்த வாரம் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.50க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் வரத்து பாதியாக குறைந்துள்ளதால் விலை இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது. இன்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி 60 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் வரத்து 45 முதல் 50 லாரிகளாக குறைந்துவிட்டது. இதேபோல் பீன்ஸ் வரத்தும் பாதியாக குறைந்து போனது. இதனால் தக்காளி, பீன்ஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் நாட்களிலும் இதே நிலைதான் இருக்கும் என்றார்.
- கேரட், சுரக்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் மூட்டை மூட்டையாக தேக்கமடைந்து.
- காய்கறி விற்பனை மந்தமாகி மார்க்கெட் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
போரூர்:
சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறி விற்பனைக்கு வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தினசரி 400-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறி விற்பனைக்கு குவிந்து வருகிறது. தொடர் முகூர்த்த நாட்கள் காரணமாக சந்தைக்கு வரும் வியாபாரிகள் வரத்து அதிகரித்து காய்கறி விற்பனை விறு விறுப்பாக நடந்து வந்தது.
இந்த நிலையில் அதிகாலையில் மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து கடந்த 2 நாட்களாக திடீரென குறைந்துவிட்டது இதன் காரணமாக காய்கறி விற்பனை மந்தமாகி மார்க்கெட் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
நள்ளிரவில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் வியாபாரிகள் வரத்து குறைந்ததால் அதிகாலையில் 60கிலோ மூட்டை ரூ.300- க்கு விற்கப்பட்டது ஆனால் அதையும் வாங்கி செல்ல யாரும் ஆர்வம் காட்டவில்லை. கேரட், சுரக்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் மூட்டை மூட்டையாக தேக்கமடைந்து இருப்பது மொத்த வியாபாரிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.
இதுகுறித்து மொத்த வியாபாரி சுகுமார் கூறுகையில், "இன்று 420 லாரிகளில் காய்கறி விற்பனைக்கு குவிந்துள்ளது. கடந்த 2 நாட்களாக காய்கறி விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது வெயிலின் தாக்கம் காரணமாக விற்பனை ஆகாமல் தேக்கமடையும் கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் மறுநாள் வீணாகி குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது" என்றார்.
இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) தக்காளி-ரூ30, நாசிக் வெங்காயம்-ரூ22, சின்ன வெங்காயம்-ரூ30, உருளைக்கிழங்கு-ரூ25, உஜாலா கத்தரிக்காய்-ரூ20, வரி கத்தரிக்காய்-ரூ12, வெண்டைக்காய்-ரூ25, அவரைக்காய்-ரூ35, பீன்ஸ்-ரூ60, ஊட்டி கேரட்-ரூ30, ஊட்டி பீட்ரூட்-ரூ45, பீட்ரூட்-ரூ35, முட்டை கோஸ்-ரூ25, வெள்ளரிக்காய்-ரூ12, புடலங்காய்-ரூ20, கொத்தவரங்காய்-ரூ25, முருங்கைக்காய்-ரூ50, சுரக்காய்-ரூ10, பாகற்காய்-ரூ25, பன்னீர் பாகற்காய்- ரூ40, காலி பிளவர் (ஒன்று) -ரூ13, எலுமிச்சை பழம்-ரூ80, இஞ்சி-ரூ28, பச்சை மிளகாய்-ரூ25 தேங்காய்-ரூ30.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்