என் மலர்
நீங்கள் தேடியது "மாணவன் தற்கொலை"
- கோகுலை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அவருக்கு மெட்ராஸ் ஐ இருப்பது தெரியவந்தது.
- பள்ளிக்கு 3 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் கோகுல் வீட்டில் இருந்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு சென்னிமலை ரோடு, முத்தம்பாளையம், இமயம் நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி நாகஜோதி. இவர்களுக்கு தீபக், கோகுல் (15) என 2 மகன்கள் இருந்தனர்.
இதில் மூத்த மகன் தீபக் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். கோகுல் வெள்ளோடு அரசு மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை கோகுல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது தனக்கு கண் வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து கோகுலை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அவருக்கு மெட்ராஸ் ஐ இருப்பது தெரியவந்தது. இதனால் பள்ளிக்கு 3 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் கோகுல் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை கோகுலின் தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் கோகுல் மட்டும் தனியாக இருந்துள்ளார். மாலை வேலை முடிந்து கோகுலின் தாய் நாகஜோதி வீட்டுக்கு வந்தார். வீட்டில் கோகுல் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் வீட்டு மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தபோது அறையின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. கதவை பலமுறை தட்டியும் பதில் ஏதும் வரவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் கோகுல் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக கோகுலை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கோகுல் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோகுல் நன்கு படிக்காத காரணத்தால் பெற்றோருக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தற்கொலைக்கு முன்னதாக மாணவன் எழுதி வைத்த குறிப்பை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
- படிப்பில் அழுத்தம் அதிகரிப்பதற்கு பயிற்சி நிறுவனமே பொறுப்பு என மாணவரின் தந்தை கூறி உள்ளார்.
கோட்டா:
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவன் பெயர் அபிஷேக் யாதவ். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோட்டா நகரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.
கடந்த சில தினங்களாக பயிற்சி மையத்திற்கு செல்லாமல் இருந்த அபிஷேக் யாதவ், நேற்று தனது விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கி மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதி வைத்த குறிப்பை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், தான் சிக்கலில் இருப்பதாகவும், படிப்பால் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறி, பெற்றோரிடம் தன்னை மன்னிக்கும்படி கூறியிருக்கிறார். எனினும் படிப்பில் அழுத்தம் அதிகரிப்பதற்கு பயிற்சி நிறுவனமே பொறுப்பு என மாணவரின் தந்தை கூறி உள்ளார்.
கோட்டா நகரில் இந்த ஆண்டு இதுவரை 4 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குகன் வீட்டில் இருக்கும் 2 செல்போன்களை எடுத்து நண்பர்களுடன் பப்ஜி, ப்ரீபயர் உள்ளிட்ட கேம்களை விளையாடி வந்துள்ளார்.
- வீட்டில் பெற்றோர் பலமுறை கண்டித்தும் குகன் கேட்காமல் செல்போனில் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள் நகரை சேர்ந்த சுசிகரன்-வித்யா சரஸ்வதி தம்பதி மகன் குகன் (வயது 13) .
சுசிகரன் பெட்டிக்கடை வைத்துள்ளார். குகன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
குகன் வீட்டில் இருக்கும் 2 செல்போன்களை எடுத்து நண்பர்களுடன் பப்ஜி, ப்ரீபயர் உள்ளிட்ட கேம்களை விளையாடி வந்துள்ளார். வீட்டில் பெற்றோர் பலமுறை கண்டித்தும் குகன் கேட்காமல் செல்போனில் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று 2 செல்போன்களிலும் நெட் இணைப்பு தீர்ந்ததால் விளையாட முடியவில்லை என்ற மனவேதனையில் இருந்த குகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தற்கொலை செய்து கொண்ட மாணவன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்.
- மாணவர் தற்கொலை குறித்து ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா விசாரணை நடத்துகிறார்.
