search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆறு"

    • தெற்குக்காடு, அரமங்காடு, மருதங்காவெளி உட்பட 19 பகுதிகளிலிருந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டது.
    • மிகவும் பதற்றமான பகுதியாக கருதப்படும் நியூபஜார், கொய்யாமுக்கம், பங்களா வாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று பாமினி ஆற்றில் கரைக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும்.

    இந்த விநாயகர் ஊர்வலம் தமிழகத்தில் பிரபல விநாயகர் ஊர்வலங்களில் ஒன்றாகும்.

    இந்தாண்டு விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நேற்று 30ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

    இதற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.

    முன்னதாக இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.

    அனைத்து கிராம கமிட்டி ஒருங்கினைப்பு குழுத் தலைவர் சிவபிரகாஷம், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற கழக துணைத்தலைவர் ராம்பிரபு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நாடிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிரு ஷ்ணன் ஊர்வல த்தை துவக்கி துவக்கி வைத்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராகளாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில நிர்வாகி ஜீவஜோதி, தென் இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சி நிறுவனர் திருமாறன், பாஜக மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, கல்லடி க்கொல்லை, தெற்குக்காடு, அரமங்காடு, மருதங்காவெளி உட்பட 19பகுதிகளிலிருந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டது.

    ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக பதற்றம் நிறைந்த முத்துப்பேட்டை ஆசாத்நகர் சென்று அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து மிகவும் பதற்றமான பகுதியாக கருதப்படும் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள நியூபஜார், கொய்யா முக்கம், பங்களா வாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் இரவு கரைக்கப்பட்டது.

    ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி. சந்தோஷ் குமார், திருச்சி டிஐஜி சரவணக்குமார், தஞ்சை டிஐஜி கயல்விழி, திருவாரூர் எஸ்.பி.சுரேஷ்குமார், தஞ்சை எஸ்பி ரவளி பிரியா, கரூர் எஸ்பி சுந்தரவதனம், திருநெல்வேலி எஸ்பி சீனிவாசன், நாகை எஸ்பி ஜவகர், சென்னை எஸ்பிகள் துரை, ஜெயசந்திரன், அரியலூர் எஸ்பி புரோஸ் அப்துல்லா, புதுக்கோட்டை எஸ்பி வஞ்சிதா பாண்டி, மயிலாடுதுறை எஸ்பி நிஷா உட்பட 10 எஸ்பிகள், 10ஏடிஎஸ்பி, 37டிஎஸ்பிகள், 38 இன்ஸ்பெக்டர்கள், 334 சப்இன்ஸ்பெக்டர்கள், 1464 தமிழ்நாடு காவல்படை போலீசார், 280 பயிற்சி காவலர்கள், 530 சிறப்பு காவலர்கள், 140போக்குவரத்து காவலர்கள், 25 வெடிகுண்டு நிபுணர்கள், 285 ஆயுதப்படை காவலர்கள், நூறு ஊர் காவல்படையினர் உட்பட திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஆற்றின்கரையோர பகுதிகளில் வசிப்போர் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
    • கரையில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்வதற்கு சவுக்கு கட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    பாபநாசம்:

    கல்லணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியே ற்றப்படும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் காவிரி அரசலாற்றின் கரையோரம் உள்ளகிராம ங்களுக்கு வருவாய், பொது ப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறைகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆற்றின்கரை யோர பகுதிகளில் வசிப்போர் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை சார்பில் நீரோட்டத்தில் வலுவிளக்கும் ஆற்றின் கரைபகுதிகளை பலப்படுத்த பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளன. மேலும், கரையில் உடைப்பு ஏற்பட்டா ல் சரி செய்வதற்கு சவுக்கு கட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும், காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை அப்பகுதியினர் கண்டு ரசித்து வருகின்றனர். காவிரி ஆற்றின் கரைகளை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • இன்றைய காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 ஆயிரத்து 642 கனஅடியாக உள்ளது.
    • கால்வாய் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு முறைப்பாசன ஏற்பாடு உகந்ததாக இல்லை.

    பூதலூர்:

    தஞ்சை வளநாட்டை வளமாக தொடர்ந்து வைத்திருக்கும் காவிரித்தாய் இந்த ஆண்டு பெருகி வந்து கொண்டிருக்கிறாள். கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் பெருகி வந்து மேட்டூர் அணையை நிரப்பிக் கொண்டுள்ளது.

