என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பள்ளியில்"
- தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை
- 04652-229077 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
நாகர்கோவில், அக்.27-
நாகர்கோவில் (அம லாக்கம்) தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்ட பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:- சென்னை முதன்மை செயலாளரும், தொழிலாளர் துறை ஆணையருமான அதுல் ஆனந்த் உத்தரவின்படி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர், சைல்டு லைன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆகியோருடன் செண்பகராமன்புதூர், தடிக்காரன்கோணம், பொன்மனை, சுருளோடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.
கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது தொடர்பாக ஆய்வின்போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் குறைந்த பட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரையும் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதுபோன்று தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்து வது தெரியவந்தால் 1098 என்ற எண்ணிலும், 04652-229077 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- சுற்றுவட்டார பகுதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர்.
நாகர்கோவில்:
தெரிசனங்கோப்பு கவுசிகா பள்ளியில் சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அழகிய பாண்டியபுரம் ஜெயந்தீஸ்வர உடைய நயினார் கோவில் மேல்சாந்தி ஜெய்ஸ்ரீ மணிகண்ட ஆச்சார்யார் தலைமையில் குழந்தைகள் அனைவரும் நலம்பெற ஆகம விதிப்படி அதற்கான அனைத்து சடங்குகளும் நடத்தப்பட்டு, சிவ ஆகமரத்தினம் ஜெய்ஸ்ரீ நாராயண சுவாமி தலைமையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. ப்ரி.கே.ஜி.வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை, ஹிந்தி மற்றும் செஸ் வகுப்புக்களுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவுசிகா பள்ளியின் தாளாளர் செண்பகநாதன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- கண்காட்சியை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
- மாணவ-மாணவிகளின் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மணவாளக்குறிச்சி:
வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளை பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஐ.இ.டி. கன்னியாகுமரி நெட்வொர்க் மற்றும் அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய இந்த கண்காட்சியில் 172 மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
கண்காட்சியை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக காட்சிப்படுத்திய மாதிரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளியின் துணை தாளாளர் சுனி, இயக்குநர் தருண்சுரத், அருணாச்சலா பொறியியல் கல்லூரி முதல்வரும், ஐ.இ.டி.கன்னியாகுமரி நெட்வொர்க்கின் முன்னாள் தலைவருமான ஜோசப் ஜவகர், அருணாச்சலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் விஜிமலர் ஆகியோர் கலந்துகொண்டனர். கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- பள்ளியில் சுற்றுவட்டா ரத்தை சேர்ந்த 646 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்
- இரணியல் போலீஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள இந்த பள்ளி இருக்கும் இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்ப டும்
நாகர்கோவில் : திங்கள்நகரில் இருந்து இரணியல் செல்லும் சாலையில் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டா ரத்தை சேர்ந்த 646 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இரணியல் போலீஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள இந்த பள்ளி இருக்கும் இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்ப டும். காலாண்டு தேர்வு மற்றும் தொடர் மழை விடுமுறை காரணமாக சில நாட்களுக்கு பின்பு நேற்று முன்தினம் மீண்டும் பள்ளி திறந்தது. வழக்கம்போல மாலை பள்ளியை மூடிவிட்டு பணியாளர்கள் சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை அலுவலக ஊழி யர்கள் பள்ளியை திறக்க வந்தனர். அப்போது உடற்கல்வி ஆசிரியை லில்லிபாய் தலைமை ஆசிரியர் அறை கதவு பூட்டு உடைந்த நிலையில் அருகில் ஒரு கடப்பாரை கம்பியும் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பைல்கள், ஆவணங்கள் சிதறிய நிலையில் கிடந்தது. மேலும் பள்ளி அறை சாவி கொத்தையும் மர்ம நபர்கள் மேசையில் எடுத்து வைத்திருந்தனர். இதுகுறித்து லில்லிபாய் தலைமை ஆசிரியை சாந்தி, உதவி தலைமை ஆசிரியை எமிலியா ஜெசி ஆகியோ ருக்கு தகவல் தெரிவித்தார். தலைமை ஆசிரியை விடுப்பில் இருப்பதால் இதுகுறித்து எமிலியா ஜெசி இரணியல் போலீஸ் நிலை யத்திற்கு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரணியல் இன்ஸ் பெக்டர் செந்தில் வேல் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.
திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் சுமன் நேரில் சென்று ஆசிரியர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். போலீஸ் விசாரணையில் பள்ளியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் பதிவாகும் டிவிஆரை மர்ம நபர்கள் திருடிச் சென்றி ருந்தது தெரிய வந்தது.
பீரோவில் பணம் உள்ளிட்ட எதுவும் இல்லாத தால் மர்ம நபர்கள் ஏமாற்றத் துடன் சென்றுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பள்ளியின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.
- ராஜஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- பொது மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
மார்த்தாண்டம்:
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, பாலப்பள்ளம் பேரூராட்சியில் உள்ள மத்திக்கோடு எல்.எம். அரசு தொடக்க பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டி டங்கள் அமைக்க வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர், அப்பகுதி பொது மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அந்த பள்ளி யில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட் டத்தில் இருந்து ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் நிறைவுப் பெற்றதையடுத்து வகுப்பறை கட்டிடங்களை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கிள்ளி யூர் கிழக்கு வட்டார காங் கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், பாலப்பள்ளம் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெபர்சன், வார்டு உறுப்பினர்கள் ஹெலன் மேரி, மேரி பிரிதா, பாலப்பள்ளம் பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் லதீஷ், மற்றும் சூசை மிக்கேல், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- 10-ம் வகுப்பு மாணவி ஷிவானி வரவேற்றார்.
- பள்ளி தாளாளர் தில்லை செல்வம் தலைமை தாங்கினார்.
நாகர்கோவில்:
மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் இந்திய குழந்தை மருத்துவ குழுமம், தமிழக மாநில பிரிவு சார்பில் நடைபெற்ற பள்ளிகளில் ஊட்டச்சத்து மற்றும் உடல் செயல்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் தில்லை செல்வம் தலைமை தாங்கினார். 10-ம் வகுப்பு மாணவி ஷிவானி வரவேற்றார். இதில் இயக்கு நர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தனர்.
இதில் டாக்டர்கள் சுரேஷ் பாலன், கோபால சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்க ளுக்கு தேவை யான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள், ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகள் மற்றும் துரித உணவு வகையின் தீமைகள், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியனர். மாணவி அமிர்தா நன்றி கூறினார்.
- லேப்டாப், கம்ப்யூட்டர், யூ.பி.எஸ் உள்ளிட்ட 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சியில் இருந்து மதுக்கூர் செல்லும் சாலையில் தனியார் பள்ளி உள்ளது.
நேற்று முன்தினம் பள்ளியை மூடி விட்டு சென்றவர், நேற்று வந்து பார்த்த பொழுது, பள்ளியின் அலுவலக கதவு உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த லேப்டாப், கம்ப்யூட்டர், யூ.பி.எஸ் உள்ளிட்ட 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து தனியார் பள்ளி உரிமையாளர் சுரேந்தர் பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பரமத்திவேலூரை அடுத்துள்ள படமுடிபாளை யம் குழந்தைகள் மையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- ஆய்வின்போது குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள், குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவு , மற்றும் இணை உணவின் தரம் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பரமத்திவேலுார்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள படமுடிபாளை யம் குழந்தைகள் மையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள், குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவு , மற்றும் இணை உணவின் தரம் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சத்துணவு மையத்தில் நேரில் பார்வையிட்டு சத்துணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாணவிகளுக்கு தினசரி வழங்கப்பட வேண்டிய உணவுப் பட்டியல் படி வழங்கப்படுகிறதா, சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். மேலும் மாணவிகளுக்கு மதிய உணவினை அமைச்சர் கீதா ஜீவன் பரிமாறினார். பின்னர் அமைச்சருடன் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் ஸ்ரேயாசிங், சமூகநல அலுவலர் கீதா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ், குழந்தைகள் நலக்குழு தலைவர் சதீஷ்பாபு, வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்களும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில், ஒன்றிய செயலாளர்கள் தன்ராசு, சண்முகம், மாவட்ட துணைச் செயலாளர் அன்பழ கன், பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி, பேரூர் கழக செயலாளர்கள் ரமேஷ் பாபு, முருகன், கருணாநிதி, பெருமாள் என்கிற முருகவேல், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- சேலம் மாவட்டம் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை விழா தொடங்கியது.