சேலம்:
சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சந்துரு என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனியார் பள்ளியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விடுதி வார்டன் அளித்த தகவலின் பேரில் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர் தற்கொலை குறித்து ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா விசாரணை நடத்துகிறார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேர்வில் தோல்வி பயத்தில் இருந்த ஹரி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
- வீடு திரும்பிய தந்தை தூக்கில் மகன் பிணமாக தொங்கியதைக் கண்டு அழுது துடித்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள நாராயணகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. விவசாயி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார்.
இவருடைய மகன் ஹரி (வயது 18) தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்த இவர் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது.
தேர்வில் தோல்வி பயத்தில் இருந்த ஹரி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை அவரது தந்தை வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்தில் ஹரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீடு திரும்பிய அவரது தந்தை தூக்கில் மகன் பிணமாக தொங்கியதைக் கண்டு அழுது துடித்தார். தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதில் மாணவன் ஹரி தோல்வி அடைந்திருந்தார். தேர்வு தோல்வி பயத்தின் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தற்கொலை உள்ளிட்ட விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டாம். மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
- கடந்த 7-ந்தேதி நீட் தேர்வை பரமேஸ்வரன் எழுதினார். தேர்வை சரிவர எழுதவில்லை என்று தெரிகிறது.
- பரமேஸ்வரன் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜங்களாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பரமேஸ்வரன் (வயது 17). இவர் பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்றார்.
கடந்த 7-ந்தேதி நீட் தேர்வை பரமேஸ்வரன் எழுதினார். தேர்வை சரிவர எழுதவில்லை என்று தெரிகிறது. இதனால் பரமேஸ்வரன் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதனைக் கண்ட பெற்றோர் அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பரமேஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செந்தில்குமார் நாட்டறம்பள்ளி போலீசில் புகார் அளித்தார்.
பரமேஸ்வரன் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் அருகே உள்ள சுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சந்திரன் (வயது 15).
இவர் பச்சூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் கடந்த 6 மாதமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி சந்திரனுக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதில் வலி தாங்க முடியாத மாணவன் வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை குடித்து மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த அவரது குடும்பத்தினர், சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மாணவன் பிரவீன் குமாருக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்தணி:
திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பிரவீன்குமார் (வயது11). இவர், பொதட்டூர் பேட்டை அருகே உள்ள பாண்டரவேடு கிராமத்தில் உள்ள புனித இதய மேல் நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 6-ம் வகுப்பு படித்து வந்தார். ஆனால் மாணவன் பிரவீன் குமாருக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சனி, ஞாயிறு விடுமுறை நாளில் விடுதியில் இருந்து வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் அவர் பள்ளிக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை பெற்றோர் பள்ளியில் விட்டு வந்து உள்ளனர்.
இந்த நிலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த மாணவன் பிரவீன்குமார் திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
விடுதியில் தங்கி படிக்க விருப்ப மில்லாத நிலையில் பெற்றோரின் வற்புறுத்தலால் மனம் உடைந்த மாணவன் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இரண்டு முறை தேர்ச்சி பெற முடியாத விரக்தியில் மாணவன் தற்கொலை
- பாசமாக வளர்த்த மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தையும் தற்கொலை
சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோகிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன் 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.
மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் 2 வருடமாக நீட் தேர்வு எழுதினார். ஆனால் தொடர்ந்து 2 முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதி அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்குவேன் என்ற நம்பிக்கையோடு இருந்த அவர், நீட் பயிற்சி மையத்துக்கு ஆன்லைனில் பணமும் கட்டினார்.
இதற்கிடையே, நீட் பயிற்சி மையத்தில் தன்னுடன் படித்த மாணவர்கள் சிலர் 450 மதிப்பெண்கள் பெற்றும் அரசு ஒதுக்கீடு கிடைக்காததால் என்ஜினீயரிங் படிப்பை தேர்ந்தெடுத்து சேர்ந்துள்ளனர்.
