search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தக திருவிழா"

    • 2 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் புத்தக திருவிழா நடைபெற உள்ளது
    • வரும் 19-ந் தேதி தொடங்குகிறது

    கரூர்:

    கரூரில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவை முன்னிட்டு கலெக்டர், த.பிரபுசங்கர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசுகையில்,

    கரூர் மாவட்ட வரலாற்றில் முதல்முறையாக அரசு நிதிகளைக் கொண்டு மிகப்பெரிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க புத்தகத் திருவிழா வரும் 19 -ந் தேதி தொடங்கி 29 -ந் தேதி வரை 11 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கரூர் திருமாநிலையூர் பகுதியில் கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் இந்த புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறக்கூடிய அளவிற்கு 100 அரங்குகள் மற்றும் கூட்டரங்குகள் அமைக்கப்படும். கூட்டரங்கில் 1,000 பேர் பங்கு பெறக்கூடிய அளவிற்கு அரங்குகள் அமைப்பதற்கு ஆட்சியர் தலைமையில் திட்டமிடப்பட்டுள்ளன.

    காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடக்க கூடிய அளவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. குறிப்பாக மாலை 4 மணி முதல் 6 மணி வரை கலை நிகழ்ச்சிகள். மாலை 6 மணி முதல் 8 மணி வரை சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, சுகிசிவம் உள்ளிட்ட பலர் பங்கு பெறக்கூடிய நிகழ்வுகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    புத்தகத் திருவிழாவில் 11 நாட்களில் 2 லட்சம் பேர் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரிகளில் சார்ந்து இருக்கின்ற மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவில் பங்கு கொள்வதற்கான ஏற்பாடுகள், பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளன.

    புத்தக திருவிழா சிறப்பாக அமைய கரூர் மாவட்ட பொதுமக்கள், பள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகள் வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் புத்தக பிரியர்கள் சிறந்த ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி , மாவட்ட வருவாய் அலுவலர்கள் எம்.லியாகத், கவிதா (நிலமெடுப்பு) கோட்டாட்சியர்கள் (கரூர்) ரூபினா, (குளித்தலை) புஷ்பாதேவி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், வாசகர் வட்ட நிர்வாகி சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவை சென்னையில் இருந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசுகிறார்.

    சூரம்பட்டி:

    மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் புத்தக திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று காரணமாக இந்த புத்தக திரு விழா உள்ள நடைபெறவில்லை.

    இந்த நிலையில் இந்த ஆண்டு புத்தக திருவிழா 18 வது ஆண்டாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை )முதல் வருகிற 16 -ந் தேதி வரை இந்த புத்தக திரு விழா நடக்கிறது .

    இதன் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விழாவுக்கு தலைமை தாங்குகிறார் .அமைச்சர் முத்துசாமி, தேசிய நல விழிப்புணர்வு இயக்க தலைவர் எஸ். கே .எம் மயிலானந்தன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள் . மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசுகிறார்.

    இந்த விழாவை சென்னை யில் இருந்து முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ .ஆகியோர் வாழ்த்து பேசுகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.

    • 22-ந் தேதி தொடங்குகிறது
    • 1 லட்சம் மாணவ- மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    கோவை:-

    கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் (கொடிசியா), கோவை மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து 6-வது ஆண்டாக கோவை புத்தகத் திருவிழா வருகிற 22- ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடக்கிறது.

    2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த புத்தக திருவிழா நடைபெறவில்லை. 10 நாள் நடைபெறும் விழாவில் 300 பதிப்பாளர்கள் மற்றும் 1 லட்சம் மாணவ- மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.இந்த விழாவின் ஒரு பகுதியாக வருகிற 28-ந் தேதி 5 ஆயிரம் மாணவர்கள் திருக்குறள் ஒப்பிக்க உள்ளனர்.

