என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டர் சட்டத்தில் கைது"

    • மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சத்தியமூர்த்தி தலைமறைவானார்.
    • சத்தியமூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(34). கிருஷ்ண கிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு, வீடாக சென்று குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவுக்கு கடத்தி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சின்னகோட்டப்பள்ளி, கிருஷ்ணகிரி ஆவின் பாலம், காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இவரது ஐந்து வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சத்தியமூர்த்தி தலைமறைவானார்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தில் உள்ள அவரது வீட்டில் பதுங்கி இருந்த சத்தியமூர்த்தியை பிடிக்க கடந்த 3&ந் தேதி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர். தப்பிக்க முயன்ற சத்தியமூர்த்தியை போலீசார் மடக்கி பிடித்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

    சத்தியமூர்த்தி மீது ஏற்கனவே பல்வேறு ரேஷன் பொருட்கள் கடத்தல் வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிந்துரைத்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, சத்தியமூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்தியமூர்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கூலி தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.
    • சிறுமியின் பெற்றோர் புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் அஜித்குமார்(21). கூலித்தொழிலாளி.

    இவர் தன்னுடன் பணியாற்றும் மற்றொரு கூலி தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.

    அப்போது அந்த தொழிலாளியின் 8 வயது மகளுடன் அவர் பழகினார். ஒரு கட்டத்தில் சிறுமிக்கு இனிப்பு வாங்கி கொடுத்து ஏமாற்றி அவரை அருகில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதை யாரிடமாவது வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். பயந்து போன சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் அல்லிராணி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி கடந்த 25-ந் தேதி அஜித்குமாரை, கைது செய்து, ஊட்டி கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், அஜித்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., ஆசிஷ் ராவத் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதன் பேரில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவு நகல் ஊட்டி கிளை சிறையில் இருந்த அஜித்குமாரிடம் வழங்கப்பட்டது. பின், அஜித்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • போலீஸ் சூப்பிரண்டு தகவல்
    • கைதிகளின் வங்கிக்கணக்குகள் முடக்கம்

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி ஜீவாநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 39). இவர் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். எனவே இவர் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகள் உள்ளது.

    இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்ததால் போலீசார் கைது செய்தனர். குண்டர்சட்டமும் இவர் மீது பாய்ந்துள்ளது. இந்த நிலையில் இவர் மனம் திருந்தி வாழ முடிவு செய்தார். அதன்படி இனி கஞ்சாவை விற்பனை செய்ய மாட்டேன் என்று பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் பிரமாண பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.

    தான் மனம் திருந்துவதாகவும், தன்னுடைய வாழ்வாதாரத்துக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலையில் நேற்று மனந்திருந்தி வாழ ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 21 குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 198 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 322 கிலோ வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்ற செயல்களில் ஈடுவோர்கள் மனம் திருந்த வேண்டும். ராஜேந்திரன் திருந்தி வாழ ஆசைப்படுகிறார்.

    அவர் டீக்கடை வைக்க உதவிகோரி உள்ளார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துடன் முடிவு செய்து அவர் தொழில் தொடங்க ஏற்பாடு செய்யப்படும். சாராயம், கஞ்சா விற்பனை செய்தல் போன்ற எந்த வகையான குற்றத்தில் ஈடுபட்டாலும் மனம் திருந்தினால் அவர்களுக்கு உதவி செய்யப்படும்.

    வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்தவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என்றார்.

    • முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள ஆண்டிப்பாளையம் கிராமம் அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 46), முன்னாள் ராணுவ வீரர். இவர், கடந்த அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக மாரிமுத்துவின் மனைவி கவிதா, அவரது கள்ளக்காதலன் செட்டித்தாங்கலை சேர்ந்த வேன் டிரைவர் சங்கர், சிறுமூர் பாபு என்கிற திருமாலன், அடையபுலம் பிரகாஷ்ராஜ், அப்பு ஆகிய 5 பேரை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கவிதாவை தவிர மற்ற 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதனையடுத்து சங்கர், பாபு, பிரகாஷ்ராஜ், அப்பு ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

    • தொடர்ந்து வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டதால் நடவடிக்கை
    • வேலூர் ஜெயிலில் அடைப்பு

    வேலூர்:

    வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ். மானியம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் (வயது 25).பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.

    நிர்மல் தொடர்ந்து வழிப்பறி திருட்டில் ஈடுபட்டு வந்தார். அவரை வேலூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார்.

