என் மலர்
நீங்கள் தேடியது "கட்டிடம்"
- கொரடாச்சேரி ஒன்றியத்தில் பொது விநியோக திட்ட கட்டிடம் ஆகியவைகளை பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- பெருந்தரக்குடி ஊராட்சியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் பொது விநியோக திட்ட கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரடாச்சேரி ஒன்றியம், இலையூர் ஊராட்சி, அடவங்குடியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோக திட்ட கட்டிடம், கொரடாச்சேரி ஒன்றியம், கரையாபாலையூர் ஊராட்சி, கட்டளையில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக திட்ட கட்டிடம் ஆகியவைகளை பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
விழாவில் கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர்சேகர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றி யக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன், ஒன்றிய பொறியாளர் ரவீந்திரன், கொரடாச்சேரி பேரூர் தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவேந்தன், ஊராட்சி தலைவர்கள் இலையூர் காமராஜ், கரையாபாலையூர் மீனா கல்யாணசுந்தரம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெருந்தரக்குடி ஊராட்சியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் பொது விநியோக திட்ட கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ரூ.4 லட்சம் மதிப்பில் அபிவிர்தீஸ்வரம் மையத்தான் கொல்லையில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
ரூ.60 ஆயிரம் மதிப்பில் தொகுப்பு வீடுகள் பழுது நீக்கும் பணி நடந்து முடிந்துள்ளது.
கொரடாச்சேரி ஒன்றியத்தில் மட்டும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.75.45 லட்சம் மதிப்பில் பணிகள் நிறைவடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.10.93 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா.
- அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் இலுப்பக்கோரை ஊராட்சியில் ரூ.10.93 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
இதில் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ., கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை தலைவர் முத்துச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ், வட்டார ஊட்டச்சத்து அலுவலர் லதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன், ஒன்றிய பொறியாளர் சுவாமிநாதன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இலுப்பக்கோரை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
- 6 மாதங்களை கடந்தும் இன்று வரை கட்டிட வேலை முழுவதும் முடிக்கப்படாமல் உள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் ரேசன் பொருட்கள் வாங்க மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.இவர்களின் நலன் கருதி அம்மா குளத்தங்கரையில் புதிய ரேசன்கடை கட்டிடம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
6 மாதங்களைக் கடந்தும் இன்று வரை கட்டிட வேலை முழுவதும் முடிக்கப்படாமல் உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் வெகு தூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது.இதனால் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்கள் வாங்க மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் அங்கிருந்து ரேஷன் பொருட்களை தூக்கி வருவதற்கும் மிகவும் சிரமமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு அங்காடி கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.
- கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக அங்கேயே தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
- ரூ. 30 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா. மெலட்டூரில் செயல்பட்டு வந்த சரக வேளாண்மை விரிவாக்க மைய அலுவலக கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால் மெலட்டூரில் செயல்பட்டு வந்த வேளாண் விரிவாக்க மைய அலுவலகம் மற்றும் உரகிடங்கு ஆகியவற்றை மெலட்டூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்னப்பன்பேட்டை பகுதிக்கு மாற்றப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக அங்கேயே தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
அதனால் விவசாயிகள் உரம், விதைகள், என தங்களது அனைத்து தேவைக்கும் அன்னப்பன்பேட்டை செல்ல வேண்டி இருந்தது.
அதனால் பழுதடைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்று மெலட்டூரில் பழுதடைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை இடித்துவிட்டு சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
கட்டுமான பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் புதிய கட்டிடம் இன்னும் திறக்கப்படாமல் பூட்டிய நிலையில் பயனற்று கிடக்கிறது.
மெலட்டூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடத்தை அரசு உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- ரூ.24.15 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறையுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடம்.
- ரூ.13.37 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம்.
பாபநாசம்:
பாபநாசம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையர் சிவக்குமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த்ராஜ், மாவட்ட கவுன்சிலர் தாமரை செல்வன், ஒன்றிய குழு துணை தலைவர் தியாக பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பாபநாசம் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் ஊராட்சி பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.
கூட்டத்தில் பாபநாசம் ஒன்றியத்தில் சக்கராப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறையுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடம் ரூ.24.15 லட்சம் மதிப்பீட்டிலும், தியாகசமுத்திரம் ஊராட்சியில் உள்ள புள்ளபூதங்குடி கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டிடம் ரூ.13.37 லட்சம் மதிப்பீட்டிலும், உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
- தாட்கோ கட்டிடம் பழுதடைந்து கடந்த 2014 முதல் செயல்படாமல் உள்ளது.
- கட்டடங்கள் பழுதடைந்து எந்த நேரமும் இடிந்து விழ காத்திருக்கின்றன.