    புத்தக கண்காட்சிக்கு அனுமதி இலவசம். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மற்றும் புதுடெல்லி போன்ற பல்வேறு இடங்களில் இருந்து புகழ்பெற்ற பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். லட்சக் கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் இங்கு காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளும், கலைஞர்களும் கலந்து கொள்ளும் கலை, இலக்கிய நிகழ்வுகள் நாள்தோறும் கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது

    22-ந் தேதி மாலை 5.30 மணிக்கு கோவை புத்தகத் திருவிழாவை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தொடங்கி வைக்கிறார். நிறைவு விழாவில் உள்ளாட்சி துறை அமைச்சர், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விழாவில் தினமும் காலை 9 மணிக்கு புத்தக கண்காட்சி தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். காலை 11 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும்.
    • மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு புத்தகத் திருவிழா தொடங்குகிறது. வருகிற 25 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

    நாளை தொடங்கும் புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்குகிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புத்தகத் திருவிழா அரங்கை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

    கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா வரவேற்புரை ஆற்றுகிறார். அரசு தலைமை கொறடா கோவி. செழியன் சிறப்புரை ஆற்றுகிறார்.

    எம்.பி.க்கள் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், ராமலிங்கம் ,சண்முகம், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அன்பழகன், அண்ணாதுரை, அசோக்கு மார், ஜவாஹிருல்லா, மாநகராட்சி மேயர்கள் சண் ராமநாதன் (தஞ்சை), சரவணன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர்கள் அஞ்சுகம்பூபதி, தமிழழகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் நன்றி கூறுகிறார்.

    விழாவில் தினமும் காலை 9 மணிக்கு புத்தக கண்காட்சி தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். காலை 11 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும். மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    நாளை (15 ஆம் தேதி) மாலை 6:30 மணிக்கு நடைபெறும் முதல் நாள் நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்குகிறார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன் வரவேற்கிறார். தாமரை பன்னாட்டு பள்ளி தலைவர் வெங்கடேசன், பபாசி தலைவர் வயிரவன் ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர்.வீடு வரை உறவு என்ற தலைப்பில் பிரபல டி.வி புகழ் கோபிநாத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா நன்றி கூறுகிறார். இதே போல் 16ம் தேதி மாலை 6:30 மணிக்கு 2-ம் நாள் நிகழ்ச்சி தொடங்குகிறது. அன்றைய தினம் சாலமன் பாப்பையா குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.17-ம் தேதி மாலையில் சுகி.சிவம், சண்முகவடிவேல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றுகின்றனர்.

    18-ம் தேதி மாலை மதுக்கூர் ராமலிங்கம், அருள் பிரகாஷ் ஆகியோரின் கருத்து சிந்தனையரங்கம் நடைபெற உள்ளது. 19-ம் தேதி மாலையில் மணிகண்டன், செந்தூரன், 20-ந் தேதி மோகனசுந்தரம், சுந்தர ஆவுடையப்பன், 21-ந் தேதி பர்வீன் சுல்தானா, புலவர் ராமலிங்கம், 22-ந் தேதி பாரதி பாஸ்கர், ஜெயம் கொண்டான் , 23-ந் தேதி ஞானசம்பந்தம், தாமோதரன் ஆகியோரின் சிந்தனை அரங்கம் நடைபெறுகிறது.

    24-ந் தேதி மாலையில் திண்டுக்கல் ஐ. லியோனி குழுவினரின் சிறப்பு பட்டி மன்றம் நடைபெ றுகிறது. விழாவின் இறுதி நாளான 25ஆம் தேதி மாலை பேசும் புத்த கம் என்ற தலைப்பில் ஈரோடு மகேசின் சிந்தனைஅர ங்கம் நடைபெறு கிறது.

    • அரியலூரில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா களையிழந்து விட்டதால் அரங்குகள் அமைத்துள்ள உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்
    • கண்காட்சிக்கு வரும் நபர்களுக்கு நடமாடும் ஏடிஎம் மையம், சிறுதானிய உணவு அரங்கு உள்ளிட்டவைகளும் இடம் பெற்றுள்ளன

    அரியலூர்:

    கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய மாவட்டமான அரியலூர் மக்கள், திருச்சி, சென்னை, தஞ்சாவூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு சென்று தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

    இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழர் பண்பாட்டுப் பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் சார்பில் அரியலூரில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அப்போதைய உதவி கலெக்டர் சந்திரேசகர சாகமூரி முயற்சியால், கலெக்டர் சரவணவேல்ராஜ் ஒத்துழைப்போடு, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

    இதனால், இந்தக் கண்காட்சி அரியலூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றறது. அப்போது மட்டும் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகின.