    இதனையடுத்து கலெக்டர் உத்தரவின்படி நிர்மல் குண்டர்சட்டத்தில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • 2 நபர்கள் கத்தி முனையில், 3 பவுன் சங்கிலி, 1 பவுன் மோதிரம், ரொக்கம் ரூ.5,500 ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
    • இதுகுறித்து மதிவாணன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்–பேட்டை அருகே உள்ள சந்தைப்பேட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (வயது 55). இவர் ஜவ்வரிசி (சேகோ) தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    கடந்த 28-ந் தேதி சந்தைப்பேட்டை பழைய வணிக வளாகம் அருகே வந்து கொண்டிருந்தபோது, இவரை வழிமறித்த 2 நபர்கள் கத்தி முனையில், 3 பவுன் சங்கிலி, 1 பவுன் மோதிரம், ரொக்கம் ரூ.5,500 ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து மதிவாணன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மதிவாணனிடம் நகை, பணம் பறித்த சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த அன்சர் மகன் குட்டி என்கிற பக்ருதீன் (48), அம்மாபேட்டை பாரதியார் தெருவை சேர்ந்த கமல்பாஷா மகன் சதாம் உசேன் (32) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் விசாரணையில், கடந்த 27-ந் தேதி சேலம் கந்தம்பட்டி ஆர்.டி.ஓ அலுவலகம் பின்புறம் சேகோ பேக்டரி நடத்தி வரும் ராமசாமி (75) என்பவரை, கத்தி முனையில் மிரட்டி ரூ.10,200 பறித்ததாக பக்ருதீன் மற்றும் சதாம் உசேன் மீது சூரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் ரவுடி பட்டியலில் உள்ளவர்கள் என்பதும், இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் அன்னதானப்பட்டி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட பக்ருதீன் மற்றும் சதாம் உசேன் ஆகியோர் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா (தெற்கு) ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதன்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா பக்ருதீன் மற்றும் சதாம் உசேனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    • திருவண்ணாமலை, போளூர் பகுதியில் தொடர்ந்து குற்ற செயல்கள் அதிகரிப்பு
    • ஜெயிலில் அடைப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த பூமந்தகுளம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் இவரது மனைவி ஜான்சி (வயது 48) இவர் சாராய விற்பனையில் ஈடுபட்ட போதும், திருவண்ணாமலை சமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்த அசோக்குமார் மனைவி மங்கை (42) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்கள் 2 பேரையும் திருவண்ணாமலை டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்த வெங்கடேசன் மகன் பாலாஜி (23) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலை கிழக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். போளூர் நகரம் சின்னப்பா தெருவை சேர்ந்த பாலமுருகன் (32) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு போளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா கொடுக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த குமார் (37) என்பவர் திருவண்ணாமலை கருமாரப்பட்டி ஏரிக்கரை அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட போது திருவண்ணாமலை தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இவர்கள் 5 பேரும் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுவதை தடுக்க திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஜான்சி, மங்கை, பாலாஜி, பாலமுருகன், குமார் ஆகிய 5 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.

    • 50 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை - தோலம்பாளையம் செல்லும் சாலையில் கடந்த நவம்பர் மாதம் என்ஜினீயரான யுவராஜ் என்பவரது வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இவ்வழக்கில் ெநல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற சூட் சுரேஷ் (32) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து கொள்ளை போனவை மீட்கப்பட்டன.பின்னர் கைது செய்யப்பட்டவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் மீது 30 -க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சுரேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ேபாலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுரேஷ் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  

    • ஜெயிலில் அடைப்பு
    • கலெக்டர் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் சாத்கர், கோட்டை காலனியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மகன் சுந்தரராஜ் (வயது 47). அதே பகுதி சேர்ந்தவர் பசுபதி.

    இவர்கள் 2 பேரும் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் பலமுறை எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டதால் போலீசார் இருவரையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

    அவரது பரிந்துரையின் பேரில் 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    • முன்விரதம் காரணமாக இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்
    • சிறையில் அடைத்தனர்

    திருவண்ணாமலை,

    திருவண்ணாமலை ஜன்னத் நகரை சேர்ந்த அப்துல் நிசார் (வயது 26 )அதே பகுதியைச் சேர்ந்தவர் தர்வேஸ்( 27) இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரதம் இருந்து வந்தது.

    இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

    இதில் காயமடைந்த அப்துல்நிசாரரின் தந்தை அப்துல் காதர் (55 )மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சையில் இருந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தர்விஸ் மற்றும் அவரது நண்பரான பல்லவன் நகரை சேர்ந்த தனசேகர் சூர்யா (27),உறவினரான ஜன்னத் நகரை சேர்ந்த முபாரக்(20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார் அதன் பெயரில் தர்பீஸ் உட்பட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பீச்ரோடு சேர்ந்த சிவசங்கர் என்பவரை கைது செய்தனர்
    • சிவசங்கர் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் பட்டகசாலியன்விளையை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீச்ரோடு பெரிய விளையை சேர்ந்த சிவசங்கர் (வயது 39) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவசங்கர் ஜெயில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் மீது ஏற்கனவே நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. இதையடுத்து சிவசங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார்.

    கலெக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் சிவசங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சிவசங்கர் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    • குண்டர் சட்டத்தில் குப்புராஜை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரை செய்தார்.
    • அரூர் போலீசார் குப்புராஜை குண்டர் சட்டத்தில் மீண்டும் கைது செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள எஸ்.பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புராஜ் (வயது 36). இவர் மீது சாராயம் காய்ச்சியது தொடர்பான வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் அண்மையில் சாராயம் காய்ச்சியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது 450 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

    இதையடுத்து குண்டர் சட்டத்தில் குப்புராஜை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரை செய்தார்.

    இந்த பரிந்துரையை ஏற்று குண்டர் சட்டத்தின் கீழ் குப்புராஜை கைது செய்ய கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இதையடுத்து அரூர் போலீசார் குப்புராஜை குண்டர் சட்டத்தில் மீண்டும் கைது செய்தனர்.

    ×