search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்வு முடிவு"

    • தேர்வு முடிவுகளை upsc.gov.in. என்ற முகவரியில் தேர்வர்கள் காணலாம்
    • யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வு வரும் செப்டம்பர் 20ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்தியா முழுவதும் ஜூன் 16ம் தேதி நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுகளுக்கான முடிவுகளை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

    இந்த தேவை 13.4 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை upsc.gov.in. என்ற முகவரியில் தேர்வர்கள் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு வரும் செப்டம்பர் 20ம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நாடுமுழுவதும் தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • நாடுமுழுவதும் தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுடெல்லி:

    சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    நாடுமுழுவதும் தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அதில், மண்டல வாரியாக 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும், 99.04 சதவீதத்துடன் விஜயவாடா மண்டலம் 2-ம் இடத்திலும், 98.47 சதவீதத்துடன் சென்னை 3-ம் இடத்திலும், 96.95 சதவீதத்துடன் பெங்களூரு 4-ம் இடமும் பிடித்துள்ளது.

    12 ஆம் வகுப்பு தேர்ச்சியில் முதல் 4 இடங்களையும் தென் இந்திய மாநிலங்களே பெற்றுள்ளது.

    உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் (78.25%) , நொய்டா (80.27%) மண்டலங்கள் கடைசி இடங்களையே பிடித்துள்ளது.

    நாடுமுழுவதும் தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அதில், மண்டல வாரியாக, 99.75 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும், 99.60 சதவீதத்துடன் விஜயவாடா மண்டலம் 2-ம் இடத்திலும், 99.30 சதவீதத்துடன் சென்னை 3-ம் இடத்திலும், 99.26 சதவீதத்துடன் பெங்களூரு 4-ம் இடமும் பிடித்துள்ளது.

    10 ஆம் வகுப்பு தேர்ச்சியிலும் முதல் 4 இடங்களை தென் இந்திய மாநிலங்களே பெற்றுள்ளது.

    அசாம் மாநிலத்தின் கவுகாத்தி ( 77.94%) , உத்தரபிரதேசத்தில் நொய்டா (90.46%) மண்டலங்கள் கடைசி இடங்களை பிடித்துள்ளது.

    • சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரை நடந்தது.
    • நாடு முழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுடெல்லி:

    மத்திய கல்வி பாட வாரியம் (சி.பி.எஸ்.இ.) பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரை நடைபெற்றது.

    இந்த தேர்வை நாடு முழுவதும் 25,724 பள்ளி மாணவ-மாணவிகள் 7,603 மையங்களில் எழுதினார்கள். 22 லட்சத்து 38 ஆயிரத்து 827 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

    சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் 20 லட்சத்து 95 ஆயிரத்து 467 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.60 சதவீதமாகும்.

    கடந்த ஆண்டை விட 0.48 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

    அகில இந்திய அளவில் சென்னை மண்டலம் தேர்ச்சி விகிதத்தில் 3-வது இடத்தில் உள்ளது. திருவனந்தபுரம் 99.75 சதவீதம் பெற்று முதலிடமும், விஜயவாடா 99.60 சதவீதத்துடன் 2-வது இடமும், சென்னை 99.30 சதவீதத்துடன் 3-வது இடமும் பெற்றுள்ளது.

    • சகோதரிகள் இருவரும் பிளஸ் 2வில் 600க்கு 571 மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியம் அளித்துள்ளனர்.
    • இரட்டையர்களான சுக்கி, இப்பானி சந்திரா இருவரும் 10-ம் வகுப்பில் 620 மதிப்பெண்கள் எடுத்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் சுக்கி மற்றும் இப்பானி சந்திரா ஆகியோர் பிளஸ் 2 வில் 600க்கு 571 மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியம் அளித்துள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுக்கு முன் 10ம் வகுப்பு தேர்விலும் இருவரும் 625க்கு 620 மதிப்பெண்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக சகோதரிகளில் ஒருவரான சுக்கி கூறுகையில், இது ஒரு தற்செயலான நிகழ்வு. நாங்கள் எப்படி ஒரே மதிப்பெண் பெற்றோம் என்பது எங்களுக்கே தெரியவில்லை என்றார்.

    நாங்கள் பிறப்பில் மட்டும் இரட்டைப் பிறவி அல்ல, மதிப்பெண்கள் எடுப்பதிலும் ஒரே மாதிரி என இருவரும் சொல்லிவைத்தாற் போல் ஒரே மதிப்பெண்கள் எடுத்த சம்பவம் பெங்களூருவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • எங்களைப் பொருத்தவரை விஷாலின் 35 சதவீத மதிப்பெண் கூட பெரிய விஷயம்தான்.
    • பெற்றோரின் மனதைக் கவரும் பதிலைக் கண்டு இணையப் பயனர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதில், மும்பையைச் சேர்ந்த பெற்றோர் தங்களது மகன் விஷால் 6 பாடங்களிலும் 35 மதிப்பெண்களைப் பெற்று ஜஸ்ட் பாஸ் ஆனாதை நெகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.

