என் மலர்
நீங்கள் தேடியது "கலந்தாய்வு கூட்டம்"
- வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
- மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை
தமிழக அரசின் கூடுதல் ஆணையர் (நில சீர்திருத்த ஆணையகம்) சாந்தா வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளராக மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2023 பணிகள் தொடர்பாக, மாவட்டத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்களாக உள்ள சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாக உள்ள வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், தேர்தல் தனித்துணை வட்டாட்சியர்கள் மற்றும் இதர வருவாய் அலுவர்கள் ஆகியோர்களுடன் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.
இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாந்தா, வாக்காளர் சரிபார்ப்பு பட்டியலை ஏற்பளிப்பு செய்து அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), தனி வட்டாட்சியர் (தேர்தல்) மாணிக்கவாசகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
- ரூ.10 லட்சம் மற்றும் விருதுகள் அறிவிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கிராம ஊராட்சி திட்டங்கள் மற்றும் நிர்வாகம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு பணிகள் குறித்து அவர் விளக்கமாக பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்:-
கிராம ஊராட்சிகளுக்கு ஊராட்சி மன்றத் தலை வர்கள் கட்டுப்பாட்டில் தான் பணிகள் ஒதுக்கப்படுகிறது. எனவே ஊராட்சி பணிகளை முனைப்புடன் ஊராட்சி மன்றத் தலைவர்கள் திறம்பட செய்து நிறைவேற்ற வேண்டும்.
நீடித்த மற்றும் நிலையான பல்வேறு வளர்ச்சி இலக்குகளை எட்டிவிடும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போது ரூ.10 லட்சம் மற்றும் விருதுகள் வழங்கப்படுகிறது.
இதனை மாவட்ட மற்றும் மாநில அளவிலான தோ்வு குழுக்கள் பரிசீலனை செய்து அரசுக்கு முன்மொழிவு செய்யும்'' என்றார்.
பங்கேற்பு கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப் சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தற்பொழுது தமிழ்நாடு அரசு கோவிலை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
- கூட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவில் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. கோபுரம் மற்றும் பிரகாரம் மகா மண்டபம் சுற்று சுவர்கள் சிதிலமடைந்துள்ளது.
தற்பொழுது தமிழ்நாடு அரசு கோவிலை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. கோவில் பக்தர்கள் ஆன்மீகப் பெரியவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் அடங்கிய கலந்தாய்வுக் கூட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. செயல் அலுவலர் மல்லிகா தலைமை தாங்கி கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தார். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் அமானுல்லா, சுப்ரமணிய சுவாமி ேகாவில் தர்மகர்த்தா மாதேஸ்வரன் தீபக், விஏஓ மாசிலாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மண் நல மையம் சார்பில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
நெமிலி அருகே கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் வேலூரை தலைமையிடமாக கொண்ட மண் நல மையம் உள்ளது.
இந்த மையத்தின் மூலம் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி மையத்தின் சார்பில் மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் முரளிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கேபிள் டி.வி. சங்கம் தாமோதரன், கீழ்வெங்கடாபுரம் ஊராட்சி மன்றதலைவர் அம்மு தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் இயற்கை விவசாயத்தில் ஏற்படும் பின்னடைவுகளை மேம்படுத்த தேவையான ஆலோசனைகள் வழங்கப் பட்டன. இயற்கை விவசாயம் செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கவேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க குழு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி விக்கப்பட்டது.
கூட்டத்தில் நெமிலி முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேச்சு
- 100 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம்
வாணியம்பாடி:
வாணியம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான காவல்துறை கலந்தாய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அனைத்து இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசுகையில்:-
காவல்துறை சார்பில் விபத்துக்களை குறைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும். விபத்தை குறைப்பதில் முன்மாதிரியாக விளங்கும் திருப்பத்தூர் மாவட்டம் தொடர்ந்து அச்செயலை செய்து பொதுமக்களின் விலை மதிப்பற்ற உயிரை இழக்காமல் பாதுகாக்க வேண்டும் என்றார்.
அதனைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடைபெற்ற அதிரடி வாகன சோதனையில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டியவர்கள், ஒரே வாகனத்தில் 3 பேர் சென்றது.
அதிவேகமாக வாகனம் ஓட்டியது, வாகனங்களை தவறான பாதையில் இயக்கியது உள்பட போக்குவரத்து விதிகளை மீறிய 100 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தும், வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
- 12, 13-ந் தேதிகளில் நடக்கிறது
- கல்லூரி முதல்வர் தகவல்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய தாக தொடங்கப்ப ட்டுள்ளது.
