search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் விபத்து"

    • மற்றொருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    அசாம் மாநிலத்தை சேர்ந்த வர் சஞ்சய் (வயது 30). இவர் கல்குவாரியில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானார்.

    இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குள்ளான மற்றொரு பைக்கில் வந்த சோலூர் பகுதியை சேர்ந்த காவலாளி சுரேஷ் படுகாயம் அடைந்தார். அவரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீ சார் சஞ்சய் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து மூதாட்டி தவறி விழுந்து பலியானார்.
    • நாய் துரத்தியதால் இந்த விபரீதம் ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி முத்துசுப்பையாபுரத்தை சேர்ந்தவர் சித்திரைகனி.இவரது மனைவி பூசணம் (வயது 60). இவர் சம்பவத்தன்று தனது மகன் முருகனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

    செட்டியார்பட்டி ஆசிரியர் காலனி அருகே சென்றபோது திடீரென ஒரு நாய் பின்னால் அமர்ந்திருந்த பூசணத்தை பார்த்து குரைத்தபடி துரத்தி வந்தது. இதனால் பீதியடைந்த அவர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்தார். தலையில் படுகாயமடைந்த பூசணத்தை சேத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு நிலைமை மோசமானதால் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூசணம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • நாய் குறுக்கே வந்ததால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 55), இவர் மாட்டு தரகு வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் செய்யாருக்கு பைக்கில் வந்தார். தாண்டுக்குளம் கிராமம், அட்டை கம்பெனி அருகில் வந்து கொண்டிருந்த போது திடீரென நாய்குறுக்கே பாய்ந்தது.

    நாய் மீது ஏற்றாமல் இருக்க பிரேக் போட்டு நிலை தடுமாறி கீழே விழுந்ததில், ஆனந்தனுக்கு தலை மற்றும் உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக செய்யாறு அரசு பொது மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.

    இது சம்பந்தமாக செய்யாறு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருமங்கலம் அருகே வாலிபருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற மாணவி விபத்தில் பலியானார்.
    • அவர்கள் ராஜபாளையம் ரோட்டில் ஆலம்பட்டி பாலம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நாய் வந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் சாத்தங்குடியை சேர்ந்தவர் பூமிராஜா. இவரது மகள் மகாலட்சுமி (வயது 16). இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இவரும் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் தென்னரசு (20) என்பவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் டி.கல்லுப்பட்டி சென்று விட்டு மீண்டும் திருமங்கலம் நோக்கி வந்தனர்.

    அவர்கள் ராஜபாளையம் ரோட்டில் ஆலம்பட்டி பாலம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் மாணவி மகாலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மாணவி பரிதாபமாக இறந்தார். காயமடைந்த தென்னரசு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவீடு திரும்பினார்.

    இந்த விபத்து குறித்து மாணவியின் தந்தை பூமிராஜா திருமங்கலம் தாலுகா போலீசில் புகார்செய்தார். அதில், தனது மகளை தென்னரசு கடத்தி சென்றபோது அவர் விபத்தில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து தென்னரசை கைது செய்தனர்.

    • திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கத்தை அடுத்த சூரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 36), கட்டி மேஸ்திரி. இவரது மனைவி உமா (26). இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் சென்றுள்ளார். மனைவியை அழைத்து வர நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து சங்கர் பைக்கில் காவேரிப்பாக்கம் நோக்கி வந்தார்.

    கட்டளை அருகே வரும் போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது இரவு நேரம் என்பதால் இந்த விபத்து குறித்து யாருக்கும் தெரிய வில்லை. பின்னர் சங்கர் மனைவி நள்ளிரவு உறவினருடன் பைக்கில் செய்யாறு பகுதியில் இருந்து காவேரிப்பாக்கம் நோக்கி வந்துள்ளார். அப்போது கட்டளை அருகே சாலையில் தனது கணவர் விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மயக்க நிலையில் இருந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து உமா நேற்று காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த அமுடூர் கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம். இவரது மகன் சதாசி வம் (வயது 30), கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று மோட்டார்சைக்கிளில் அமுடூர் கிராமத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    பூதேரி கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிளும் இவரது மோட்டார்சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சதாசிவம் சம்பவ இடத்திலேயே புரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த கோவிந்தராஜ், சிவக்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக் காக வந்தவாசி அரசு ருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேருக்கு நேர் மோதியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி சின்னசாமி தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 50) லாரி டிரைவர். இவர் நேற்று இரவு தனது பைக்கில் கிருஷ்ணகிரியில் இருந்து நாட்டறம்பள்ளி பங்களா மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நாட்டறம்பள்ளி மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் வசீகரன் (வயது20) என்பவர் ஓட்டி வந்த பைக்கும், கோவிந்தசாமி ஓட்டி வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அங்கிருந்து பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் மேல் சிகிச்சைக்காக கோவிந்த சாமியை கிருஷ்ணகிரி அரசு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் கோவிந்தசாமி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கோவிந்த சாமி மகன் பாபு இன்று காலை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் நாட்டம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைக் மீது அடையாளம் வாகனம் மோதி விபத்து
    • ஆஸ்பத்திரிக்கு சென்ற போது பரிதாபம்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு வேலுரான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சிநேயன் (வயது 48). இவரது மகள் சந்திரலேகா (27) என்பவரது 3 மாத குழந்தைக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. ஆஞ்சிநேயன் சந்திரலேகா மற்றும் 3 மாத கை குழந்தையை ஆஸ்பத்திரிக்கு பைக்கில் அழைத்து சென்றார்.

