search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேர்காணல்"

    • ஓய்வூதியதாரர்களுக்கான நேர்காணல் சேலம் மாவட்ட கருவூல அலகில் கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • வருகின்ற 15-ந் தேதிக்குள் நேர்காணல் பணியை விரைந்து முடித்துவிட வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கருவூல அலுவலர் யோகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் அறிவிப்பாணைப்படி, 2022-ம் ஆண்டிற்கான ஓய்வூதி யதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான நேர்காணல் சேலம் மாவட்ட கருவூல அலகில் கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது 2 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் நேர்காணலில் 65 சதவீத ஓய்வூதியதாரர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.மீதமுள்ள ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் வருகின்ற 15-ந் தேதிக்குள் நேர்காணல் பணியை விரைந்து முடித்துவிட வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு நேர்காணல் முடிக்காத ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் நவம்பர் மாதம் முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.எனவே சேலம் மாவட்ட கருவூல அலகில் (மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில்) ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் நேர்காணல் பணியை விரைந்து முடித்திட வேண்டும். இதன்மூலம் ஓய்வூதியம் நிறுத்தப்படுதல் போன்ற அசவுகரியங்களை தவிர்க்குமாறும், நேர்காணல் பணியை முடித்திட ஒத்துழைக்கு மாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார். 

    • பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிட்டில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கினார்.
    • தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு ரூ. 22 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் இடுபொருட்கள் வழங்கினார்.

    திருத்துறைப்பூண்டி :

    திருத்துறைப்பூண்டி தாலுகா பாமினி ஊராட்சி, அத்திமடை கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாமில் 162 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 87 ஆயிரத்து 10 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். இதற்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இம்முகாமில் பாமினி, தேசிங்குராஜபுரம், கொக்கலாடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுமக்கள் துறைகளின் நலதிட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெறுவதற்கு இம்முகாம் மிகவும் உறுதுணையாக இருக்கும். இந்த மக்கள் நேர்காணல் முகாமில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிட்டில்; வீடு கட்டுவதற்கான ஆணையும்; வருவாய்துறையின் சார்பில் 13 நபர்களுக்கு உட்பிரிவு பட்டாவும், 11 நபர்களுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையும், 19 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 84 நபர்களுக்கு ரூ.84 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 11 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாவும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் பேட்டரி தெளிப்பானும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 05 நபர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் இடுபொருட்களும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.29 ஆயிரத்து 250 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரமும் என மொத்தம் 162 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 87 ஆயிரத்து 10 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சித்ரா, தாசில்தார் அலெக்ஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடையும் வகையில் கருவூல பணியாளர்கள் மூலம் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ஓய்வூதியர்களுக்கு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நேர்காணல் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு நடப்பு ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நேர்காணல் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடையும் வகையில் கருவூல பணியாளர்கள் மூலம் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்ட கருவூலம்: ராயபுரத்தில் உள்ள ஜெய்வாபாய் பள்ளியில் ஜூலை 1, 12,21 மற்றும் ஆகஸ்டு 1,11,24 தேதிகள். தேவாங்கபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஜூலை 4, 13, 22, ஆகஸ்டு 2,12, 25 தேதிகள். அனுப்பர்பாளையம் நடுநிலைப்பள்ளியில், ஜூலை 5, 14, 25, ஆகஸ்டு 3,16, 26. கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமியம்மாள் பள்ளியில்ஜூலை 6,15,26, ஆகஸ்டு 4,17, 29 தேதிகள்.

    மண்ணரை மனவளக்கலை மன்றத்தில் ஜூலை 7,18, 27, ஆகஸ்டு 5,18, 30. பெரிச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஜூலை 8, 19,29, ஆகஸ்டு 8,22,மங்கலம் ரோடு கருவம்பாளையம் அரசு நடுநிலைப்பளியில் ஜூலை 11,20,29, ஆகஸ்டு 10,23ந் தேதிகள்.

    அவிநாசியில் உள்ள அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பு அலுவலகத்தில்ஜூலை 1,12, 21, ஆகஸ்டு 1,11,24ந் தேதிகள். ஓய்வூதிய ஆசிரியர் கூட்டமைப்பு அலுவலகத்தில் ஜூலை 4,13,22, ஆகஸ்டு 2,12,25 தேதிகள்.அன்னூரில் உள்ள அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பு அலுவலகத்தில் ஜூலை 7, 18ந் தேதிகள். சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 8, 19, கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 14, 27, குன்னத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஜூலை 15, 28ந்தேதிகளில் முகாம் நடக்கிறது.

    பல்லடம் சார் நிலை கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு, ஜூலை 1,4,5,6,8,12,14,18,20,22,25,27,29 தேதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஜூலை 7,15,26,28 தேதிகளில் பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், அரசு மேல்நிலைப்பள்ளியில்ஜூலை 11,19 தேதிகளில் நடக்கிறது. சுல்தான்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் ஜூலை 13,21 தேதிகளில் நடைபெறும்.

    திருப்பூர் சார்நிலை கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு திருப்பூர் குமரன் வணிக வளாகம் அருகில் ஜூலை 1 முதல் 7 மற்றும் 11,12 தேதிகள், நஞ்சப்பா பள்ளியில் ஆகஸ்டு 1 முதல் 5-ந் தேதி, கணக்கம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆகஸ்டு 10 முதல் 12ந்தேதி,

    சூலூரில் செப்டம்பர் 1,2 தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை முகாம் நடைபெறும். நேர்காணலுக்கு வரும்போது, ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு, மொபைல் உள்ளிட்டவற்றை உடன் எடுத்துவரவேண்டும். முகாமில் பங்கேற்போர், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றவேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    • அரசு இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து நேர்காணல் செய்யலாம்.
    • www.tngov.in/karuvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    ஜீவன் பிரமான் இணையதள மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பெற இந்திய தபால்துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். அரசு இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து நேர்காணல் செய்யலாம். ஓய்வூதியர் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்ய ஆண்டு நேர்காணல் செய்யலாம். கருவூலமுகாம் இலவச சேவையை பயன்படுத்தி இணையதள மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

    மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள், ஆதார் எண், பி.பி.ஓ.எண், வங்கி கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் படிவத்தை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் வாழ்நாள் சான்றை www.tngov.in/karuvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    ஓய்வூதிய வங்கி கணக்கு உள்ள வங்கி கிளையின் மேலாளர் அல்லது அரசிதழில் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் அல்லது தாசில்தார், துணை தாசில்தார் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் சம்பந்தப்பட்ட கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணலில் பங்கேற்கலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×