    பொதுத்தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் உடனே மனமுடைந்து தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவங்களுக்கு மத்தியில், இதுவும் பெரிய விஷயம் தானே என்று ஜஸ்ட் பாஸ் ஆன மகனை பாராட்டிய செயல் பெற்றோர்களுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர்.

    மராத்தி நடுநிலைப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர் எடுத்த 35 சதவீத மதிப்பெண்ணை பெருமையோடு காண்பித்த பெற்றோரின் வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "மும்பையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் தேர்வில் 35% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால், சோகமாகவோ, கோபமாகவோ இருப்பதற்குப் பதிலாக, அவரது பெற்றோர்கள் அவரது வெற்றியைக் கொண்டாடினர்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, "குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதைத்தான் பல பெற்றோர் விரும்புகின்றனர். கொண்டாடுகின்றனர். ஆனால், எங்களைப் பொருத்தவரை விஷாலின் 35 சதவீத மதிப்பெண் கூட பெரிய விஷயம்தான்" என மாணவரின் தந்தை நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

    பெற்றோரின் மனதைக் கவரும் பதிலைக் கண்டு இணையப் பயனர்கள் இன்ப அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    • தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ், டிஜி லாக்கர் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
    • இரண்டாம் தாளில் 12.76 லட்சம் பேர் பங்கேற்றதில் 3.76 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

    சேலம்:

    மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) இணைப்பில் உள்ள பள்ளிகள் மற்றும் இந்திய அரசாங்கம் சார்பில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிடெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

    அதன்படி நடப்பாண்டுக்கான தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 7-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதில் சென்னை, கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், ஈரோடு என தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளநிலை ஆசிரியர் பட்டதாரிகள், முதுநிலை ஆசிரியர் பட்டதாரிகள் ஏராளமானோர் பங்கேற்று ஆர்வத்துடன் எழுதினர்.

    இதன் முடிவுகள் மத்திய கல்வி அமைச்சகத்தின் https://ctet.nic.in/ என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ், டிஜி லாக்கர் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

    அதில் இருந்து தேர்வர்கள் தங்கள் செல்போன் எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம். தேர்வில் 14.22 லட்சம் பேர் முதல் தாளில் பங்கேற்றனர். அவர்களில் 5.80 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இரண்டாம் தாளில் 12.76 லட்சம் பேர் பங்கேற்றதில் 3.76 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

    • நாடு முழுவதும் 1.56 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
    • மும்பை மண்டலம் நடத்திய தேர்வில் பெங்களூர் மாணவர் ஆர்.கே.ஷிசிர் ஜே.இ.இ. முதன்மை தேர்வில் முதல் இடத்தை பிடித்தார்.

    ஜே.இ.இ. முதல்நிலை மற்றும் ஜே.இ.இ. முதன்மை (அட்வான்ஸ்) தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.டி. போன்ற மத்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற முடியும்.

    மேலும் இந்த தேர்வில் முதல் 2.5 லட்சம் இடங்களில் வருபவர்கள் ஜே.இ.இ. முதன்மை தேர்வை எழுதும் தகுதியை பெறுவர்.

    முதன்மை தேர்வில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல்- தொழில்நுட்ப படிப்புகளில் சேர்க்கை பெற முடியும்.

    இந்தநிலையில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு jeeadv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 1.56 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் 40 ஆயிரத்து 712 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 6 ஆயிரத்து 516 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    மும்பை மண்டலம் நடத்திய தேர்வில் பெங்களூர் மாணவர் ஆர்.கே.ஷிசிர் ஜே.இ.இ. முதன்மை தேர்வில் முதல் இடத்தை பிடித்தார். அவர் 360 மதிப்பெண்ணுக்கு 314 மார்க் பெற்றார்.

    • ப்ளஸ் 2 தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி.
    • இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

    நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த நிலையில், 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 10ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    www.cbse.results.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    • கோவை மாவட்டத்தில் கோவை மாநகர் பொள்ளாச்சி எஸ்.எஸ்.குளம் பேரூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளது.
    • கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் கோவை மாவட்டம் 14-வது இடத்தில் இருந்தது இந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவில் கோவை மாவட்டம் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

    கோவை:

    தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி 30-ந் தேதி முடிவடைந்தது. கோவை மாவட்டத்தில் கோவை மாநகர் பொள்ளாச்சி எஸ்.எஸ்.குளம் பேரூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளது.

    இந்த கல்வி மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வினை 524 பள்ளிகளை சேர்ந்த 19 ஆயிரத்து 827 மாணவர்களும், 19 ஆயிரத்து 804 மாணவிகள் என மொத்தம் 39 ஆயிரத்து 636 பேர் எழுதினர்.

    இன்று தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 39 ஆயிரத்து 636 பேரில், 17 ஆயிரத்து 584 மாணவர்களும் 19 ஆயிரத்து 27 மாணவிகளும் என மொத்தம் 36 ஆயிரத்து 661 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.69, மாணவிகள் தேர்ச்சி வீதம் 96.08 என மொத்தமாக மாவட்டத்தில் 92.38 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் கோவை மாவட்டம் 14-வது இடத்தில் இருந்தது இந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவில் கோவை மாவட்டம் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    ×