search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைத்திலிங்கம்"

    • ஓ.பன்னீர்செல்வம் எதிர்பார்த்தது போல் பணத்தை தண்ணீர்போல் செலவு செய்து மாநாட்டையும் சிறப்பாக நடத்தி முடித்தார் வைத்திலிங்கம்.
    • டி.டி.வி.தினகரனுக்கு கட்டுப்பட்டு தான் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவார் என்ற எண்ணமும் வைத்திலிங்கத்திடம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம் அணியில் பலம்மிக்க தலைவராக இருப்பவர் வைத்திலிங்கம். தனி அணியாக ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து செயல்பட்டபோது அந்த அணியை அ.தி.மு.க.வுடன் இணைப்பதற்கு பாலமாக இருந்தவர்களில் வைத்திலிங்கமும் ஒருவர்.

    மீண்டும் ஒற்றை தலைமை விவகாரம் விசுவரூபம் எடுத்தபோது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து பலர் விலகி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைந்தபோதும் அந்த அணியை விட்டு வெளியேறாமல் இருப்பவர்களில் வைத்திலிங்கம் முக்கியமானவர்.

    தஞ்சை மண்டலத்தில் செல்வாக்குடன் இருக்கும் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். எடப்பாடி பழனிசாமி இல்லாத ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் வைத்திலிங்கம் அதிருப்தியுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் டி.டி.வி. தினகரனை, ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார். அப்போது அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரன், ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்றிருந்தனர்.

    அந்த குழுவில் வைத்திலிங்கம் இடம்பெறவில்லை. அப்போதே ஏதோ கருத்து வேறுபாடு இருக்கிறது என்று அரசல்புரசலாக தகவல்கள் வெளியானது. ஆனால் தனக்கு தெரிந்து தான் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை சந்திக்க சென்றார் எனவும், தான் புறக்கணிக்கப்படவில்லை என்றும் வைத்திலிங்கம் விளக்கம் அளித்தார். ஆனால் உண்மையில் அவர் அதிருப்தியுடன் இருப்பதாகவே அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். அதற்கு முக்கியமான சில காரணங்களையும் அவர்கள் தெரிவித்தனர். திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் மாநாடு நடத்தியபோது அந்த பொறுப்பை வைத்திலிங்கத்திடம் ஒப்படைத்திருந்தார்.

    தஞ்சை மண்டலத்தில் தனி செல்வாக்குடன் இருப்பதால் அவரால் தான் மாநாட்டை சிறப்பாக நடத்த முடியும் என்பதற்காகத்தான் அந்த பொறுப்பை அவரிடம் வழங்கி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். எதிர்பார்த்தது போல் பணத்தை தண்ணீர்போல் செலவு செய்து மாநாட்டையும் சிறப்பாக நடத்தி முடித்தார் வைத்திலிங்கம்.

    பின்னர் மாநாட்டின் செலவுகள் தொடர்பான கணக்கை வைத்திலிங்கம் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்திருக்கிறார். அப்போது பணத்தை பார்த்துக்கொள்ளலாம் என்பதோடு சில நிகழ்வுகளையும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் நினைவுபடுத்தியதாக கூறப்படுகிறது. இது வைத்திலிங்கத்துக்கு பிடிக்காததால் உடனடியாக அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கத்தை சமாதானப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் வைத்திலிங்கம் சமாதானம் அடையவில்லை என்றே கூறப்படுகிறது.

    மேலும் ஓ.பன்னீர்செல்வம் தனியாக சென்று டி.டி.வி.தினகரனுடன் கைகோர்த்து இருப்பதால் இனி ஓ.பன்னீர்செல்வத்தின் கை ஓங்கப்போவதில்லை. டி.டி.வி.தினகரனுக்கு கட்டுப்பட்டு தான் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவார் என்ற எண்ணமும் வைத்திலிங்கத்திடம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடப்பதாக கூறப்படுகிறது.

    • ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பமே பிரிந்து இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றுப்பட்ட அ.தி.மு.க.வை உருவாக்க வேண்டும் என்பது தான்.
    • அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் தான் 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி மலரும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவளரான ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசி இணைந்து செயல்படுவதாக அறிவித்தார். இந்த சந்திப்பின் போது மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்றிருந்தார்.