பல்லடம்:
பல்லடம் பஸ் நிலையத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு தாட்கோ மூலம் ஆதி திராவிட மக்கள் பயன்பெறும் வகையில் 10 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்தநிலையில் அந்தக் கட்டிடம் பழுதடைந்ததால் கடந்த 2014 முதல் அந்த கட்டடத்தில் கடைகள் செயல்படவில்லை.காலியாக உள்ளது.இந்த நிலையில் இந்த பழுதடைந்த கட்டடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுமாறும், அல்லது பல்லடம் நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என பலமுறை தாட்கோ நிர்வாகத்திற்கு நகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டும் இன்னும் அவர்கள் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கட்டடங்கள் பழுதடைந்து எந்த நேரமும் இடிந்து விழ காத்திருக்கின்றன. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்லடம் பஸ் நிலையத்தில், உள்ள சுகாதார வளாகம சுவர் விழுந்து ஒருவர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், அந்த கட்டடத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இரும்புத் தகடுகளிலான தடுப்பு வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
தாட்கோ கட்டிடம் பழுதடைந்து கடந்த 2014 முதல் செயல்படாமல் உள்ளது. எந்த நேரமும் இடிந்து விழலாம் என்பதால் இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டி தாட்கோ நிர்வாகத்திற்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் இடப்பற்றாக்குறை உள்ளதால் நகராட்சிக்கு அந்த இடத்தை ஒப்படைத்தால் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் நிலையம், சுகாதார வளாகம் போன்றவை அமைக்க இடம் தேவைப்படுகிறது என பலமுறை தாட்கோ நிறுவனத்திற்கு கடிதங்கள் வாயிலாகவும், நேரிடையாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் அமைச்சர், மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் இதுகுறித்து மீண்டும் வலியுறுத்தி கட்டடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் குறை தீர்ப்பு முகாமை நடத்தினார்.
- பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழ்குடி, கங்களாஞ்சேரி, ராராந்திமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் குறை தீர்ப்பு முகாமை நடத்தி, பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
அப்போது, வாழ்குடி மற்றும் ராராந்திமங்கலம் ஊராட்சிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து விரைவில் அந்த அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.
ஆய்வின் போது, திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மார்த்தாண்டம்:
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட வடலிவிளை, மலையன்விளை, மணலி பகுதிகளில் உள்ள மக்கள் ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு பல கிலோமீட்டர் தூரம் சென்று வந்தனர். ஆகவே வடலிவிளை பகுதியில் புதிய ரேசன் கடை அமைக்க வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். நிர்வாக பணிகள் முடிவடைந்ததையடுத்து வடலிவிளையில் புதிய ரேசன் கடை கட்டிடம் அமைக்கும் பணியினை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பாலப் பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ், கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், பாலப்பள்ளம் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பெலிக்ஸ் ஆன்றனி, ஜெபர்சன், ரவிசந்திரன் மற்றும் லாசர், கிரேசி, சாக்டோ மற்றும் காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழலகம் கட்டிடம்.
- 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரம் ஊராட்சி மற்றும் காரையூர் ஊராட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகங்களை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
அதுபோல் உத்தமசோழபுரம் ஊராட்சி, பூதங்குடி மற்றும் திட்டச்சேரி பேரூராட்சி, மரைக்கான்சாவடி பகுதியில் தலா ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் திறந்து வைத்தார்.
இதில், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன், திட்டச்சேரி சுல்தான், ஊராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் காசிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இரண்டு ஆண்டு களாக இடிந்து விழும் நிலையில் உள்ளது.
- கிராம நிர்வாக அலுவலர் கட்டத்திற்கு அருகில் அங்கன்வாடிமைய கட்டிடமும் அமைந்துள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியம் ஊராட்சியில்துளசிபுரம் ஊராட்சிஉள்ள கிராம நிர்வாக அலுவலககட்டிடம் கடந்த 2004 கட்டபட்டது.
தற்போது இரண்டு ஆண்டு களாக இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு சான்றுகள் வாங்க வந்து செல்கின்றனர்.
மோசமான நிலையில் உள்ள இந்த கிராம நிர்வாக அலுவலர் கட்டத்திற்கு அருகில் அங்கன்வாடிமைய கட்டிடமும் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.
எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என இப்பகுதிமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டது.
- ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி, வவ்வாலடி நடுநிலைப் பள்ளி வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரண த்தால் முழுவதுமாக இடிக்க ப்பட்டுவிட்ட நிலையில், போதிய இடவசதி இன்றி பள்ளி இயங்கி வருவதை அறிந்த நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், அண்மையில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, உடனடியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க ப்படுமென உறுதியளித்தார்.
அதன்படி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில், இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளி ட்டோர் பங்கேற்றனர்.
- விளநகர் கிராமத்தில் சொந்த கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
- உறுப்பினர்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-
ரஜினி:-
கொண்டத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை விரைந்து கட்டித்தர வேண்டும். பாகசாலை ஊராட்சி ஆதிதிராவிடர் சுடுகாட்டு சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும்.
தேவிகா:-
இலுப்பூர் ஊராட்சி வடக்கு தெரு, சிவன் கோயில் தெருவிற்கு தார்சாலை அமைத்து தர வேண்டும்.
முத்துலட்சுமி:-
விளநகர் கிராமத்தில் சொந்த கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
ஜெயந்தி:-
தில்லையாடி ஊராட்சி நாகப்பன் நகரில் அனைத்து தெருவிற்கும் புதிதாக சாலை அமைத்து தர வேண்டும்.
ராணி:-
முடிகண்ட நல்லூர் வண்ணாங்குளத்தில் படித்துறை கட்டித்தர வேண்டும். ராஜா தெரு மற்றும் திருச்சம்பள்ளி முதலியார் தெருவில் தார் சாலை அமைத்து தர வேண்டும். சொந்தக் கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
கிருபாவதி:-
நல்லாடை ஊராட்சி பனங்குடி பஸ் நிறுத்தம் அருகே புதிதாக சாலை அமைத்து தர வேண்டும்.
இதுதொடர்பாக ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், தற்போது உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
பொறியாளர் முத்துகுமார், அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.