    வேலூர் கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருக்கும் போது சுண்ணாம்புகுட்டை அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

    இதில் ஆஞ்சிநேயன், சந்திரலேகா படுகாயம் அடைந்தனர். சந்திரலேகா தனது கையால் குழந்தையை கீழே விழாமல் எந்த வித காயமின்றி காப்பாற்றினார்.

    இதில் படுகாயம் அடைந்த ஆஞ்சிநேயன் சந்திரலேகாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக சந்திரலேகாவை தருமபுரி அரசு மருத்துவக்மனையில் அனுமதித்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சந்திரலேகா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சந்திரலேகா வின் தாயார் ஜெயந்தி நாட்டற ம்பள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • பழுதாகி நின்ற டிராக்டரில் மோதியது
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாந்தோனி மற்றும் பாலமுருகன் இவர்கள் இருவரும் கட்டிட வேலையில் சென்டிரிங் அமைக்கும் பணி செய்து வருகின்றனர்.

    இருவரும் செங்காடு கிராமத்தில் சென்ட்ரிங் வேலைக்கு நேற்று காலை சென்றனர். பின்னர் பணி முடித்து விட்டு மாலையில் கீழ்குவளைவேடு அருகே பைக்கில் வந்த கொண்டிரு ந்தனர். அப்போது சாலை ஓரத்தில் பழு தாகி டிராக்டர் ஒன்று நின்று கொண்டிருந்து. டிராக்டர் ஒன்றே நின்று கொண்டி ருந்ததை அறியாமல் டிராக்டரின் பின்னால் திடீரென எதிர்பாராத விதமாக மோதி உள்ளனர்.

    இதனால் தலையில் பலத்த காயமடைந்த ரத்த வெள்ளத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து வந்தவாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வந்தவாசி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது‌.

    • சாலையின் குறுக்கே ஓடி வந்த மனநோயாளியால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் (வயது 52) நேற்று இரவு 9 மணிக்கு பணியை முடித்து விட்டு கத்தனேரிக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட 45 வயது ஆண் ஒருவர் ரோட்டில் குறுக்காக ஓடி வந்தார்.

    அவர் மீது தங்கவேல் ஓட்டி வந்த பைக் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். தங்கவேல் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மனநிலை பாதிக்கப்பட்டவர் யார், எந்த ஊர், பெயர் தெரியவில்லை.

    இவர் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் மோட்டார் சைக்கிள்- பஸ் மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்தனர்.
    • இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பஸ்சின் முன்பகுதி சேதமானது.

    மதுரை

    மதுரை எல்லீஸ் நகரில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 24) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .அவர் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

    அவர் மோட்டார் சைக்கிளில் பெரியார் பஸ் நிலையம் வழியாக எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் நேருக்கு நேர் மோதியது.இதில் படுகாயம் அடைந்த வேல்முருகனை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பஸ்சின் முன்பகுதி சேதமானது.

    • விவசாயி பலி
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த அப்துல் லாபுரம் பஜனை கோவில் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி ( வயது 50 ) விவசாயி . இவர் கால்நடைகள் வளர்த்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று மாலை ஜம்புகுளம் கூட்டு ரோட்டில் இருந்து கால்நடைகளுக்கு தீவனங்களை வாங்கிக் கொண்டு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கேசவணங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வளைவில் சென்றபோது எதிரே வேகமாக வந்த மோட்டார்சைக்கிள், முனுசாமி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . இது குறித்த தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×