    ஆனால் நான், பிரபாகரன், மனோஜ்பாண்டியன் ஆகியோர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் சந்திப்பதால் செல்லவில்லை.

    ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பமே பிரிந்து இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றுப்பட்ட அ.தி.மு.க.வை உருவாக்க வேண்டும் என்பது தான். இதுதான் உண்மையான தொண்டர்களின் எதிர்பார்ப்பாகும். அதற்காக தான் அவர் பாடுபட்டு வருகிறார். மேலும் டி.டி.வி.தினகரனை சந்தித்து இணைந்து செயல்படுவதாக அறிவித்தார். விரைவில் சசிகலாவையும் சந்திக்க உள்ளார்.

    அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் தான் 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி மலரும். அதற்காக தான் ஓ.பி.எஸ் பாடுபட்டு வருகிறார்.

    திருச்சி மாநாட்டை போல் விரைவில் கொங்கு மண்டலத்தில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும். அதில் சசிகலா பங்கேற்க ஓ.பி.எஸ் அழைப்பு விடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்சி கொடி, கட்சியின் பெயர் எல்லாவற்றையும் பயன்படுத்தி வருகிறோம்.
    • ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் அதிமுகவே ஒரிஜினல் அதிமுக.

    திருச்சி:

    ஓபிஎஸ் அணி நடத்தும் திருச்சி மாநாட்டில் அ.தி.மு.க. கொடி கட்சி பெயரை பயன்படுத்த அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இன்று காவல்துறையினரிடம் மனு அளித்தனர்.

    இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இன்று மாநாட்டு திடலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புரட்சித் தலைவர் உருவாக்கிய இந்த கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் சொந்தமாகவில்லை.

    சின்னம் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    அதிமுக கொடியில் விருப்பப்பட்டவர்கள் இரட்டை இலை சின்னத்தை வைப்பார்கள் அந்த அடிப்படையில் நாங்களும் வைத்திருக்கின்றோம். சட்ட சிக்கலுக்கு பயந்து வைக்கவில்லை. இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு இன்னமும் நிரந்தரமாக உறுதியாகவில்லை.

    கட்சி கொடி, கட்சியின் பெயர் எல்லாவற்றையும் பயன்படுத்தி வருகிறோம். பயன்படுத்துவோம். வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இல்லை என்று நீதிமன்றம் கூறவில்லை. இது போன்ற பல மாநாடுகளை தமிழ்நாட்டில் நடத்துவோம்.

    ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் அதிமுகவே ஒரிஜினல் அதிமுக. எடப்பாடி பழனிசாமிக்கு தான் இரண்டாவது இடம்.

    இவ்வாறு ஆவேசமாக அவர் கூறினார்.

    • தஞ்சாவூரை எடுத்துக் கொண்டால் 75 சதவீதம் கட்சியினர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தான் இருக்கிறார்கள்.
    • மாநாடு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பது வருகிற 24-ந்தேதி நிரூபணமாகும்.

    திருச்சி:

    அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனிப்பாதையில் பயணித்து வருகிறார். மேலும் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து போராடி வருகிறார்.

    இந்த நிலையில் வரவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தனது பலத்தை காண்பிப்பதற்காக திருச்சியில் மாநிலம் தழுவிய மாநாடு நடத்த திட்டமிட்டார். அதன்படி இந்த மாநாடு வருகிற 24-ந்தேதி திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்த மாநாடு தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள பிரீஸ் ஓட்டலில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்குகிறார். மேலும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், பிரபாகர், பி.எச்.மனோஜ் பாண்டியன், கொள்கை பரப்புச் செயலாளர்கள் மருது அழகுராஜ், புகழேந்தி மற்றும் 87 மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இதுதொடர்பாக வைத்திலிங்கம் இன்று கூறியதாவது:-

    திருச்சியில் வருகிற 24-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கட்சி பொன்விழா, மாநாடு ஆகிய முப்பெரும் விழா பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. அ.தி.மு.க.வின் தலைவரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. அதனை யாராலும் மாற்ற முடியாது என்பதை கட்சியின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கி தந்திருக்கிறார்.

