search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 234444"

    • பக்தா்கள் நோ்த்திக் கடனாகவும், பிற காரணங்களுக்காகவும் காணிக்கையாக செலுத்திய நகைகளை உருக்கக்கூடாது
    • தங்க நகைகளை உருக்கிய செய்தி பக்தா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் :

    ஆலயங்களில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கத்தை உருக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பத்திரத்தை தமிழக முதல்வரிடம் கொடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. பக்தா்கள் நோ்த்திக் கடனாகவும், பிற காரணங்களுக்காகவும் காணிக்கையாக செலுத்திய நகைகளை உருக்கக்கூடாது என்று இந்து முன்னணி சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே, தங்க நகைகளை உருக்கிய செய்தி பக்தா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை நீதிமன்றமே வரையறுத்த பின்னரும் கூட அறங்காவலா்களை நியமிக்காமலும், கோவில் நிலங்கள் எவ்வளவு உள்ளது, குத்தகைதாரா்கள் வாடகையாக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்து இந்து சமய அறநிலையத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணம், அபிஷேக கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம் என்று அனைத்துக்கும் கட்டணம் வாங்கிய பிறகும் கோவில்களை நிா்வகிக்க முடியாதா? கோவில்களுக்கு பக்தா்கள் நோ்த்திக்கடனாக வழங்கிய நகைகளைக் கொண்டு சிரமப்பட்டு கோவில்களை நிா்வகிக்க வேண்டாம். இந்த நகை உருக்கும் திட்டம் மாபெரும் ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்தத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதன்படி நிகழாண்டிற்கான ஆண்டு திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருப்பூண்டி அடுத்த சோழவித்யாபுரத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தின் உபகோவிலான புனித சந்தனமாதா ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நிகழாண்டிற்கான ஆண்டு திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி நடைபெற்றது. இதனையொட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் சம்மனசு, அந்தோணியார், சூசையப்பர், சுவக்கின், சந்தனமாதா ஆகியோர் எழுந்தருளினர். முன்னதாக, வேளாங்கண்ணி தியான இல்லத்தின் இயக்குனர் செபஸ்தியான் தலைமையில் நவநாள், ஜெபம் உள்ளிட்ட சிறப்புத்திருப்பலி நடைபெற்றது.

    பின்னர், புனிதம் செய்ததை தொடர்ந்து சப்பரம் ஆலய வளாகத்திலிருந்து தொடங்கியது.முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இடைக்காட்டூரில் திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி திருவிழா நடந்து வருகிறது.
    • தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த இடைக்காட்டூரில் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இங்கு 128 -ம் ஆண்டு திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி திருவிழா கடந்த

    23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    தமிழக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இங்கு மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருஇருதய பெருவிழா சிறப்பாக 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த விழாவில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு ஏசு நாதரின் வாழ்வின் அற்புதங்களை எடுத்துரைப்பார்கள்.

    இன்று முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா சிறப்பு திருப்பலியும், மாலை 6மணிக்கு திருஇருதய சொரூபம் தாங்கிய திரு தேர்பவனியும் நடைபெறுகிறது. நாளை (2-ந்ேததி) நற்பவனி விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல பணியாளர் இம்மானுவேல் தாசன், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செசல்ஸ் பேரவையினர் செய்து வருகின்றனர்.

    திருவிழாவை முன்னிட்டு மதுரை மத்திய பஸ்நிலையம், எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து இடைக்காட்டூர் ஆலயத்துக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்திலேயே ஏசுநாதர் தனது இடதுபக்க இருதயத்தை காண்பித்தப்படி உள்ள ஒரே ஆலயம் இதுதான். பிரான்ஸ் நாட்டு கட்டிட கலையான "கோதிக்'' கட்டிட கலை நுட்பத்துடன தமிழகத்தில் முதன் முதலில் கட்டப்பட்டது இந்த தேவாலயம் ஆகும்.

    • குரு பாத தரிசன லிங்கத்திற்கு 21 வகையான பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • பூமாதேவி ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள சித்தர் பீடம் ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயத்தில் குரு பூஜை விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 5 மணிக்கு மகா கணபதி பூஜை, கும்ப பூஜை, கணபதி ஹோமம், குரு மூல மந்திர ஜெபம், புர்ணாகுதி நடைபெற்றது.

    ஸ்ரீ குரு பாத தரிசன லிங்கத்திற்கு 21 வகையான மாபொடி, மஞ்சள், திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உண்பான் படைத்து சோடனை தீபாராதனையும் உச்சிகால பூஜையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் பூஜைகளை செய்தார். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், லட்சுமணன், ராஜகந்தன், மந்திரமூர்த்தி, கோபால கிருஷ்ணன் திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, பத்மாவதி, காந்திமதி, பூமாரி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய விழா குழுவினர் செய்திருந்தனர்.

    ×