search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலாய் லாமா"

    • தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதிபர் லாய் எச்சரித்தார்.
    • தைவானின் புதிய அதிபர் லாய் சிங் டேவுக்கு தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தைபே:

    தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் சிங் டே சமீபத்தில் பதவியேற்றார். தைபே நகரத்தில் உள்ள அதிபர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

    தைவான் நாட்டை சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. சமீபகாலமாக சீனாவிடம் இருந்து தைவானுக்கு ராணுவ அழுத்தம் அதிகரித்து வருகிறது.

    இந்த சூழலில் தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்றார். அவரை ஒரு பிரிவினைவாதி என சீனா விமர்சித்துள்ளது.

    இதற்கிடையே, பதவியேற்பு விழாவின்போது பேசிய வில்லியம் லாய், தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்திக் கொள்ளவேண்டும். தைவானின் ஜனநாயகத்தை சீனா ஏற்றுக்கொள்ள வேண்டும். சீனாவின் அச்சுறுத்தலைக் கண்டு தைவான் பின்வாங்காது. தைவானுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், தைவானின் புதிய அதிபர் லாய் சிங் டேவுக்கு தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தலாய் லாமா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தைவானில் ஜனநாயகம் எவ்வளவு உறுதியாக வேரூன்றியுள்ளது என்பதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. தைவான் மக்கள் ஒரு செழிப்பான, வலுவான ஜனநாயகத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், பெரும் செழுமையையும் அடைந்துள்ளனர், அதே நேரத்தில் அவர்களின் வளமான கலாசார பாரம்பரியங்களையும் பாதுகாத்துள்ளனர். தைவான் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் உள்ள சவால்களை சந்திப்பதில் நீங்கள் ஒவ்வொரு வெற்றியையும் பெற விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    • இமாச்சல் பிரதேசத்தில் திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுடன் சந்திப்பு.
    • பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளர் கங்கனா ரனாவத்.

    பாராளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவரது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், கங்கனா ரனாவத் இன்று திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை தர்மஷாலாவில் சந்தித்தார்.

    இதுகுறித்து கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

    அதில், " இன்று நான் தர்மசாலாவில் தலாய் லாமாவை சந்தித்தேன். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும்.

    அவர் இமாச்சல பிரதேசத்தில் இருப்பதை ரசிப்பதாகவும், பாரதத்தை முற்றிலும் நேசிக்கிறேன் என்றும் அவரது புனிதர் கூறினார்.

    அத்தகைய பாக்கியம்.. அத்தகைய மரியாதை.." என்றார்.

    • தலாய் லாமாவை அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் வரவேற்றார்.
    • பாரம்பரிய புத்த சடங்குடகளுடன் பெரும் வரவேற்பு அளித்தனர்.

    திபெத்திய ஆன்மிகத் தலைவர் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, 13 வருட இடைவெளிக்குப் பிறகு மூன்று நாள் பயணமாக இன்று காலை சிக்கிம் வந்தார்.

    இவர், மூன்று நாள் பயணத்தில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் தங்கியிருக்கும் போது "போதிசத்துவர்களின் முப்பத்தி ஏழு நடைமுறைகள்" பற்றிய போதனைகளை வழங்குகிறார்.

    கிழக்கு சிக்கிமில் உள்ள லிபிங் ராணுவ ஹெலிபேடில் இன்று காலை 10.30 மணியளவில் தரையிறங்கிய தலாய் லாமாவை அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் வரவேற்றார்.

    அவருக்கு மாநிலத்தின் பல்வேறு மடங்களின் துறவிகள் 'ஷெர்பாங்' எனப்படும் நடனம் மற்றும் பிரார்த்தனையின் பாரம்பரிய புத்த சடங்குடகளுடன் பெரும் வரவேற்பு அளித்தனர்.

    இதைதொடர்ந்து, தலாய் லாமாவிடம் ஆசி பெற பல்ஜோர் ஸ்டேடியத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 40,000 பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று காங்டாக் எஸ்பி டென்சிங் லோடன் லெப்சா தெரிவித்தார்.

