search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருமை"

    • 2 மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றுவது தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் பெருமை என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
    • கம்பன் கழக நிறைவு விழாவில் பேசினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் 47-ம் ஆண்டு கம்பன் பெருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நேற்று வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று நிறைவு நாள் மற்றும் பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக இசைவாணி மைதிலியின் வீணை இசை அரங்கேறியது.

    கம்பன் கழக தலைவரும், தொழிலதிபருமான முத்துப்பட்டிணம் ச.ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கம்பன் கழகம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும், வெளிநாட்டில் 50 நாடுகளில் செயல்படுகிறது. இருப்பினும் புதுக்கோட்டை கம்பன் கழகம்தான் 10 நாட்கள் விழாவை நடத்துவது சிறப்பாகும். இரு மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றும் தமிழிசை சௌந்தரராஜனை புகுந்த வீட்டில் இருந்தாலும் பிறந்த வீட்டிற்கு அழைத்தன்பேரில் கலந்து கொண்டவரை வரவேற்கிறேன்.

    தமிழ், தமிழ் இலக்கியங்கள், அறம் கலந்த விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவே நான் தலைவர் பதவி ஏற்றுள்ளேன். இந்தமுறை வேகமாக பணிகள் மேற்க்கொண்டதால் சிலரை 10 நாட்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலை. அடுத்த வருடம் இக்குறை போக்கப்பட்டு அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றார். மேலும் நான் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டதால்தான் சிறப்பாக அமைந்தது என சிலர் சொன்னாலும் அதில் சிறு அளவு உண்மை இருந்தாலும் கம்பன் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் உழைப்பு உள்ளது என்றார்.

    நிறைவு நாள் விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:-

    கம்பன் விழா ராமனுக்கான விழா. அதை தலைவர் ராமச்சந்திரன் நடத்துவது சிறப்பு. 10 மாதம் சுமந்தால்தான் நல்ல குழந்தையை பெற்றெடுக்கமுடியும். அதனால்தான் கம்பன் விழா புதுக்கோட்டையில் 10 நாட்கள் நடக்கின்றன. நான் மிகவும் சிரமப்பட்டே இவ்விழாவிற்கு வந்துள்ளேன். புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்க வந்துள்ளேன். நான்கு நிகழ்ச்சிகள் ஒத்துக் கொண்டதில் மூன்று நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளேன்.

    இதை தவிர்க்க முடியாமல் கலந்துக் கொண்டுள்ளேன். எனக்கு இரண்டு மாநிலங்களில் ஆளுராக பணியாற்ற பிரதமர் வாய்ப்பு கொடுத்துள்ளார். இது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை. தமிழர் என்பதால் கூடுதல் பணி கிடைத்துள்ளது. தமிழ் ஒலிக்கும் இடத்தில் தமிழிசை இருப்பாள். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்ற மொழிக்குகேற்ப எனது தந்தை பேச்சை கேட்டு இங்கு பேசுகிறேன் என்றார்.

    கம்பன் இன்னொரு மொழியை கற்றுக்கொண்டு தமிழில் பாடல்களை கொடுத்தார். இதை வலியுறுத்திதான் புதிய கல்வி கொள்கையில் தேசிய கல்வி முறையில் இன்னொரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன். இதில் தாய்மொழி தமிழ் முதல் மொழியாக இருக்கவேண்டும் என கூறியதை சிலர் திருத்தி கூறி வருகின்றனர். தமிழை வளர்க்கும் கம்பன் கழகத்தை பாராட்டுகிறேன். இளைஞர்கள் அதிகளவில் கம்ப ராமாயணம் படிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    விழாவில் தென்னக ெரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் புரட்சிகவிதாசன், சுப்பிரமணியன், முன்னிலை வகித்தனர். காடுவெட்டி குமார் நன்றி கூறினார். அதனை தொடர்ந்து பட்டிமன்றம் நடைபெற்றது. ரேவதி செல்லத்துரை வரவேற்றார். ஸ்ரீ புவனேஸ்வரி தங்கமாளிகை நடராஜன் முன்னிலை வகித்தார். கம்பனை கவிச்சக்கரவர்த்தியாக்கியது நேர்மறைப் பாத்திரங்களா? எதிர்மறை பாத்திரங்களா? என்ற தலைப்பில் நடைபெற்றது. திருச்சி மாது நடுவராக இருக்க ரவிக்குமார், பத்மா மோகன் ஆகியோர் நேர்மறை பாத்திரங்கள் என்றும், எதிர்மறை பாத்திரங்கள் என்ற தலைப்பில் எழிலரசி, சரவணன் ஆகியோரும் பேசினர்.

    • செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டில் ஏ பிளஸ் தரச்சான்று அளித்துள்ளது.
    • அந்த வரிசையில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியும் அந்த பெருமையை பெற்றுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரிக்கு ஏ பிளஸ் தரச்சான்று தேசிய தர மதிப்பீட்டு நிறுவனம் அளித்துள்ளது.

    சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிர்லாஸ்பூரில் அமைந்துள்ள குரு காசி தாஸ் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். அலோக் சக்கரவால் தலை மையில் வந்த குழுவினர் கல்லூரியின் உள்கட்ட மைப்பு வசதிகள், பேராசிரி யர்களின் தரம், மாணவ ர்களுக்கு வேலை வாய்ப்பு வசதிகள் மற்றும் தேர்ச்சி விகிதம் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் மதிப்பெண் 4-க்கு 3.32 அளித்து ஏ பிளஸ் தரச்சான்றிதழ் வழங்கப்ப ட்டுள்ளது.

    இது குறித்து கல்லூரியின் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா கூறியதாவது:-

    எங்கள் கல்லூரி 25-ம் ஆண்டில் எடுத்து வைக்கும் இந்த தருணத்தில் ஏ பிளஸ் தரச்சான்று கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பின் தங்கிய மாவட்டமென அழைக்கப்படும் ராமநாத புரம் மாவட்டத்தில் பெரு நகரங்களுக்கு இணையான வசதிகளை நம் பகுதியிலும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்து உள்ளது,

    ராமநாதபுரம் மாவ ட்டத்தில் முதல் பொறியியல் கல்லூரியாகவும், தமிழ கத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 17 கல்லூரிகள் தான் இந்த ஏ பிளஸ் சான்றிதழை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியும் அந்த பெருமை யை பெற்றுள்ளது. கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், அலுவலக ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மவுண்ட்பர்க் மேல்நிலைப்பள்ளியில் 616 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்.
    • மாவட்ட அளவில் கணிதப் பாடத்தில் 12 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றனர்.

    கள்ளக்குறிச்சி :

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மவுண்ட்பர்க் மேல்நிலைப்பள்ளியில் 616 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர். இதில் 613 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.51 ஆகும். தேர்வில் மாணவி ஜான்சிராணி 589 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் பாடம் வாரியாக, தமிழ் 98, ஆங்கிலம் 94, இயற்பியல் 99, உயிரியல் 98 வேதியியல் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவர் ராம்குமார் 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    இவர் பெற்ற மதிப்பெண்கள் பாடம் வாரியாக, தமிழ் 98, ஆங்கிலம் 94, இயற்பியல் மற்றும் வேதியியல் 98, உயிரியல் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவர் சாய் கணேஷ் 587 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் பாடம் வாரியாக, தமிழ் மற்றும் ஆங்கிலம் 95, இயற்பியல் மற்றும் கணக்கு 100, வேதியியல் 98, உயிரியல் 99 ஆகிய மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மதன்மோகன் 587 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் பாடம் வாரியாக, தமிழ் 98, ஆங்கிலம் 95, இயற்பியல் 99, வேதியியல் 100, உயிரியல் 98, கணக்கு 97 ஆகிய மதிப்பெண்கள் பெற்று மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மாவட்ட அளவில் கணிதப் பாடத்தில் 12 பேரும், வேதியியல் பாடத்தில் 17 பேரும், இயற்பியல் பாடத்தில் 4 பேரும், உயிரியலில் 2 பேரும், கணினி அறிவியலில் 8 பேரும், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் ஒருவரும், கணக்குப்பதிவியலில் 2 பேரும் ஆக மொத்தம் 46 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.

    மேலும் 580 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 570 மதிப்பெண்களுக்கு மேல் 32 பேரும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 55 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 88 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 246 பேரும் மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு மாணவ, மாணவிகள் சிறந்த மதிப்பெண்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் இரா.மணிமாறன், முதல்வர் கலைச்செல்வி ஆகியோர் பாராட்டினர்.

    ×