search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 பேர்"

    • சேலத்தில் வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலியனார்.
    • இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அயோத்தியா பட்டணம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி இவரது மகன் சேகர் (வயது 38). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் வீராணம் அருகே உள்ள சின்னனூர் மதுரைவீரன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வீராணம் பள்ளி ப்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சசிகுமார் (வயது 34) மோட்டார்சைக்கிள் மோதியது.இதில் தலையில் பலத்த காயமடைந்த சேகரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.சசிகுமாருக்கு காலில் முறிவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் செட்டி காடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (32). இவர் பெரிய புதூர் ஏரியில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் பள்ளப்பட்டி சாமிநாதபுரம் மருதநாயகம் தெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் இவரது மகன் வினோத் குமார் ( 32). இவருக்கு திருமணமாகி உமாமகேஸ்வரி வயது 27 என்ற மனைவி உள்ளார்.வினோத்குமார் மது அதிகமாக குடித்து வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் இருந்த வினோத்குமார் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார்,உடனடியாக இவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விஜயகுமாருக்கு வருமானம் குறைவாக இருந்ததால் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளார்.
    • இதுகுறித்து வீரப்ப–ன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அடுத்த பெரியசேமூர், ஈ.பி.பி.நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(37). இவரது மனைவி உமாதேவி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    விஜயகுமார் மருத்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். விஜயகுமார் தனது மனைவி மகன்கள் மற்றும் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். விஜயகுமாருக்கு வருமானம் குறைவாக இருந்ததால் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளார். இது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் மனைவி, மகன்கள் வீட்டுக்கு வந்த போது விஜயகுமார் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்ப–ன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவானி அடுத்த குருப்ப நாயக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன்(27). ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் பார்சல் பண்ணும் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை.

    இதனால் கடந்த சில நாட்களாக சரவணன் மனவருத்தத்தில் இருந்து உள்ளார். இதனால் சம்பவத்தன்று சரவணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி வர்ணபுரம், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன்(21). தமிழரசன் 10-ம் வகுப்பு படித்துவிட்டு டைப்ரைட்டிங் கிளாசுக்கு போயிட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் மேல் படிப்பு படிக்க விருப்பப்பட்டு தமிழ்செ ல்வன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் தங்களிடம் மேல் படிப்பு படிக்க வைக்க வசதி இல்லை என்று அவரது பெற்றோர் கூறிவிட்டனர்.

    இதனால் தமிழரசன் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று தமிழரசன் எலி மருந்து (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் தமிழரசன் அனுமதிக்க ப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி தமிழரசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், கணபதிநகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (31). இவருக்கும் புளியம்பட்டி அருகே உள்ள குரும்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த அம்சவேணி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    லோகநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கோபித்து கொண்டு அம்சவேணி தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனால் லோகநாதன் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து உள்ளார். தன்னை மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு கூறி வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த லோகநாதன் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்து விட்டார்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரட்டடிபாளையத்தில் உள்ள மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ் பாக்கெட்டுகள், பான்மசாலா பாக்கெட்டுகள் என மொத்தம் 107 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • சூரம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ் போன்றவற்றை விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கோபி கரட்டடிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை-ஹான்ஸ் பொருட்கள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் கரட்டடிபாளையத்தில் உள்ள மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ் பாக்கெட்டுகள், பான்மசாலா பாக்கெட்டுகள் என மொத்தம் 107 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த குமார்(32) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சூரம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 159 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • முன்விரோதம் காரணமாக நடைபெற்றது

    கரூர்:

    குளித்தலை அருகே உள்ள குப்புரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 39). அதே பகுதியை சேர்ந்த சரவணகுமார் என்பவர் மது விற்ற வழக்கில் சிறையில் இருந்துள்ளார். அவருக்கு கிருஷ்ணனின் அண்ணன் வேல்முருகன் ஜாமீன் கொடுத்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக குப்புரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த

    மோகன், தேவேந்திரன், பிரகாஷ், விஜயகாந்த் உள்ளிட்டோர் கிருஷ்ணனை தகாதவார்த்தைகளால் திட்டி கத்தியால் கிருஷ்ணனின் கண் புருவத்தின் மேல் குத்தியுள்ளனர்‌. பின்னர் வேல்முருகன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரது மனைவி கீதா மற்றும் அவரது மகன் பிரகாஷ் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் மோகன், தேவேந்திரன், பிரகாஷ், விஜயகாந்த் ஆகியோர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்."

    ×