    இன்றைய காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 ஆயிரத்து 642 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 113.96 அடியாக உயர்ந்து உள்ளது.தொடர்ந்து நீர்வரத்து இதே நிலையில் தொடர்ந்தால் இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு இன்று காலை நிலவரப்படி 18,024 கன அடியாக திறந்து விடப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரியில் 510 கனஅடியும், வெண்ணாற்றில் அதிகபட்ச அளவாக 8104 கன அடியும், கல்லணை கால்வாயில் நடப்பு ஆண்டில் இன்றைய தினத்தில் 2,219 கன அடியும், கொள்ளிடத்தில் 1,207 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    காவிரி பாசன பகுதிகளில் உள்ள கடைமடை பகுதிகளில் இன்னமும் தண்ணீர் சென்று சேராத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கல்லணையிலிருந்து 6 நாட்களுக்கு ஒரு முறை காவிரி மற்றும் வெண்ணாற்றில் மாறி மாறி தண்ணீர் திறந்து விடப்படுவது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கால்வாய் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு முறைப்பாசன ஏற்பாடு உகந்ததாக இல்லை. முழு அளவில் நடவு முடியும் வரை அதிகளவில் தண்ணீர் விட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ஒரு பக்கம் தண்ணீர் பெருகி வந்து கொண்டிருந்தாலும் மறுபக்கத்தில் வறட்சியான நிலை எதார்த்தமான ஒன்று. கல்லணையின் தலைப்பு பகுதியாக உள்ள பூதலூர் ஒன்றியத்தின் செங்கிப்பட்டி பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஏரிகள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.செங்கிப்பட்டி பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய், உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் மூலம் தண்ணீர் பெற்று ஏரிகளை நிரப்பி அதன் மூலம் 10,000 ஏக்கர் ஒருபோக சாகுபடி நடைபெறும்.

    இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போது, பரிசோதனை அடிப்படையில் செங்கிப்பட்டி பகுதி பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டு இருபோக சாகுபடி செய்ய வழிவகை செய்யப்படுமா ? என்று மாலை மலரில் செய்தி வெளியாகி இருந்தது.

    அதை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மற்றவர்களும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இன்னமும் காலம் கடத்தாமல் பூதலூர் ஒன்றியத்தின் செங்கிப்பட்டி பகுதி பாசனத்திற்கு உடனடியாக புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் களில்தண்ணீர் திறந்து ஏரிகளை நிரப்பி, ஒட்டுமொத்தமாக நாற்றங்கால் அமைத்து இந்த பகுதியில் இரு போக சாகுபடிக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேளாண் துறையும், நீர்வள ஆதார துறையும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது விவசாயத் துறை முன்னோடி்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • ரப்பர் மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டார்.
    • கால்தவறி ஆற்றுக்குள் விழுந்தார்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள செங்கோடி ஊர டியைச் சேர்ந்தவர் அருள் தாஸ் (வயது 38), ரப்பர் தோட்ட தொழிலாளி.

    நேற்று மாலை இவர் ரப்பர் மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டார். இதற்காக மாத்தூர் தொட்டிப்பாலம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அருள்தாஸ் கால்தவறி ஆற்றுக்குள் விழுந்தார். அவரை சக தொழிலாளர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் நீரில் மூழ்கி அருள்தாஸ் இறந்து விட்டார்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் திருவட்டார் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆறு, கண்மாய், நீர்-நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிக்கை எழுந்துள்ளது.
    • லெனின் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அமைப்பாளர் பாண்டி தலைமையில் நடந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் லெனின் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அமைப்பாளர் பாண்டி தலைமையில் நடந்தது. ஒன்றிய அமைப்பாளர் வீரையா, கல்லல் ஒன்றிய அமைப்பாளர் பாண்டி, சிங்கம்புணரி ஒன்றிய அமைப்பாளர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் ஸ்டாலின், ஸ்தாபன செயலாளர் லீலாவதி, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ரங்கையா ஆகியோர் பேசினர். திருப்பத்தூர் ஒன்றிய அமைப்பாளர் கருப்பையா நன்றி கூறினார். சிவகங்கை மாவட்டத்தில் ஆறு, கண்மாய், குளம் போன்ற நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    காளையார் கோவில் ஒன்றிய செயலாளர் காளைலிங்கம், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் முத்துசாமி, திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

    • பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • தூர்வாரும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் எந்திரம் வெள்ளத்திலும், சேற்றிலும் சிக்கியது

    ஊட்டி:

    பந்தலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான உப்பட்டி, பொன்னானி, குந்தலாடி, பிதிர்காடு, நெலாக்கோட்டை, தேவாலா, சேரம்பாடி, எருமாடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.

    இதனால் பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அய்யன்கொல்லி-கொளப்பள்ளி சாலை, பந்தலூர்-கூடலூர் சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் குழிகளில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பொன்னானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, அருகே உள்ள ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. இதை தடுக்க வேளாண்மை பொறியியல் துறை சார்பில், பொக்லைன் எந்திரம் மூலம் பொன்னானி ஆற்றை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. பொக்லைன் எந்திரம் நேற்று முன்தினம் பலத்த மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அப்போது தூர்வாரும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் எந்திரம் வெள்ளத்திலும், சேற்றிலும் சிக்கியது. இதையடுத்து மற்றொரு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, கரையோர மண் அகற்றப்பட்டது. பின்னர் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு எந்திரம் மீட்கப்பட்டது.

    இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மேலும் கிராமங்கள் இருளில் மூழ்கியது. இதன் காரணமாக பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இருளிலும், பி.எஸ்.என்.எல். சேவை கிடைக்காமலும் அவதியடைந்தனர். பந்தலூர் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    ×