search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மங்களபுரம்"

    • தஞ்சாவூரிலிருந்து, கடையநல்லூருக்கு வேலை விஷயமாக வந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
    • பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சிலருக்கு கொரோனா தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் கடையநல்லூர், வார்டு 17, 15, 31 உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    மேலும், தஞ்சாவூரிலிருந்து, கடையநல்லூருக்கு வேலை விஷயமாக வந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே போல், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்களபுரம், பாலஅருணாசலபுரம் பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, கடையநல்லூர் நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா , கண்ணன் மற்றும் அதிகாரிகள் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கினர்.

    மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பகுதிகளில் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள நபர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் ஆலோசனை பெறவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தொற்று உள்ள வீடுகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வீட்டில் உள்ளவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

    ×