search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெக்னீசியன்"

    • டி.பி.எச்., திட்டத்தில் 180 டாக்டர்கள் பணிபுரிகின்றனர், 40 லேப் டெக்னீஷியன்கள் மட்டுமே உள்ளனர்.
    • காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள லேப் டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு லேப் டெக்னீசியன் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பொது சுகாதாரத்துறை சார்ந்த லேப் டெக்னீஷியன்களை உறுப்பினர்களாக கொண்ட, தமிழ்நாடு லேப் டெக்னீசியன் ஒன்றியக்குழுவின், கலந்தாய்வு கூட்டம் அவிநாசியில் நடந்தது.

    ஒன்றிய தலைவர் கார்த்திகேய வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் மோகன்ராஜ், மாநில மகளிரணி தலைவர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் விஜயலட்சுமி, துணைச் செயலாளர் கார்த்திகா, ஒருங்கிணைப்பாளர் மங்களாதேவி முன்னிலை வகித்தனர்.திருப்பூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்ந்த கணக்கெடுப்பு படி மாவட்டத்தின் மக்கள் தொகை 26.80 லட்சம் பேர். மாவட்டத்தில் மொத்தம், 13 வட்டார மருத்துவமனைகள், அதற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என மொத்தம் 67 மையங்கள் உள்ளன.இதில் டி.பி.எச்., திட்டத்தில் 180 டாக்டர்கள் பணிபுரிகின்றனர். ஆனால் 40 லேப் டெக்னீஷியன்கள் மட்டுமே உள்ளனர்.

    பாதிக்கும் அதிகமாக காலிப்பணியிடம் இருப்பதால், பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது.இதனால் வேலைப்பளு அதிகரிக்கிறது. எனவே காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட செயலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

    ×