2 பேர் தனியார் கல்லூரியில் அதிக பணம் கட்டி நிர்வாக ஒதுக்கீட்டு சீட் பெற்று எம்.பி.பி.எஸ். சேர்ந்துள்ளனர். இதனால் நண்பர்கள் யாரும் தன்னுடன் மீண்டும் நீட் தேர்வு எழுதவில்லை என்பதால் மனக்குழப்பத்தில் இருந்தார். விரக்தி அடைந்த ஜெகதீஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிரேத பரிசோதனை முடிந்து நேற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, நீட் தேர்வால்தான் தனது மகன் தற்கொலை செய்து கொண்டான். இதேபோல் மற்ற மாணவர்களும் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறினார்.
தாயார் பிரிந்து சென்ற நிலையில், செல்வம் தனது மகன் ஜெகதீஸ்வரனை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். ஜெகதீஸ்வரன் இழப்பை தந்தை செல்வத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நேற்று தனது உறவினர்களுடன் வீட்டின் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென மாயமாக, அவரது உறவினர்கள் தேடியபோது, கீழே உள்ள ஒரு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கீழே உள்ள வீடு காலியாக இருந்துள்ளது. அந்த வீட்டின் சாவி செல்வத்திடம் இருந்துள்ளது. வீட்டை திறந்து சைக்கிள் மீது ஏறி, தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தையும் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உங்கள் உயர்வுக்குத் தடைக்கல்லாக இருக்கும் நீட் தேர்வு முறையை நிச்சயம் நீக்க முடியும்.
- ஜெகதீஸ்வரன் போன்ற எத்தனை உயிர்கள் பலியானாலும் கவர்னர் ஆர்.என்.ரவி போன்றவர்களின் இதயம் கரையப் போவதில்லை.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரும் மறுநாளில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜெகதீஸ்வரன் குடும்பத்துக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என்ன சொல்லி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை.
நன்றாகப் படிக்கும் மகன், மருத்துவர் ஆவான் என்று தான் அவரைப் பெற்ற பெற்றோர் நினைத்திருப்பார்கள். ஆனால் நீட் தேர்வு எனும் பலிபீடத்தில் பலியானவர்கள் பட்டியலில் ஜெகதீஸ்வரன் சேர்ந்து விட்டது மிகக் கொடூரமான நிகழ்வாகும்.
எந்தச் சூழலிலும் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை எந்த மாணவரும், எப்போதும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் உயர்வுக்குத் தடைக்கல்லாக இருக்கும் நீட் தேர்வு முறையை நிச்சயம் நீக்க முடியும். அதற்கான சட்ட ரீதியான முயற்சியில்தான் தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
ஒரு முறையல்ல, இரண்டு முறை நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். முதலில் அனுப்பி வைக்கும்போது காலம் கடத்தினார். பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் திருப்பி அனுப்பினார். மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினோம். இரண்டாவது முறை அனுப்பி வைத்தால் ஒப்புதல் தந்தாக வேண்டும். ஆனால் அதனை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். எங்காவது போய் அந்த மசோதா கிடப்பில் போடப்பட வேண்டும் என்பது தான் கவர்னர் ரவியின் மோசமான எண்ணம் ஆகும்.
நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் பணம் கட்டிப் படித்தால் வெற்றி பெறக் கூடிய தேர்வு முறையாக இருக்கிறது. அப்படி பணம் கட்டி படிக்க முடியாதவர்கள் தோற்றுப் போகிறார்கள். பணம் கட்டி இரண்டு மூன்று ஆண்டுகள் படிக்க பணம் வைத்திருப்பவர்களால் வெற்றி பெற முடிகிறது.
குறைவான மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் வெற்றி என்ற தகுதியைப் பெற்று விட்டவர்களும், பணம் வைத்திருந்தால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற நிலைமை உள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது பணம் படைத்தவர்களுக்கே மருத்துவக் கல்வி என்ற நிலைமையை உருவாக்கி விட்டார்கள்.