இந்நிலையில் கல்வியாண்டிற்கான இளங்கலை (தமிழ், வணிகவியல்) இளமறிவியல் (புவியியல், தாவரவியல், கணினி அறிவியல்) ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 12-ந்தேதி பி.எஸ்.சி., தாவரவியல், பி.எஸ்.சி. கணினி அறிவியல், பி.எஸ்.சி. புவியியல் ஆகிய பாடபிரிவுகளுக்கும் மறுநாள் 13 -ந் தேதியும் பி.ஏ. தமிழ், பி.காம் வணிகவியல், ஆகிய பாடபிரிவுகளுககு கலந்தாய்வுக்கு மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.
மேலும் கலந்தாய்வு வின் போது மாணவர்கள் கீழ்காணும் சான்றிதழ்களின் அசல் மற்றும் 3 நகல்களை எடுத்து வரவேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவம், மாற்றுச்சான்றிதழ் மற்றும் 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்ட 4, வங்கி பாஸ்புக் நகல் முதல் பக்கம், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ், சேர்க்கை கட்டணம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டு மென நாட்டறம்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
- அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு கிடைத்திடுவதை தொடர்புடைய ஊராட்சி மன்றத் தலைவர்கள் உறுதி செய்திட வேண்டும்
- தெருவிளக்குகளை அவ்வப்போது சரி செய்ய ஊராட்சி மன்றத் தலைவர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஓசூர், தளி, சூளகிரி, கெலமங்கலம் மற்றும் வேப்பனப்பள்ளி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 173 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 333 கிராம ஊராட்சிகளில் 5 வட்டாரத்தில் இருந்து 173 கிராம ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு மாவட்ட அளவிலான இந்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இணைவழி வரி வசூல், பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தமாகவும், தங்களது ஊராட்சியில் தேங்கும் குப்பைகளை நாள்தோறும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்து, பிளாஸ்டிக் பயன்பாட்டினை கட்டுப்படுத்தியும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் பொதுமக்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும் குடிநீர் முறையாக விநியோகம் செய்யவும், தெருவிளக்குகளை அவ்வப்போது சரி செய்ய ஊராட்சி மன்றத் தலைவர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும்.
அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு எவ்விதப் பாகுபாடு இல்லாமல் சமமாகக் கிடைத்திடுவதை தொடர்புடைய ஊராட்சி மன்றத் தலைவர்கள் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குருராஜன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
- பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சுற்றுலா வாகன உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடை பெற்றது.
பரமத்திவேலுார்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சுற்றுலா வாகன உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர் தாலுக்கா பகுதிகளில் சொந்த வாகனங்களை சுற்றுலா வாகனங்களாக இயக்கப்பட்டு வருவதாக நாமக்கல் மாவட்ட கலெக்ட ரிடம் மக்கள் குறை தீர்க்கும் நாளில் சுற்றுலா பேருந்து வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்கங்க ளின் சார்பாக அளிக்கப் பட்ட புகாரினை தொடர்ந்து, பரமத்தி வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வா ளர்கள் சரவணன், உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில், ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா வாகன உரிமை யாளர்கள், ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடை பெற்றது.
இக்கூட்டத்தில் வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் வட்டார போக்குவரத்து அலுவலக களப்பணியா ளர்கள் மூலம் சொந்த வாகனங்களை வாடகை வாகனமாக இயக்கப்படுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், அவ்வாறு வாக னங்கள் இயக்கப்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் தகுதி இழப்பு போன்ற கடுமையான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் நாமக்கல் மாவட்ட சுற்றுலா வாகன உரிமையாளர் சங்க நிர்வா கிகள் மற்றும் உறுப்பினர்க ளிடம் தகுதி சான்று, காப்புச் சான்று, அனுமதிச்சீட்டு, பசுமை வரி, புகைச்சான்று, ஓட்டுனர் உரிமம், ஆகிய அனைத்து ஆவணங்களும் நடப்பில் உள்ளதா என சரி பார்த்து மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு சீட் பெல்ட் மற்றும் சீருடை அணிந்தும் பாதுகாப்பான முறையில் வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
- அரசு போக்குவரத்து கழகத்தின் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துணர்கள் பணியின் போது பயணிகளை எவ்வாறு அணுகி நட்புடன் பழகுவது குறித்து விளக்கப்படடது.
