என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 235654"
- மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.
- 100 நாள் வேலை திட்டத்தில் 7 வாரங்களாக பயனாளிகளுக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை.
பல்லடம் :
பல்லடம் அருகே பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வக்கீல் எஸ்.குமார் தலைமையில் துணைத்தலைவர் அபிராமி அசோகன் முன்னிலையில் கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார். இந்த கூட்டத்தில் கவுன்சிலர் லோகுபிரசாத் (திமுக) பேசுகையில்: கள்ளகிணறு கருப்பராயன் கோயில் முதல் லட்சுமி நகர் வரை தார் சாலை அமைத்தல் பணி முடிந்து அதனை தொடர்ச்சியாக உள்ள மண் சாலை வழியாக, ஒரு பாலம் அமைத்து கொடுத்து மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.
ஜோதி பாசு(இ.கம்யூ) : கடகம்திருடியபாளையத்திலிருந்து டி. ஆண்டிபாளையம் வரையிலும், வேலம்பட்டியில் இருந்து மசநல்லாம் பாளையம் வரையிலும் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் 7 வாரங்களாக பயனாளிகளுக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை. இதில் மொத்தம் 1400 பயனாளிகளில் 400 பயனாளிகளின் ஆதார் கார்டு இணைப்பு ஆகவில்லை என வேலைக்கு அனுமதிக்காத நிலை உள்ளது. இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும். டி. ஆண்டிபாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடைக்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக செய்து தர வேண்டும்.
சுப்பிரமணி(தி.மு.க) : பொல்லிக்காளிபாளையம் செல்லும் பள்ளி மாணவர்களின் வசதிக்காக நல்ல காளிபாளையம் வழியாக பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். .ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார் பேசுகையில்: பொங்கலூர் ஒன்றியத்தில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எடுத்த முயற்சியால் ஒன்றிய பகுதியில் அரசால் நிர்ணயக்கப்பட்ட அளவில் 75 சதம் குடிநீர் விநியோகம் சீரான முறையில் நடைபெற்று வருகிறது. அதற்காக குடிநீர் வடிகால் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 15வது நிதிக்குழு மானியம் நிதியில் அனைத்து ஒன்றிய குழு வார்டு பகுதிகளிலும் 7 பணிகள் தேர்வு செய்யப்பட்டு கிராமப்புற அடிப்படை மேம்பாட்டு வேலைகள் நடைபெறவுள்ளது. முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 19.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பணிகள் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்ட முடிவில் வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சி) மீனாட்சி நன்றி கூறினார்.
- வருவாய் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.3 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
- ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இட பற்றாக்குறை உள்ளதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.3 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ள ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் புதிய கட்டட பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தலைமை வகித்து புதிய அலுவலகம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் லட்சுமணன், ஒன்றிய குழு துணை தலைவர் அபிராமி அசோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார்.இந்த விழாவில்,ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நான்கு பள்ளிகளுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
- 806 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருந்தொழுவு, கொடுவாய், கேத்தனூர் மற்றும் பொ.வெ.க அரசு உதவி பெறும் பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வாசுகி வரவேற்றார். திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார், துணைத் தலைவர் அபிராமி அசோகன், கேத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ஹரி கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் மு.பெ.சாமிநாதன், மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். விழாவின்போது மொத்தம் 806 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், பிரியா புருஷோத்தமன் ,லோகு பிரசாந்த் மற்றும் உகாயனூர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஜி.பி.எப் கடன் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ள அனைவருக்கும் உடனே கடன் வழங்க வேண்டும்.
- சிறப்பு ஊக்கத்தொகை நிலுவையை உடனே வழங்க வேண்டும்.
பல்லடம் :
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொங்கலூர் ஒன்றியத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விஜயலட்சுமி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
போராட்டத்தின் போது ஜி. பி. எப் கடன் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ள அனைவருக்கும் உடனே கடன் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் பணி முடித்துள்ள அனைவருக்கும் சிறப்பு ஊக்கத்தொகை நிலுவையை உடனே வழங்க வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டக் காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூடியிருந்தவர்கள் கோஷமிட்டனர். மேலும் அங்கேயே சமையல் செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்தின் போது மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட இணை செயலாளர் ஜெயந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பாக்கியம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மெர்சி, சுதா, ராஜேஸ்வரி உள்பட நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்கள். மதியம் தொடங்கிய இந்த போராட்டம் கோரிக்கை நிறைவேறும் வரை இங்கேயே காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு ) சிவ சண்முகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஆகஸ்ட் மாதம் 4 ந்தேதி மற்றும் 20ந்தேதிகளில் இரண்டு தவணைகளில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து இரவு 7 மணி அளவில் போராட்டம் கைவிடப்பட்டது.
- திருப்பூர்,கோவை,மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது.
- ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் பாசன சபை சார்பில் பொள்ளாச்சியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
பல்லடம் :
விவசாயிகள் துவக்கிய ஆழியாறு அணை பாதுகாப்பு இயக்கம் துவக்கினர். இது குறித்து பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வட்டார விவசாயிகள் கூறியதாவது:-பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர்,கோவை,மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது.
இதுபோல் இந்தத் திட்டத்தில் பாசனத்துக்கும் குடிநீருக்கும் அதிக அளவு தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் சூழ்நிலையில் ஆழியாற்றில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வது என சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்திற்கு 930 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் பாசன சபை சார்பில் பொள்ளாச்சியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட தயாராகினர்.அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பேச்சுவார்த்தை நடத்தியும் அரசாணை ரத்து செய்யப்படவில்லை. இது பாசன விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து .விவசாயிகள் கூறுகையில்,ஆ ழியாறு அணை பாதுகாப்பு இயக்கம் துவக்கி உள்ளோம்.
அதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். நாளை உடுமலையில் இது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது, அதில் போராட்டத்தை தீவிரப்படுத்த ஆலோசனைகள் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
- பல்லடம் மின்சார வாரிய இயக்குதல் மற்றும் பேணுதல்
பொங்கலூர் :
பொங்கலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொங்கலூர், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு அவினாசிபாளையம், வடக்கு அவினாசிபாளையம் ஒரு பகுதி, உகாயனூர், என்.என். புதூர், காங்கயம்பாளையம், ஓலப்பாளையம் மற்றும் எல்லப்பாளையம் புதூர்பகுதியில் மின்தடை ஏற்படும்.
இவ்வாறு பல்லடம் மின்சார வாரிய இயக்குதல் மற்றும் பேணுதல் செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்