    அந்த தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த மாநாடு நிரூபிக்கும். இதில் மாநிலம் தழுவிய அளவில் 3 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றிருப்பதாக சொல்வதை நாங்கள் நம்பவில்லை. தஞ்சாவூரை எடுத்துக் கொண்டால் 75 சதவீதம் கட்சியினர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தான் இருக்கிறார்கள்.

    இந்த மாநாடு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பது வருகிற 24-ந்தேதி நிரூபணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருச்சியில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட செயலாளர் வெல்லமண்டி என்.நடராஜன், எம்.ஆர். ராஜ்மோகன், ரத்தினவேல் ஆகியோர் செய்துள்ளனர்.

    • பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீட்டு செய்வோம். எங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பு கிடையாது.
    • முழு தீர்ப்பை படித்துப் பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம்.

    தஞ்சாவூர்:

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு கூறியது.

    இது தொடர்பாக இன்று தஞ்சையில் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கூறியது போல சுப்ரீம் கோர்ட் கூறி இருக்கிறது. பொதுக்குழு கூட்டியது செல்லும். ஆனால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கோர்ட் எந்த கருத்தும் கூறவில்லை. மேலும் சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கு எங்களது கருத்துக்கு கட்டுப்படுத்தாது என கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு எங்களுக்கு சாதகமானது தான்.

    நாங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீட்டு செய்வோம். எங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பு கிடையாது. முழு தீர்ப்பை படித்துப் பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்ட படிவங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளனர்.
    • அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி உள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இணைந்து வேட்பாளரை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளர் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் பணியை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்தது.

    அதன்படி வேட்பாளர் தேர்வு தொடர்பான படிவங்கள் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு, கையொப்பம் பெறப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் எடப்பாடி தரப்பினர் அறிவித்த வேட்பாளர் தென்னரசுவை வேட்பாளராக ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டு பதில் அளிக்கும்படி கூறப்பட்டிருந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் கருத்துக்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளனர்.

    இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துடன் இன்று அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வைத்திலிங்கம் கூறியதாவது:-

    வேட்பாளர் தேர்வு தொடர்பாக தமிழ் மகன் உசேன் அனுப்பியு கடிதம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. எந்த நோக்கத்திற்காக உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியதோ அதை அவைத்தலைவர் நிராகரித்துள்ளார். அவரது செயல் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உள்ளது.

    பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், அவர்கள் அறிவித்த வேடப்ளர் தென்னரசு பெயரை மட்டும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று கூறியிருப்பது சரியல்ல. வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும். அப்படியிருக்கையில், முன்கூட்டியே ஒருவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கிறார் என்றால், அவர்கள் முன்கூட்டியே வந்துவிட்டு கருத்து கேட்டிருக்கிறார்கள். இது வேட்பாளர் தேர்வு கிடையாது, பொது வாக்கெடுப்பு முறையாகும்.

    அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி உள்ளார். தேர்தல் முறை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்டவிரோத செயலுக்கு தங்களின் ஆதரவு இருக்காது என்றும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாகவும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை விட்டு தனிக்கட்சி தொடங்கலாம்.
    • ‘மார்க்-3' என்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    தஞ்சாவூர் :

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருபவர்கள் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்கும் வகையில் 'மார்க்-3' என்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த எந்திரம் தொடர்பாக அதன் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளுடன் கருத்து கேட்கும் வகையில் ஆலோசனை கூட்டம் ஒன்றை வருகிற 16-ந் தேதி தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது பெயரில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பி இருந்தார்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்தை அ.தி.மு.க. தலைமை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், ''ஆவணங்கள் படி தமிழக தேர்தல் ஆணையம் முன்னாள் முதல்-அமைச்சர்கள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.

