search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி சாவு"

    • மதுவில் விஷம் கலந்து குடித்த விவசாயி உயிரிழந்தார்.
    • தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்தவர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(வயது 53). விவசாயியான இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தற்று வயிற்று வலி அதிகமாகவே மதுப்பழக்கம் உடைய இவர் மதுவில் பூச்சி மருந்தை (விஷம்) கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படு காயம் அடைந்த ஆதிசங்கர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே மேமாளூர் கிராமத்தை சேர்ந்தவர் சி உத்திரியநாதன்(வயது40). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் எலவனாசூர்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். பல்லவாடி பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே செங்கணாங்கொல்லை கிராமத்தை சேர்ந்த ஆதிசங்கர்(34) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த உத்திரியநாதனை அக்கம்பக்கத்தினர் சிகிச்சை க்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    படு காயம் அடைந்த ஆதிசங்கர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மேல்மலையனூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் விவசாயி பலியானார்.
    • ஏரிக்கரையில் வரும்போது கூட்டமாக வந்த தேனீக்கள் அவரை கொட்டிவிட்டன.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(66) விவசாயி. நேற்று முன்தினம் (5-ந்தேதி) முருகேசன் மாடுகளை மேய்த்துவிட்டு வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். ஏரிக்கரையில் வரும்போது கூட்டமாக வந்த தேனீக்கள் அவரை கொட்டிவிட்டன. இதனால் அலறித்துடித்த முருகேசனை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் முருகேசன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்தார்.
    • இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கோவிந்தன் உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது58). விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்தார். இதனால் அவர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கோவிந்தன்  பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவியிடம் குளிக்கச் சென்று வருவதாக கூறிச்சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

     காங்கேயம் :

    காங்கேயம் நாட்டான்வலசு அருகே உள்ளது என். காஞ்சிபுரம். இந்த ஊரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது35) , விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று மாலை மனைவியிடம் குளிக்கச் சென்று வருவதாக கூறிச்சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடிச்சென்ற போது நாட்டான்வலசு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 12 அடி தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்தார். இது குறித்து ஊதியூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விவசாயி பிரகாஷ் குளிக்க வரும் போது குடிபோதையில் இருந்துள்ளார்.

    தண்ணீர் தொட்டி நிறைய தண்ணீர் நிரம்பி இருந்தது. அதில் குளிக்கும்போது மூச்சு திணறி உயிர் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் இறந்தார்.
    • இவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த படுகாயம் அடைந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே மண்டக மேடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் விவசாயி. இவர் கடந்த 23-ந் தேதி கடலூர், சித்தூர் சாலையில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு  பலத்த படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவரை மீட்டு முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகுமார் இன்று காலை இறந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி கூறினார்.
    • தகவல் அறிந்து அவரது உறவினர்கள் வீட்டு முன்பு திரண்டனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள பெடாரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் என்கிற மகாலிங்கம் (வயது 37). இவர் தனது வீட்டில் பிணமாக கிடந்தார். காது துண்டாகி இருந்தது. உடல் முழுவதும் காயங்கள் இருந்தன.

    மகாலிங்கம் இறந்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள் வீட்டு முன்பு திரண்டனர். அவர்களிடம் மகாலிங்கம் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி கவிதா கூறினார்.

    ஆனால் உறவினர்கள் இதை ஏற்கவில்லை. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்கனவே குடும்ப தகராறு இருந்து வருவதாகவும், எனவே மகாலிங்கத்தின் சாவில் மர்மம் உள்ளது என்றும் தொப்பூர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் அடுத்த கடப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி. மகன் முனுசாமி (வயது 45). விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த சில வருடங்களாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையையும் எடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நோயின் தீவிர தாக்கத்தால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.அவரை வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம் பாறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.

    • சேற்றில் தலை சிக்கிய பரிதாபம்.
    • போலீசார் விசாைணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியை ேசர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 58), விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் தக்கோலத்தை அடுத்தவட்டுமுடையார் குப்பம் பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் புஷ்பராஜ் நிலத்திற்கு சென்று விட்டு நள்ளிரவு மோட்டர் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    தக்கோலம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நீரேற்று நிலையம் பகுதியில் வந்த போது புஷ்பராஜ் நிலைதடுமாறி அங்குள்ள விவசாய நிலத்தில் விழுந்தார்.

    அப்போது புஷ்பராஜின் தலை சேற்றில் சிக்கி மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் புஷ்பராஜை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.

    இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப் ப செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×