    தலாய் லாமா கடந்த 2010ஆம் ஆண்டு சிக்கிம் சென்றிருந்தார். அதன் பிறகு, கடந்த அக்டோபரில் சிக்கிம் செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், பெரும் வெள்ளம் காரணமாக தலாய் லாமாவின் சிக்கிம் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
    • தரம்சாலாவில் நடக்கவுள்ள 27வது லீக் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இமாசல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் உலக கோப்பை தொடரின் 27வது லீக் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

    இதற்கிடையே, நியூசிலாந்து அணியினர் இன்று காலை தரம்சாலா சென்றடைந்தனர்.

    இந்நிலையில், தரம்சாலாவில் தங்கியுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இன்று தங்களது குடும்பத்தினருடன் சென்று புத்தமத துறவியான தலாய் லாமாவை சந்தித்தனர். அவரிடம் ஆசி பெற்றனர்.

    இந்த போட்டோவை தலாய் லாமா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    • தலாய்லாமாவுக்கு கடந்த 1959-ம் ஆண்டு மகசேசே விருது அறிவிக்கப்பட்டது.
    • இந்த விருது ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    தர்மசாலா :

    திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவுக்கு கடந்த 1959-ம் ஆண்டு மகசேசே விருது அறிவிக்கப்பட்டது. திபெத் மக்களின் வாழ்க்கை மற்றும் கலாசாரத்தின் உத்வேகமான புனித மதத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டது.

    இவர் அப்போது திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து இருந்தார். இதனால் அப்போது இந்த விருதை அவரால் நேரில் பெற முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து 64 ஆண்டுகளுக்குப்பிறகு நேற்று இந்த விருது அவரிடம் நேரில் வழங்கப்பட்டது. இதற்காக மகசேசே விருது அறக்கட்டளை தலைவர் சுசன்னா, அறங்காவலர் எமிலி அப்ரேரா ஆகியோர் தர்மசாலாவில் உள்ள தலாய்லாமாவின் வீட்டுக்கு நேரில் சென்று இந்த விருதை வழங்கினர்.

    தலாய்லாமா அமைதிக்கான நோபல் பரிசு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகள் பெற்றிருந்தாலும், இந்த மகசேசே விருதுதான் அவருக்கு கிடைத்த முதல் சர்வதேச விருது என தலாய்லாமாவின் அலுவலகம் கூறியுள்ளது.

    பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே பெயரில் வழங்கப்படும் இந்த விருது, ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • இந்த உலகம் வேட்டையாடுபவர்களால் நிரம்பி உள்ளது.
    • வேட்டையாடுபவர்கள் நம் அண்டை வீட்டாராக இருக்கலாம், பள்ளி ஆசிரியராக இருக்கலாம்...

    திபெத்திய புத்தமத தலைவரான தலாய் லாமா ஒரு சிறுவனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த வீடியோ குறித்து சர்வதேச ராப் இசை பாடகி கார்டி பி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்த உலகம் வேட்டையாடுபவர்களால் நிரம்பி உள்ளது. அவர்கள் அப்பாவிகளை வேட்டையாடுகிறார்கள்.

    அதிகம் அறியாதவர்கள் நம் குழந்தைகள். வேட்டையாடுபவர்கள் நம் அண்டை வீட்டாராக இருக்கலாம், பள்ளி ஆசிரியராக இருக்கலாம்... பணம், அதிகாரம் மற்றும் தேவாலயங்களில் இருப்பவர்களாக கூட இருக்கலாம். உங்கள் குழந்தைகளுடன் தொடர்ந்து பேசுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அவரது இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரவேற்பையும் பெற்றுள்ளது.

    • அவரது பயண தேதி இன்னும் முடிவாகவில்லை.
    • சீனாவிடம் இருந்து திபெத்தை பிரிக்க முயற்சிக்கிறார்.

    கொழும்பு :

    இலங்கையை சேர்ந்த புத்தமத துறவிகள் சிலர் கடந்த வாரம் இந்தியாவில் திபெத் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை சந்தித்தனர். அவரை இலங்கைக்கு வருமாறு கேட்டுக்கொண்டனர். அவர் ஒப்புக்கொண்ட போதிலும், அவரது பயண தேதி இன்னும் முடிவாகவில்லை.

