search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களக்காடு"

    • கோமதி கழுத்தில் கிடந்த செயினை கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    களக்காடு அருகே உள்ள டோனாவூர் செட்டிமேடு வடக்கு தெருவை சேர்ந்தவர் தளவாய். இவரது மனைவி கோமதி(வயது 70).

    இவர் சம்பவத்தன்று செட்டிமேட்டில் இருந்து களக்காட்டுக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பஸ் களக்காடு பஸ் நிலையத்திற்கு சென்றடைந்ததும் அவர் கீழே இறங்கி பார்த்தார்.

    அப்போது அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் யாரோ கோமதி கழுத்தில் கிடந்த செயினை பறித்து சென்றதை அறிந்த அவர் களக்காடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார்.
    • மணிகண்டன் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு கக்கன்நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது23). தற்போது இவர் களக்காடு நடுத்தெருவில் வசித்து வருகிறார். பெயிண்டர். இவர் சம்பவத்தன்று இரவில் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார்.

    மறுநாள் வந்து பார்த்த போது அதனை காணவில்லை. நள்ளிரவில் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டதை அறிந்த மணிகண்டன் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமச்சந்திரன், வினுபிரியாவின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று, வினுபிரியாவுடன் தகராறில் ஈடுபட்டார்.
    • காயம் அடைந்த வினுபிரியா களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள வி.கே.நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் வினுபிரியா (வயது25). இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வருவதால் வினுபிரியா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி அசோகா. சம்பவத்தன்று அசோகா, வினுபிரியா குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் கலைந்து சென்றனர்.

    அதன் பின் அசோகாவின் கணவர் ராமச்சந்திரன், வினுபிரியாவின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று, வினுபிரியாவுடன் தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் அரிவாளால் வினுபிரியாவை வெட்டினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதில் காயம் அடைந்த வினுபிரியா களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் ராமச்சந்திரன், அவரது மனைவி அசோகா மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

    • வெள்ளி மற்றும் பித்தளை பொருட்களையும் மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி வடக்கு மாடத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன்(வயது 66). இவர் கடந்த 13-ந்தேதி தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தார்.

    இந்நிலையில் நேற்று திரும்பி வந்த அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அங்கிருந்த தங்கநகை திருட்டு போயிருந்தது. மேலும் வெள்ளி மற்றும் பித்தளை பொருட்களையும் மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

    இதுதொடர்பாக அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×