- நீண்ட நாள்களாக பணிக்கு வராமல் இருக்கும் பணியாளர்களை குடும்பத்துடன் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, மீண்டும் பணிக்கு வர ஆலோசனைக்கள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பணியாளர்களுக்கான திறன் மேம்பாடு கூட்டம், கிருஷ்ணகிரியில் உள்ள நகர பணிமனை கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பொன்முடி தலைமை தாங்கினார். பொது மேலாளர் ரவி லட்சுமணன் முன்னிலை வகித்தார்.
அரசு போக்குவரத்து கழகத்தின் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துணர்கள் பணியின் போது பயணிகளை எவ்வாறு அணுகி நட்புடன் பழகுவது, மனச் சுமை இல்லாமல் பணியாற்றுவது எப்படி, நீண்ட நாள்களாக பணிக்கு வராமல் இருக்கும் பணியாளர்களை குடும்பத்துடன் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, மீண்டும் பணிக்கு வர ஆலோசனைக்கள் வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர்கள் ராஜராஜன், கலைவாணன், கோட்ட மேலாளர் தமிழரசன், உதவி மேலாளர் ஹர்ஷ்பாபு மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
- டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.
- இதனையடுத்து வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கத்தில், வாழப்பாடி வட்டார அளவிலான காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
வாழப்பாடி:
மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.
இதனையடுத்து வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கத்தில், வாழப்பாடி வட்டார அளவிலான காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் காய்ச்சல் பரவாமல் தடுக்க கிராமங்கள், ஊராட்சிகளை தூய்மை செய்தல், டெங்கு கொசுக்கள் உருவாகும் காரணிகளை அப்புறப்படுத்துதல், குடிநீர் மற்றும் மேல்நிலைத்தொட்டிகள் பராமரித்தல் மற்றும் குளோரினேசன் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம மக்களுக்கு டெங்கு மற்றும் பிற காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சி மன்ற செயலர்கள், பேளூர் மற்றும் திருமனூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரியில் சமரசம் குறித்த முத்தரப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- கலந்தாய்வு கூட்டத்தில் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசம் மூலம், எளிய முறையில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டன.
கிருஷ்ணகிரி,
சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச மையத்தின் வழிகாட்டுதலின்படி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களைச் சார்ந்த நீதிபதிகள், மத்தியஸ்தர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு, சமரசம் குறித்த முத்தரப்பு கலந்தாய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி தலைமை தாங்கி சமரச மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமரச மையத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் புள்ளி விவரங்கள் குறித்தும் பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற மூத்த பயிற்சியாளர், மத்தியஸ்தர் கீதாராமசேஷன், சமரசம் குறித்த விழிப்புணர்வை வழங்கி, அனைத்து நீதிபதிகளுடன் சமரசம் குறித்து கலந்துரையாடினார். முன்னதாக, மக்கள் நீதிமன்றத் தலைவர் மற்றும் குடும்பநல நீதிமன்ற நீதிபதி நாகராஜன் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில், நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசம் மூலம், எளிய முறையில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டன. முடிவில், மாவட்ட சமரச யைத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெனிபர் நன்றி கூறினார். இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
- பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
கீழக்கரை
கீழக்கரையில் நிலவிவரும் போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்திட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக வெல்பேர் கமிட்டி சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்தால் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையில் போக்கு வரத்து நெரிசல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.
போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் வகையில் ஒரு பக்க பார்க்கிங் விஷயத்தில் காவல்துறை முனைப்பு காட்டுவதோடு நோ பார்க் கிங் ஏரியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் நிறுத்தும் பைக், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கையை ஏற்று கொண்ட போலீசார் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக் கும் வகையில் பிரச்சா ரம் செய்யுமாறு கேட்டு கொண்டனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எடுக்கப் படும் நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
முக்குரோட்டிலிருந்து குயின் டிராவல்ஸ் அலுவல கம் வரை ரோட்டின் இரு பக்கமும் உள்ள ஆக்கிர மிப்புகளை முழுமையாக அகற்றுவதோடு இனி எந்த காலத்திலும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணிக்கப்படு மென்றும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க படுமென்றும் தீர்மானிக்கப் பட்டது.
கூட்டத்தில் போலீஸ் ஆய்வாளர் சரவணன், சுகா தாரத்துறை ஆய்வாளர் பரக்கத்துல்லா, கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி நிர்வாகி கள், நகர்மன்ற உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.