search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடி வட்டார அளவிலானகாய்ச்சல் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்
    X

    வாழப்பாடியில் காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    வாழப்பாடி வட்டார அளவிலானகாய்ச்சல் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

    • டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.
    • இதனையடுத்து வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கத்தில், வாழப்பாடி வட்டார அளவிலான காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    வாழப்பாடி:

    மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.

    இதனையடுத்து வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கத்தில், வாழப்பாடி வட்டார அளவிலான காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் காய்ச்சல் பரவாமல் தடுக்க கிராமங்கள், ஊராட்சிகளை தூய்மை செய்தல், டெங்கு கொசுக்கள் உருவாகும் காரணிகளை அப்புறப்படுத்துதல், குடிநீர் மற்றும் மேல்நிலைத்தொட்டிகள் பராமரித்தல் மற்றும் குளோரினேசன் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம மக்களுக்கு டெங்கு மற்றும் பிற காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சி மன்ற செயலர்கள், பேளூர் மற்றும் திருமனூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×