    இதைத் தொடர்ந்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சி நடைபெறவில்லை.

    தற்போது கொரோனா தொற்று குறைறய தொடங்கியதையடுத்து, 6-ம் ஆண்டு புத்தகக் கண்காட்சி கடந்த 24-ந்தேதி அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறறது. ஆனால், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மக்கள் கூட்டம் மிக, மிக குறைவாக உள்ளது.

    இங்கு 83 அரங்குகளில், 50-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், கண்காட்சிக்கு வரும் நபர்களுக்கு நடமாடும் ஏடிஎம் மையம், சிறுதானிய உணவு அரங்கு உள்ளிட்டவைகளும் இடம் பெற்றுள்ளன.

    கண்காட்சியில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றறன. ஆனால், 5 நாள்களில் இதுவரை புத்தகக் கண்காட்சியைக் காண வந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கூட தாண்டவில்லை என புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து புத்தக விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், புத்தகக் கண்காட்சியில், நிகழாண்டு மக்களின் கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது. முதல் நாளில் புத்தகத்தின் விலை என்னவோ, அந்த விலைக்கே புத்தகம் விற்கப்பட்டது.

    கடந்த 5 நாள்களாக புத்தகம் வாங்குவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், தற்போது ஒரு புத்தகம் 50 சதவீதம் தள்ளுபடியில் பாதி விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரங்கிற்கான நாள் வாடகை, தங்கும் ஊழியர்களுக்கான செலவுக்கு கூட புத்தகங்கள் விற்பனையாகாமல் உள்ளது என்றார்.

    எனவே, எஞ்சியுள்ள நாட்களில் புத்தகம் வாங்குவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய, புத்தகக் காட்சி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு, விளம்பரம் செய்வது அவசியம் என புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இன்று 2-வது நாளாக புத்தகத்திருவிழா நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெறும் புத்தகத்திருவிழா தொடங்கியது. இதை பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி தொடங்கி வைத்தார். பள்ளி அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ், பொருளாளர் ஸ்ருதி, பள்ளி முதல்வர் மணிமலர் மற்றும் மாணவர்கள் ஆகியோர் புத்தகத் திருவிழாவை பார்வையிட்டனர். இதில் கோவை ராமகிருஷ்ணா மிஷின் வித்யாலயா பதிப்பகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தின் படைப்புகளும் மற்றும் கவிநிலா பதிப்பகத்தில் பள்ளி மாணவி மேகா பிரியதர்ஷினியின் சிறுகதை படைப்புகளும் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகத் திருவிழாவை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பார்வையிட வசதியாக இன்று 2-வது நாளாக புத்தகத்திருவிழா நடைபெறுகிறது.

    • வரும் 24-ந் தேதி 6-ம் ஆண்டு புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
    • அமைச்சர்கள் பங்கேற்பு

    அரியலூர் :

    அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அரியலூர் மாவட்ட தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர், இணைந்து அரியலூர் மாவட்ட நிர்வாகத்தினர் உறுதுணையுடன் ஆறாம் ஆண்டு புத்தகத் திருவிழா 24 ஆம் தேதி தூங்குகிறது அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.

    தமிழ் பண்பாட்டு பேரமைப்பு செயலாளர் நல்லப்பன் வரவேற்று பேசுகிறார், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்,

    மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, மாவட்ட போலீஸ் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, அரியலூர் எம்எல்ஏ வக்கீல் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சாெ.க.கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இராமன், அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் அரங்க. பாரி, நகராட்சி தலைவர் சாந்தி, தமிழ் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் பாலகிருஷ்ணன்,

    செயலாளர் ராமசாமி, பொருளாளர் புகழேந்தி, புலவர் இளங்கோவன், செல்லபாண்டியன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் வைரவன், துணைத்தலைவர் மயில்வேலன், எம் ஆர் சி கல்வி நிறுவன தாளாளர் ரகுநாதன், ஆர்.டி.சி குழும தலைவர் அக்பர் ஷெரிப் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர், புத்தகத் திருவிழாவின் சிறப்பு ஏற்பாடுகளை தமிழ் பண்பாட்டு பேரமைப்பினர் செய்து வருகின்றனர்.

    ×