search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 பேர் மாயம்"

    • தேனியில் வெவ்வேறு பிரச்சினைகளில் மாணவி உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே கடமலை க்குண்டு தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகள் அனுசியா(17). இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சரியாக படிக்கா ததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதனால் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளி யேறிசென்றவர் வீடு திரும்பவில்லை.அக்கம்ப க்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    கூடலூரை சேர்ந்தவர் குமணன் மனைவி பிரியா(23). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரண மாக இவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் கோபித்துகொண்டு சென்ற பிரியா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின்பேரில் கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாவை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் வனராஜ் மகன் முத்துச்செல்வம்(16). இவர் ராயப்பன்பட்டி பகுதியில் உள்ள பள்ளிவிடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறைக்காக வீட்டுக்கு சென்ற அவர் அதன்பிறகு கல்லூரிக்கு வரவில்லை.

    பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் விடுதி கண்காணிப்பாளர் எபினேசர் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

    • மகள், மகன் மற்றும் மற்றொருவரது மகள் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி பாரஸ்ட் ரோடு 9-வது தெருவை சேர்ந்தவர் தவமணி மகள் யுவஸ்ரீ(17). இவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவ த்தன்று யுவஸ்ரீ திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    ஜெயமங்கலம் அருகே மேல்மங்கலத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(30). இவரது மனைவி ஜெயபாரதி(22). மகன் திவாசன்(2), சிவக்குமார் கிரசர் நிறுவன த்தில் சூப்பர்வைசராக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார்.

    மீண்டும் வீடு திரும்பிய போது தனது மனைவி மற்றும் மகன் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் விசாரித்தும் கிடைக்காததால் ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவி, ஒரு பெண் மற்றும் 10ம் வகுப்பு மாணவன் உள்பட மாயமாகினர்.
    • அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை 9-வது வார்டு கருப்பையா தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகள் ஓவியா (வயது 19). இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு வராததால் இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தாய் ராதிகா கல்லூரியில் வந்து விசாரித்து உறவினர் வீடுகள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

    அதில் மார்க்கையன் கோட்டையைச் சேர்ந்த விஜய் என்பவர்தான் கடத்திச் சென்றிருக்க கூடும் என தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே உள்ள பங்களாபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகள் பேபி ஷாலினி (21). இவர் பி.ஏ. முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மாயமானார். இது குறித்து அவரது தந்தை பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி தாலுகா கரட்டுப்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்த சிவனாண்டி மகன் ஸ்ரீதர் (வயது 16). 10ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவர் மாலையில் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை சிவனாண்டி க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கல்லூரி செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை
    • இது குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மனைவியை தேடி வருகின்றனர்.

    அதேபோல் அதியமான் கோட்டை அருகே உள்ள கோம்பேறி பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் இண்டூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதேபோல் அரூர் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரி செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரது பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • கடந்த 16-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து காரிமங்கலம்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கலேகொண்ட பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒசூர் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் வானியம்பாடி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 20) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம்,தொகரப்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி. இவர் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 16-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் மத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் ஜிட்டோபனப்பள்ளியை சேர்ந்த டிரைவர் சூரியா என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள எல்லன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் காரிமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காரிமங்கலத்தில் சந்தைக்கு செல்வதாக கூறி சென்ற ரேகா பின்னர் வீடு திரும்பவில்லை.
    • குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் ஊராட்சி சொன்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தன பாண்டியன். இவரது மனைவி வினோதினி (வயது23).இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

    கடந்த 13-ம் தேதி வினோதினி தனது இரண்டு குழந்தைகளுடன் மாயமான நிலையில் அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே போல் காரிமங்கலம் அடுத்த குப்பங்கரை பகுதியை சேர்ந்த செல்வம். இவரது மனைவி ரேகா (வயது 23). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    நேற்று முன்தினம் காரிமங்கலத்தில் சந்தைக்கு செல்வதாக கூறி சென்ற ரேகா பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து கணவர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல் காரிமங்கலம் அரசு கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவி விடுதியில் இருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதியில் இருந்து வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்த காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • விருதுநகர் மேற்கு போலீசில் மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள குள்ளகவுண்டன்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த வர் சரவ ணன்(வயது38). இவரது மனைவி கற்பக வள்ளி. இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு 2 குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து ஏழாயிரம்பண்ணையில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். இந்த நிலையில் ஏழாயிரம்பண்ணை போலீஸ் நிலையில் மனைவியை கண்டுபிடித்து தருமாறு சரவணன் புகார் செய்தார். அதில் ரவிக்குமார் என்பவர் தனது மனைவிக்கு பழக்கம் இருந்ததாகவும், அவர் அழைத்து சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் திருவேட்டை(56), பட்டாசு தொழிலாளி. மதுரையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றவர் மாயமானார். எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் முத்தால்நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் வீரபெருமாள்(23). கட்டிடத்தொழிலாளியான இவர் வேலைக்காக ராஜபாளையம் சென்றார். இரவு 10 மணிக்கு உணவு சாப்பிட்டு கொண்டிருப்பதாக தந்தையிடம் போனில் தெரிவித்தார். அதன் பின்னர் போன் அணைந்து விட்டது.அதன் பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. நண்பரிடம் விசாரித்த போது வீட்டிற்கு சென்றதாக தெரிவித்துள்ளார். ஆனால் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து தங்கவேல் விருதுநகர் மேற்கு போலீசில் மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். போலீசார் வீரபெருமாளை தேடி வருகின்றனர்.