அதை மீறி இதனுள் நுழையும் ஏழை எளிய-அரசு பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் சேர்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் இது எதுவும் கவர்னர் ஆர்.என்.ரவிக்குத் தெரியவில்லை. புரிந்து கொள்ள மறுக்கிறார். அல்லது பயிற்சி நிறுவனங்களின் கைப்பாவையாக அவர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் வருகிறது.
ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்குக் கையெழுத்து போடாமல் இருந்த நேரத்தில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களையே சந்தித்தார். இப்போது கவர்னர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு நாள்தோறும் மாணவர்களை வரவழைத்து கோச்சிங் செண்டரைப் போல பாடம் நடத்திக் கொண்டு இருக்கிறார்.
அவரிடம் நேருக்கு நேராகவே சேலம் மாணவி ஒருவரின் தந்தை கேள்வி கேட்டார். அதற்கு கவர்னரால் பதிலளிக்க முடியவில்லை. 'நீட் விலக்கு மசோதாவுக்கு நான் கையெழுத்துப் போட மாட்டேன்' என்று கவர்னர் சொல்லி இருப்பதைப் பார்த்தால் அவரது அறியாமைதான் தெரிகிறது.
அவரது கையெழுத்துக்காக இந்த மசோதா காத்திருக்கவில்லை. அது ஜனாதிபதியிடம்தான் நிற்கிறது. இந்தச் சட்டத்தைப் பொறுத்தவரையில் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஏதோ அதிகாரம் இருப்பதைப் போல அவர் காற்றில் கம்பு சுற்றிக் கொண்டு இருக்கிறார்.
ஜெகதீஸ்வரன் போன்ற எத்தனை உயிர்கள் பலியானாலும் கவர்னர் ஆர்.என்.ரவி போன்றவர்களின் இதயம் கரையப் போவதில்லை. இப்படிப்பட்ட கல் மனசுக்காரர்களின் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை.
இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும்போது நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும். 'கையெழுத்து போடமாட்டேன்' என்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள்.
மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரது மறைவுக்கும் எனது ஆழமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களது மரணமே, நீட் பலிபீடத்தின் இறுதி மரணமாக இருக்கட்டும்.
அறிவுமிகு மாணவக் கண்மணிகளே, உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. தன்னம்பிக்கை கொள்ளுங்கள். வாழ்ந்து காட்டுங்கள். பிறரையும் வாழ வையுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- தமிழக அரசின் நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு உடனடியாக மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
- தேர்வில் ஏற்படும் தோல்விக்கு தற்கொலை தீர்வாகாது என மாணவர்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் நீட் தோல்வி தற்கொலைகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கல்வித்துறையில் மாநில உரிமைகளை பறித்துக் கொண்ட பாஜக அரசின் பிடிவாத போக்கால், தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக அரசின் நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு உடனடியாக மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள வைகோ, தேர்வில் ஏற்படும் தோல்விக்கு தற்கொலை தீர்வாகாது என மாணவர்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.
- சாய்சரண் விளையாடுவதற்காக தனது தாயின் செல்போனை கேட்டார்.
- நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாட கூடாது என கூறி செல்போனை தர தாய் மறுத்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஜெகத்யாளா மண்டலம், திப்பண்ணா பேட்டையை சேர்ந்தவர் நரேஷ். இவரது மனைவி ஜலா. மகன் சாய் சரண் (வயது 12). இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நரேஷ் துபாயில் வேலைக்கு சென்றார்.
சாய் சரண் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்தவுடன் தனது தாயின் செல்போனை எடுத்துக்கொண்டு நீண்ட நேரம் கேம் விளையாடி வந்தார்.
நேற்று சுதந்திர தின விழாவுக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சாய்சரண் விளையாடுவதற்காக தனது தாயின் செல்போனை கேட்டார்.
நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாட கூடாது என கூறி செல்போனை தர மறுத்தார்.
இதனால் விரக்தி அடைந்த சாய்சரண் வீட்டில் இருந்த தூணில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் தொங்குவதை கண்ட அவரது தாய் கதறி அழுதார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாய் சரண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.