search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூஸ்டர் தடுப்பூசி"

    • தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது.
    • காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது இதன் எதிரொலியாக தமிழக சுகாதாரதுறை அனைவரும் கட்டாய முககவசம் அணிய உத்திரவிட்டுள்ளது

    கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆரத்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்

    காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கிருமிநாசினி பயன்டுத்த வேண்டும் திருமண மண்டபங்களில் 100-பேர்க்கு அதிகமாக பங்கேற்க்க கூடாது குளிர்சாதனம் பயன்படுத்த கூடாது என பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளார்

    இதன் தொடர்ச்சியாக இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முககவசம் அணிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார் அதிகம் மக்கள் கூடும் பகுதியான காஞ்சிபுரம் நகரில் மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு முககவசத்தை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார் முதல்கட்டமாக எச்சரிக்கை விடுத்து முககவசம் வழக்கி வருகின்றனர் அடுத்த கட்டமாக அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்

    அரசு பேருந்துகளில் பயணம் செய்த பொதுமக்கள் முககவசம் அணியாமல் இருந்த பொதுமக்களுக்கு மாவட்ட எஸ்.பி சுதாகர் முககவசம் வழங்கினார்.

    இந்த விழிப்புணர்வின் போது துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

    • கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.
    • பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்க தொடங்கி உள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

    மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி முகாம்கள் மற்றும் தீவிர கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகஅளவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

    கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். குறிப்பாக வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளிைய தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    எனவே வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். வணிக வளாகங்கள், திரையரங்கு, துணி கடைகள் போன்ற வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும்.

    மேலும் ஒவ்வொரு தனி நபரும் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வெளியில் செல்லும் பொழுது தவறாமல் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்கள் கொரோனாவின் தீவிர பரவல் குறித்த முன்னெச்சரிக்கையுடன் சுயபாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
    • கொரோனாத் தொற்று வேகமெடுத்து பரவுவது துரதிர்ஷ்டவசமானது.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகெங்கும் பரவிய கொரோனா தொற்று கடந்த 2019 டிசம்பரில், தமிழகத்தில் பரவத் தொடங்கிய நிலையில், கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் வாயிலாக கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருந்த சூழலில் தற்போது மீண்டும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நாளொன்றுக்கு 1000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு தொற்று பரவல் அதிகரித்து வருவது வேதனைக்குரியது.

    நோய்ப்பரவல் கட்டுக்குள் இருந்த சமயம், மக்கள் அனைவரும் இயல்புநிலைக்கு திரும்பி பொருளாதாரத்தை மீட்டிட தீவிரமாக பணி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் கொரோனாத் தொற்று வேகமெடுத்து பரவுவது துரதிர்ஷ்டவசமானது என்றாலும் கூட, தடுப்பூசி செலுத்துதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிகளை கடைபிடித்தல், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்த்தல், சானிடைசர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அரசு வெளியிட்டு வரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நோய்த் தொற்று பரவலில் இருந்து தங்களையும், தங்கள் சுற்றத்தாரையும் பாதுகாத்து கொள்ள முடியும். எனவே, பொதுமக்கள் கொரோனாவின் தீவிர பரவல் குறித்த முன்னெச்சரிக்கையுடன் சுயபாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள இளம் வயதினரிடயே ஆர்வம் குறைவாக உள்ளது.
    • 18 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் செலுத்தி போட்டுக் கொள்ளலாம்.

    சென்னை:

    கொரோனா தொற்று மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனாவில் இருந்து பாதுகாக்க ஒரே வழி தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான்.

    2 தவணை தடுப்பூசி போட்டு இருந்தாலும் 2-வது தவணை போட்டு 9 மாதங்கள் கழித்து பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். அப்படியானால் தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    எனவேதான் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளார்கள். சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதை கடந்தவர்களுக்கு மட்டும் அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக போடபப்படுகிறது.

    18 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் செலுத்தி போட்டுக் கொள்ளலாம்.

    ஆனால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்களிடையே ஆர்வம் இல்லை. இதுவரை சுகாதார பணியாளர்களில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 524 பேர் போட்டுள்ளார்கள். முன்கள பணியாளர்களில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 751 பேர் போட்டுள்ளார்கள். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 8 லட்சத்து 47 ஆயிரத்து 558 பேர் போட்டுள்ளார்கள்.

    18 வயதுக்குக்கு மேற்பட்டவர்கள் 1 லட்சத்து 48 ஆயி ரத்து 710 பேர் போட்டுள்ளார்கள். ஆஸ்பத்திரிகளுக்கு தினமும் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே வருகிறார்கள்.

    பூஸ்டர் தடுப்பூசி போட்டால்தான் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்ற நிலையில் மக்களிடையே ஆர்வம் இல்லாததது அதிகாரிகளை கவலை அடைய வைத்து உள்ளது.

    ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதில் 85 சதவீதம் பேர் தடுப்பூசி ஒரு டோஸ் கூட போடாதவர்களாக உள்ளார்கள். 5 சதவீதம் பேர் முதல் தவணை மட்டும் போட்டுக் கொண்டவர்களாகவும் 8 சதவீதம் பேர் 2 தவணை ஊசி போட்டிருந்தும் இணை நோய் உள்ளவர்களாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இரண்டு தவணை ஊசி போட்டு 9 மாதம் கடந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் பெரிய அளவில் சிக்கல் ஏற்படவில்லை.

    தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகி ஆஸ்பத்திரிகளில் அட்மிட் ஆகுபவர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசியே போடாதவர்களாக இருக்கிறார்கள். அல்லது ஒரு தவணை மட்டும் போட்டவர்களாகவே அல்லது இரண்டு தவணை போட்டு ஒரு வருடத்துக்கு மேல் ஆனவர்களாக இருக்கிறார்கள்.

    பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள இளம் வயதினரிடயே ஆர்வம் குறைவாக உள்ளது. முதியோரை பொறுத்தவரை வெளியே சென்று ஊசி போட வருத்தப்பட்டு செல்வதில்லை என்று தெரிய வந்துள்ளது.

    பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் தொற்று ஏற்பட்டால் அபாய கட்டத்துக்கு செல்ல மாட்டார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    ×