    • 25-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.
    • மத்தூர் போலீசார் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள அத்திபள்ளம் பகுதியை சேர்ந்தவர் மோனிஸ் கிருஷ்ணா (வயது 15). பள்ளி மாணவனான இவர் கடந்த 25-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.

    இது குறித்து அவரது தாய் சுதா கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர்.

    இதேபோல ஊத்தங்கரை அருகேயுள்ள கொல்லபட்டியை சேர்ந்த குமரேசன் (34) என்பவர் கடந்த 25-ம் தேதி முதல் காணாமல் போய் விட்டார், இது குறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் பெங்களூருவை சேர்ந்த சல்மான்கான் (23) என்ற வாலிபர் ஓசூர் ராம்நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தவர் அதன் பிறகு ஊர் திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் ஹிதாஜி பானு கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சல்மான்கானை தேடி வருகின்றனர்.

    • கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
    • தனது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார்.

    கோவை,

    நேபாள நாட்டை சேர்ந்தவர் பிரேந்திர கர்ணா (வயது 22). இவர் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரி விடுதியில் இருந்த பிரேந்திர கர்ணா ெதன்னம்பா ளையத்துக்கு செல்போன் சர்வீஸ் செய்ய செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் விடுதிக்கு திரும்பி வரவில்லை. இது குறித்து விடுதி வார்டன் சுப்பிரமணியன் மாயமான நேபாள நாட்டு மாணவர் பிரேந்திர கர்ணாவை கண்டு பிடித்து தரும்படி சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வெளிநாட்டு மாணவரை தேடி வருகிறார்கள்.

    ஆழியாறை சேர்ந்த 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி அடிக்கடி யாருடனோ அதிக நேரம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த மாணவி வீட்டை விட்டு மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி ஆழியாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

    சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தை சேர்ந்த 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியின் தந்தை விபத்தில் படுகாயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக மாணவி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது குறித்து மாணவியின் தாய் சூலூர் போலீசில் மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார். 

    • வேலைக்கு செல்வதாக கூறி விட்டு புறப்பட்டு சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை.
    • கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள லக்க சத்திரம் பகுதியை சேர்ந்தவர் திம்மக்கா (வயது 20).

    தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த திம்மக்கா கடந்த 19 -ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு புறப்பட்டு சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை.

    இந்நிலையில் ஓசூர் பகுதியி சேர்ந்த சர்வேஷ் என்பவர் திம்மக்காவை கடத்தி சென்றுவிட்டதாக திம்மக்காவின் பெற்றோர் தந்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல தளி அருகேயுள்ள கரடிக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் நேற்று வீட்டை விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. திம்மரெட்டிபகுதியை சேர்ந்த ராஜா (20) என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக தளி போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

    இதேபோல கிருஷ்ணகிரி விநாயகர் தெரு பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் நேற்று வீட்டை விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    அவரது பெற்றோர் தந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினை மற்றும் வீட்டைவிட்டு வெளியே சென்ற பெண்கள் திடீரென மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    போடி புதுகாலனியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி அமுதா(36). இவர்களுக்கு பிரியதர்ஷன், தேவ்பிரசாத் என 2 மகன்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சலில் இருந்த அமுதா தனது 2-வது மகன் தேவ்பிரசாத்தை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்வதாக வீட்டில் கூறிச்சென்றார்.

    ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த அறிவுச்செல்வம் மகன் சாருலதா(21). இவர் கம்பத்தில் உள்ள ஜவுளிகடையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சாருமிதா மாயமானார். அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் மாயமானார்.
    • சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள 78 கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகள் அமுதவல்லி (வயது 20) என்பவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நூல் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 17-ந் தேதி வீட்டுக்கு வந்த அவர் 24-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து திருநாவலூர் போலீசில் அமுத வள்ளியின் அண்ணன் மணிகண்டன் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து மாயமான அமுதவல்லியை தேடி வருகின்றனர்.

    அதேபோல் உளுந்தூர்பேட்டை பாளையப்பட்டு தெருவில் வசித்து வருபவர் கேசவன் (44). இவருடைய மகள் ரஞ்சனி (21) பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவரை காணவில்லை. இது குறித்தும் உளுந்தூர்பேட்டை போலீசில் கேசவன் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் செல்வம் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றார். உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கிராமத்தில் பிளஸ்-2 படித்து வரும் சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசில், சிறுமியின் தாய் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றார். தொடர்ந்து உளுந்தூர்பேட்டை பகுதியில் பள்ளி மாணவர்கள் 3பேர் மாயமானது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சிைய ஏற்படுத்தி உள்ளது.

    ×