search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்கேற்பு"

    • புதிய கட்டிட திறப்பு விழா தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • விழாவில் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்ப கராஜ், மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அங்குராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் உள்ள ரிதம் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான சிறப்பு பள்ளிக்கு ஜப்பான் நாட்டு தூதர் டாகா மயசுகி நிதி பங்களிப்புடன் கட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக தனுஷ்குமார் எம்.பி., ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்வில் பேசிய தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாற்று த்திறன் உள்ளது. அதனைக் கண்டறிவது, வாழ்வில் முன்னேற்றமடைய செய்வது ஆசிரியர்களின் கடமை ஆகும. அதுபோல் இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளிக்கும், மாணவர்களின் வளர்ச்சிக்கும் தி.மு.க.வும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்களும் உறுதுணையாக இருப்பதாக கூறினார்.

    விழாவில் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்ப கராஜ், மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அங்குராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
    • ஒருவர் ஒரு பிரிவு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (திருப்பூர் விளையாட்டுத்துறை) சார்பில் நடைபெற உள்ள மாவட்ட கேரம் போட்டியில் ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடப்பாண்டுக்கான கேரம் போட்டி வரும், 29-ந் தேதி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. மாவட்டத்தைச்சேர்ந்த 5-ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். முதல்பரிசு ஆயிரம் ரூபாய், 2வது மற்றும் 3வது பரிசு முறையே 500 மற்றும், 250 ரூபாய்.ஒற்றையர், இரட்டையர் என பிரிவுகளாக போட்டி நடக்கும். ஒருவர் ஒரு பிரிவு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்.மாணவர்கள் தங்களின் முழுவிபரங்களை sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.போட்டியாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கு எண், பாஸ்புக், பள்ளியில் பயில்வதற்கான படிப்பு சான்றிதழ் தலைமை ஆசிரியர்களிடம் பெற்று போட்டிக்கு வரவேண்டும். போட்டி நடக்கும் நாளன்று காலை, 8:30 மணிக்கு அரங்கில் இருத்தல் வேண்டும். தகவல்களுக்கு 7401703515 என்ற எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    • சங்கரநாராயண சுவாமி கோவில் முன்பு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் முன்பு பதஞ்சலி யோகா அறக்கட்டளை சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு யோகா மாஸ்டர் ஜெயராம் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் மற்றும் பதஞ்சலி யோகா மையத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு யோகாசனம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இதில் மாணிக்கம், சுந்தரராஜ், சுப்புரமணியன், கருப்பசாமி, ராமு, வெங்கட்ராமன், பெப்சி முருகன், ராகவன் மற்றும் உறுப்பினர்கள், பி.ஜே.பி. மாவட்ட பொது செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×