- 2 நாட்கள் நடைபெறும் இந்த தனித்திறன் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் திறமைகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட கல்வித்துறை மூலம் முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை விழா தொடங்கியது. சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் தங்கவேல் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் வரவேற்றார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சக்திவேல், மேலாண்மை குழு தலைவர் ரமேஷ் குமார், மேலாண்மை குழு கல்வியாளர் பால கிருஷ்ணன் மற்றும் உறுப்பி னர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களின் தனித்தி றனை ஊக்குவித்தனர்.
மாணவர்கள் கிராமிய பாடல்கள், ஓவியம், நாடகம், நாட்டியம், பறையடித்தல், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர். 2 நாட்கள் நடைபெறும் இந்த தனித்திறன் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் திறமைகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட கல்வித்துறை மூலம் முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது.
- வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நடை பெற்றது.
- இதில், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ–-மாண வியருக்கு இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம், இசை உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நடை பெற்றது. இதில் பள்ளித் தலைமையாசிரியை ரமா தலைமை வகித்தார். ஆசிரியை சுமதி வரவேற்றார். முத்தம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ரம்யா செந்தில்குமார் கலைத்திருவிழா மற்றும் மாணவ–-மாணவியரின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்தார்.
இதில், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ–-மாண வியருக்கு இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம், இசை உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரேவதி சசிகுமார், உறுப்பினர்கள் பிரபாகரன், மாதேஸ்வன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். நிறைவாக, ஆசிரியை மலர்கொடி நன்றி கூறினார்.
இதேபோல் பொன்னா ரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத்திரு விழாவிற்கு, பள்ளித் தலைமையாசிரியை புனித ஞானதிலகம் தலைமை வகித்தார். பல்வேறு கலைத்திறன் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ–மாணவியருக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி பிரபாகரன், முன்னாள் தலைவர் வசந்தா காசிவிஸ்வநாதன், துணைத் தலைவர் கலா வதி பூவராகவன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பழனி சாமி, ஆசிரியர் சங்க நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
- அரசு பள்ளியில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- உணவே மருந்து, மருந்தே உணவு
திருச்சி:
முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜாக்கிர் ஜான் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மணிமாறன், நாட்டு நலப்பனித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சேகர், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்டக் கன்வீனர் நாகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் மாதவன் கலந்து கொண்டு மாணவர்கள் புத்தக வாசிப்பு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மேலும் 6 முதல் 12 வரை பயிலும் மாணவ மாணவிகளை காலை 11 மணி முதல் 12 மணி வரை புத்தக வாசிப்பில் ஈடுபடுத்தி அவர்களை ஊக்கப்படுத்தி விட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து தண்டலை புத்தூர் சித்த மருத்துவ ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், உணவே மருந்து, மருந்தே உணவு என்ற வாசகத்திற்கு ஏற்ப மூலிகைகள் மற்றும் உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும் காய்கறிகள், கீரைகள், பழம் வகைகள் பற்றி மாணவர்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் காட்சி பொருள் வைக்கப்பட்டு அதன் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வருவாய் துறை ஆய்வாளர் கார்த்திக் கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- புஞ்சைபுளியம்பட்டியில் ஸ்பிரிங் டேல் பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் 5-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டி நடைபெற உள்ளது.
- இதில் 12 ,14 ,16, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ ,மாணவிகளுக்கு தனி தனி பிரிவுகளில் போட்டி நடைபெற உள்ளது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் ஸ்பிரிங் டேல் பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் 5-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டி நடைபெற உள்ளது.
இந்த சதுரங்க போட்டியில் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ,பழனி ,திருப்பூர் ,கோவை,பல்லடம் தாராபுரம், மேட்டுப்பா ளையம்,அன்னூர் ஆகிய சி.பி.எஸ்.இ பள்ளிகளின் கூட்டமைப்பான கோவை கொங்கு சகோதயா பள்ளி காம்ப்ளக்சில் இடம்பெற்றிருக்கும் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதில் 12 ,14 ,16, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ ,மாணவிகளுக்கு தனி தனி பிரிவுகளில் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்பிரிங்டேல் பப்ளிக் பள்ளியின் நிர்வாக இயக்குனர் கமல், பள்ளி முதல்வர் பிரியா ஆகியோர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்