search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஞ்சேரிப்புத்தூர்"

    • 2022-23ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் மன்ற தேர்தல் பள்ளியில் நடத்தப்பட்டது.
    • மாணவர்கள் அனைவரும் வரிசையில் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.

    திருப்பூர் :

    பல்லடம் அருகேயுள்ள செஞ்சேரிப்புத்தூர் அரசு துவக்க பள்ளியில்60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்படிக்கின்றனர். இப்பள்ளியில், ஆண்டுதோறும் ஓட்டுப்பதிவு முறைப்படி மாணவர் மன்ற தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து தலைமை ஆசிரியர் கணேசன் கூறுகையில், மாணவர்களுக்கு கல்வியறிவுடன் பொது அறிவும் அவசியம். விளையாட்டு போட்டிகள் மட்டுமன்றி, தூய்மை பணி, மரம் நடுதல், வீட்டு நூலகம், நீர் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்தி வருகிறோம்.ஆண்டுதோறும் மாணவர் மன்றம் பள்ளியில் செயல்படுத்தப்படுகிறது. இதன் நிர்வாகிகள் ஓட்டெடுப்பு முறையில்தேர்வு செய்யப்படுகின்றனர்.

    இதன்படி 2022-23ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் மன்ற தேர்தல் பள்ளியில் நடத்தப்பட்டது. 5-ம் வகுப்பு மாணவன் சபரீஸ் 33 ஓட்டுகள் பெற்று முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.இதேபோல், துணை முதல்வராக ராஜேஷ், கல்வித்துறை அமைச்சராக தீக்‌ஷிதா, பல்வேறு துறை அமைச்சர்களாக தமிழ்செல்வி, கிரிதரன், சித்தேஷ், பிரவீன், அஜய், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட துறைகளுக்கு உண்டான பணிகளை மேற்கொள்வர். அமைச்சரவை போன்று ஏற்படுத்தப்படும் இந்த கட்டமைப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன் அவர்களின் அரசியல் அறிவும் வளரும் என்றார்.முன்னதாக மாணவர் மன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட ஓட்டு பெட்டியில், மாணவர்கள் அனைவரும் வரிசையில் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.தொடர்ந்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பதவிப்பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது.

    ×