    இந்தநிலையில், அவரது இலங்கை பயணத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் உள்ள சீன தூதரகத்தின் உயர் அதிகாரி ஹு வெய், நேற்று கண்டியில் உள்ள செல்வாக்குமிக்க புத்தமத குருமார்களை சந்தித்தார்.

    அவர்களிடம் ஹு வெய் கூறியதாவது:-

    தலாய்லாமாவை எந்த நாடும் வரவேற்பதை சீன அரசும், சீன மக்களும், திபெத் மக்களும் கடுமையாக எதிர்க்கின்றனர். ஏனென்றால், அவர் கூறிக்கொள்வது போல் அவர் எளிமையான துறவி அல்ல. அவர் நிலபிரபுத்துவ அடிமைத்தனத்தின் தலைவர்.

    ஆன்மிக தலைவர் என்ற பெயரில் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்து, சீனாவுக்கு எதிரான பிரிவினை செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சீனாவிடம் இருந்து திபெத்தை பிரிக்க முயற்சிக்கிறார்.

    எனவே, இப்பிரச்சினையில் சீனா-இலங்கை இருதரப்பு உறவை பாதுகாக்கும் வகையில் இலங்கை செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
    • தலாய்லாமா கடந்த மாதம் 15-ந்தேதி முதல் லடாக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    லே :

    சிறந்த பிரபலங்களுக்கு லடாக்கின் தன்னாட்சி மலைப்பிராந்திய மேம்பாட்டு கவுன்சில் சார்பில் உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த அமைப்பின் 6-வது விருது திபெத் புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு நேற்று வழங்கப்பட்டது.

    மனிதாபிமான செயல்கள் குறிப்பாக லடாக் யூனியன் பிரதேசத்தில் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த அவர் மேற்கொண்டு வரும் சிறப்பான பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.

    லடாக் மற்றும் திபெத் ஆகிய பிரதேசங்கள் மத மற்றும் கலாசார ஒற்றுமைகளுடன் வலிமை மிக்க சிந்து நதியால் இணைக்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்பின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். தலாய்லாமா கடந்த மாதம் 15-ந்தேதி முதல் லடாக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • 4 ஆண்டுகளுக்கு பின் லடாக் சென்ற தலாய் லாமாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பயனற்றது என தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

    ஸ்ரீநகர்:

    திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    தலாய் லாமா நேற்று மதியம் லே விமான நிலையத்தை வந்தடைந்தார். 4 ஆண்டுக்கு பின் லடாக் சென்ற தலாய் லாமாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா தங்கள் எல்லை பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தலாய் லாமா பேசுகையில், இந்தியாவும் சீனாவும் போட்டி மற்றும் அண்டை நாடுகள். இரு நாடுகளும் விரைவில் பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழிகளில் எல்லை பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பயனற்றது என குறிப்பிட்டார்.

    இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ராணுவ கமாண்டர்கள் அளவிலான உயர்மட்ட 16-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இந்த பயணத்தை அவர் மேற்கொண்டதை சீனாவுக்கு ஓர் எச்சரிக்கை என பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் நரேந்திர மோடி தலாய் லாமாவை தொடர்புக்கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
    • உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் ஆன்மீகத் தலைவர்களில் ஒருவர் தலாய் லாமா.

    திபெத்தியர்களின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவின் 87வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தலாய் லாமாவை தொடர்புக்கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    திபெத்தியர்களின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவின் 87வது பிறந்தநாள் முன்னிட்டு முன்னதாக அவரைத் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தேன். அவரது நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான தலாய் லாமா, 1959 ஆம் ஆண்டு சீனாவைவிட்டு வெளியேறி இந்தியாவில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அசாமில் பெய்த கனமழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
    • அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் 30க்கு மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் மாநிலத்துக்கு நிதியுதவி அளிப்பதாக திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வாவுக்கு தலாய் லாமா எழுதியுள்ள கடிதத்தில், அசாமில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்

    ×