    அந்த கடிதத்தை திருப்பி அனுப்புகிறோம் என்று பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அப்படி திருப்பி அனுப்பினால் அவர்கள்(எடப்பாடி பழனிசாமி) அ.தி.மு.க.வை விட்டு தனிக்கட்சி தொடங்கலாம். அ.தி.மு.க.வில் இருப்பதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்செயலாக இந்த சந்திப்பு நடந்ததாக வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
    • தன்னை காப்பாற்றிக்கொள்ள யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு ஈபிஎஸ் அதிமுகவை அழிக்க பார்க்கிறார்.

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.எல்.ஏ வைத்திலிங்கம் சந்தித்துக் கொண்டனர்.

    அ.தி.மு.க. விவகாரம் பரபரப்பாக பேசப்படும் சூழ்நிலையில் இன்று சசிகலாவும், ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைத்திலிங்கம் சந்தித்து பேசிக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்செயலாக இந்த சந்திப்பு நடந்ததாக வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம் பின்னர் பேசியதாவது:-

    சசிகலாவை எதேச்சையாக சந்தித்தேன். அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. அதிமுகவில் ஒற்றுமை தேவை. அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்

    தன்னை காப்பாற்றிக்கொள்ள யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு ஈபிஎஸ் அதிமுகவை அழிக்க பார்க்கிறார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள வீட்டில் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசினார்.
    • எதிர்கால திட்டங்கள் குறித்து ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசித்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள வீட்டில் நேற்று தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். ஓ.பி.எஸ். சார்பில் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசினார்கள்.

    முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன். ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், திருச்சி ரத்தினவேல் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    நேற்று மட்டும் சுமார் 500 பேர் வரை ஓ.பி.எஸ்.சை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது எதிர்கால திட்டங்கள் குறித்து ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசித்தார்.

    இந்த கூட்டம் முடிந்த பிறகு ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறும்போது, 'பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்றும் அது கூட்டப்படும்போது முறைப்படி தகவலை தெரிவிப்போம் என்றும் தெரிவித்தார்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சட்ட போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

    இந்த நிலையில் தான் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை மொத்தமாக சந்தித்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈபிஎஸ் தரப்பில் சிலருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், வைத்திலிங்கத்திற்கு கொரோனா.
    • வைத்திலிங்கம் அவரது சென்னை இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது திடீரென அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதை கட்டுப்படுத்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் முககவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் பலர் முககவசம் அணியாமல் செல்வதால் கொரோனா எளிதில் பரவி விடுகிறது.

    அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் எடப்பாடி பழனிசாமி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியின் உதவியாளருக்கு 5 நாட்களாக காய்ச்சல் உள்ளது. அவரும் கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.

    தற்போது ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கத்துக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த 23-ந்தேதி வானகரத்தில் நடைபெற்றபோது வெளியூர்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்னைக்கு வந்திருந்தனர்.

    அதேபோல் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்று பெரியகுளம் திரும்பி வந்த போதும் விமான நிலையத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் குவிந்தனர். இதில் பலர் முககவசம் அணியாமல் சென்றதால் அவர்களில் பலருக்கு காய்ச்சல் வந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் இருமல் காரணமாக அவதிப்பட்டார். அவருக்கு 2 நாட்களுக்கு பிறகு இருமல் சரியாகி உள்ளது. இதேபோல் கட்சி நிர்வாகிகள் பலருக்கு காய்ச்சல் இருமல் ஏற்பட்டுள்ளது.

    இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி பலர் போட்டுக் கொண்டதால் காய்ச்சல் வந்தாலும் 5 நாட்களில் சரியாகி விடுவதாக தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டத்துக்கு புறம்பான முறையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
    • புதிய பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது.

    சென்னை:

    பொதுக்குழு கூட்ட மேடையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறி சென்றனர்.

    சட்டத்துக்கு புறம்பான முறையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. புதிய பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது.

    அ.தி.மு.க.வை அழிவுப்பாதைக்கு சதிகாரர்கள் கொண்டு செல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் ஜூலை 11-ந்தேதி கூடும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.

    • அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
    • அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் நீதிபதிகள் விதிக்கவில்லை என துணை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.

    சென்னை:

    அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.

    இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். அதன்படி செயல்படுவோம். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் நீதிபதிகள் விதிக்கவில்லை. இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.

    ×